ஒரு தடவை சார்ஜ் போட்டா 300 கி.மீ அசால்டா ஓட்டலாம்! விலையும் ரொம்ப கம்மி தான்!

கோமகி நிறுவனம் தனது வெனீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1.67 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிதாக என்னென்ன அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

கோமகி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. குறிப்பாக கிராமப் பகுதியில் இந்நிறுவனத்தின் வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் மக்களின் பெற்ற நிறுவனமாக இது இருக்கிறது.

upgraded komaki venice

இந்நிலையில் கோமகி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டு வந்த வெனீஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது அப்டேட் செய்துள்ளது. அதன்படி இந்த ஸ்கூட்டரில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள். கழட்டி மாற்றக்கூடிய டைப்பிலான எந்த காலத்திலும் தீ விபத்து ஏற்படாத வகையிலான ஸ்மார்ட் பேட்டரிகள் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிகள் 5 மணி நேரத்துக்கு உள்ளாகவே முழுமையாக சார்ஜ் ஏற்றி கொள்கிறது. 0 டு 90% வெறும் 4 மணி நேரத்தில் ஏற்றுகிறது. இதற்காக போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியில் தீ பிடித்தாலும் அதிகம் பராவமல் இருக்க இரும்பு கொண்டு தயாரித்துள்ளனர்.

upgraded komaki venice

இந்த புதிய வெனீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஎஃப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் அன்போடு நேவிகேஷன், சவுண்ட் சிஸ்டம், ரைடு செய்யும் போதே கால் செய்யும் வசதி எல்லாம் இருக்கிறது. இந்த அப்டேட் மார்க்கெட்டில் உள்ள மற்ற போட்டி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நிகராக இருக்கிறது.

இது போக இந்த ஸ்கூட்டரில் பளிச்சென இருக்கும் முழு எல்இடி சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் மோட்டாரைப் பொறுத்தவரை 3000 வாட்ஸ் மோட்டார் மற்றும் 50 ஆம்ஸ் கண்ட்ரோலர், ரிவர்ஸ் மோட் மற்றும் மூன்று கியர் மோடு ஆகிய உள்ளன. இதில் ரீஜென் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. எக்கோ, ஸ்போர்ட் மற்றும் டர்போ ஆகிய 3 மோடுகள் உள்ளன.

டிசைனை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சூப்பர் ஸ்டிராங்க் ஸ்டீல் பிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பாதுகாப்பாக வைத்திருக்கும். இந்த ஸ்கூட்டரில் இரண்டு சீட்டுகள், இரண்டு பக்கமும் ஃபுட் ரெஸ்டுகள், சிறப்பான சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது.

இதுபோக இந்த ஸ்கூட்டரில் சிபிஎஸ் டபுள் டிஸ்க் மற்றும் கீ லெஸ் என்ட்ரி ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இது ரைடருக்கு ஒரு முழு அனுபவத்தை அதே நேரம் புதிய அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தால் ஒரு தனி அனுபவத்தை பெறும் வகையில் கோமகி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த அப்டேட்டட் கோமதி வெனீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. வெனீஸ் ஸ்போர்ட் கிளாசிக் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1,03,900 என்ற விலையில் விற்பனையாகிறது. இது முழு சார்ஜில் 75- 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும்.

வெனீஸ் ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் அப்கிரேட் மாடலைப் பொறுத்தவரை ரூ1,49,757 என்ற விலையில் விற்பனை ஆகிறது. இது முழு சார்ஜில் 200 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக வெனீஸ் அல்ட்ரா ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை பட்சமாக 300 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும். இது அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த வாகனம் ரூபாய் 1,67,500 என்ற எக்ஸ் ஷோரும் விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோமகி நிறுவனம் முதலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் டூவிலர் தான் அதிக கவனம் செலுத்தியது தற்போது பயணிகள் செக்மெண்டில் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே மார்க்கெட் சிறப்பாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கிறது. வருங்காலத்தில் விற்பனை எண்ணிக்கையிலும் இந்நிறுவனம் சக்கை போடு போட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 9, 2023, 20:00 [IST]
English summary
Enhanced version of komaki venice electric scooter introduce know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+