எனிக்மாவின் 2ஸ்கூட்டர்கள் அறிமுகம்.. நிறைய பேர் வாங்கணும் என்பதற்காகவே கம்மியான விலையில் களமிறக்கி இருக்காங்க!

உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எனிக்மா (Enigma ). மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனமே தற்போது இரு புது மின்சார இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இரண்டும் ஸ்கூட்டர் ரகமாகும். இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில், குறிப்பாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படும் சூழலில் இரு இ-ஸ்கூட்டர்களையும் ஒரே நேரத்தில் எனிக்மா விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த முயற்சி வரவேற்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Enigma gt 450 pro

ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே இரண்டும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது. ஜிடி 450 ப்ரோ (GT450 Pro) மற்றும் க்ரிங்க் வி1 (Crink V1), இந்த இரு புதுமுக மாடல்களையே எனிக்மா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது.

இதில், ஜிடி 450 ப்ரோ மாடலுக்கு ரூ. 89 ஆயிரமும், க்ரிங்க் வி1 மாடலுக்கு ரூ. 94 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அதிக வேகத்தில் செல்லக் கூடிய வாகனங்களாக எனிக்மா தயார் செய்திருக்கின்றது.

Enigma crink v1

இதுமட்டுமில்லைங்க உயர் தர சேஸிஸ், அலுமினியன் அலாய்கள் மற்றும் ஸ்மார்ட் கனட்ரோல்லர்கள் உள்ளிட்டவற்றையும் இந்த இரு டூ-வீலர்களிலும் எனிக்மான பயன்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து, முழுக்க முழுக்க 'மேக் இன் இந்தியா' (Make-in-India) தயாரிப்பாக இவற்றை தயார் செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இதுதவிர இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஏஐஎஸ் 156 பேஸ்-2 மற்றும் amendment 3 தர சான்று பெற்ற லித்தியன் அடன் பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இளம் வயதினரை கவரும் பொருட்டு இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த வாகனத்தில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

Enigma crink v1 front view

எனிக்மா க்ரிங்க் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சுமார் 210 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க மற்றும் பின் வீலில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. 36 AH 72V வரை திறன் கொண்ட பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த பேட்டரி பேக்கை 10 Amp சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்கள் வரை தேவைப்படும். மேலும், ஓர் முழு சார்ஜில் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே எனிக்மா க்ரிங்க் வி1 இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Enigma gt 450 pro side look

எனிக்மா ஜிடி 450 ப்ரோவின் சிறப்புகள்: இந்த டூ-வீலர் 200 கிலோ வரை மட்டுமே எடை தாங்கும். இதன் எடை மட்டுமே 68 கிலோவாகும் (பேட்டரி இல்லாமல்). மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

40 ஏஎச் எல்பிஎஃப் பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். அதேவேளையில் முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஓலா மற்றும் ஏத்தர் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு போட்டியை ஏற்படுத்தும் விதமாக எனிக்மா நிறுவனம் தன்னுடைய இரு புதிய இ-ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 25, 2023, 15:18 [IST]
English summary
Enigma launches high speed crink v1 and gt450 electric scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X