வண்டில பேப்பர் இல்ல, லைசென்ஸ் இல்லைனு தலை சொரிஞ்சிட்டு நிக்க தேவையில்ல.. போலீஸும் பிடிக்க மாட்டாங்க!

இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன உலகில் ஓர் புதுமுக நிறுவனம் அதன் கால் தடத்தைப் பதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இநூக் மோட்டார்ஸ் (Enook Motors) எனும் நிறுவனமே இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் வருகையை பதிவு செய்திருக்கும் புதிய நிறுவனம் ஆகும்.

தன்னுடைய அதிரடி வருகையை பரைசாற்றும் விதமாக இந்த நிறுவனம் புத்தம் புதிய நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஒரே நேரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஈவி ப்ரோ (EV Pro), இவி மேக்னா (EV Magna), இவி ஸ்மார்ட் (EV Smart) மற்றும் இவி வெர்வ் (EV Verve) ஆகிய மாடல்களையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Enook low speed e scooters

ரூ. 89 ஆயிரம் தொடங்கி ரூ. 99 ஆயிரம் வரையிலான விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இப்போது ஹைதராபாத்தில் இந்த அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. விரைவில் நாடு முழுவுதும் நிறுவனத்தின் விற்பனையாளர்கள் வாயிலாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இநூக் இவி ப்ரோ, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 250 வாட் பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் வாட்டர் ப்ரூஃப் மின் மோட்டார் ஆகும். பிரேக்கிங் அம்சத்தை பொருத்த வரை முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் உயரம் 774 மிமீ ஆகும்.

Enook ev pro

இதன் பே-லோடு 150 கிலோவாகும். மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இ-ஏபிஎஸ், ரீஜெனரேட்டி எனர்ஜி வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த மாடலில் எல்சிடி டிஜிட்டல் திரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 80 கிமீ முதல் 90 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும்.

இதற்காக பராமரிப்பு தேவைப்படா 48V/60V-28Ah பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவி ப்ரோவிற்கு அடுத்தபடியாக இவி மேக்னா இருக்கின்றது. மேலே இவி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்த்த அத்தனை அம்சங்களும் மேக்னாவில் இடம் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதிலும் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் முதல் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

Enook ev magna

மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் மற்ற இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், அதாவது, இவி வெர்வ் மற்றும் இவி ஸ்மார்ட் இந்த இரண்டும் கூட மேலே சிறப்பு வசதிகள் மற்றும் ரேஞ்ஜ் மற்ற முன்னதாக பார்த்தவற்றுடன் ஒத்துப் போகின்றன.

ஆகையால், இநூக் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கும் இந்த நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வடிவத்தில் மட்டுமே மாறுபட்டுக் காணப்படும், மற்றவற்றில் அவை ஒரே மாதிரியானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அதேவேளையில் இந்த நான்கும் குறைந்த வேகத்தில் ஓடும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Enook ev pro front

ஆகையால், இவற்றை பதிவு செய்ய தேவையில்லை. இதேபோல், இவற்றை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை. அதேநேரத்தில், அனைத்து வாகனங்களும் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவையாக இருக்கின்றன. இந்த அழகிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக எல்இடி லைட்டுகள் அனைத்து மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஜிபிஎஸ் டிராக்கிங் கருவி, ரியல் டைம் ரைடு இன்ஃபர்மேஷன் மற்றும் பல அம்சங்கள் இவற்றில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே புதுமுக நிறுவனமான இநூக் இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் அதன் கால் தடத்தை பதித்து இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 13, 2023, 9:40 [IST]
English summary
Enook motors introduces 4 new electric scooters in india here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X