ரூ. 63,650 மட்டுமே.. என்ன இவ்ளோ ஸ்டைலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோ கம்மியா! பிராங்க் எதுவும் பண்ணலையே!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒடைசி (Odysse)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றாக இ2கோ (E2GO) இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (electric scooter) ஆகும். இந்த தேர்விலேயே நிறுவனம் கிரஃபேன் (Graphene) எனும் புதிய தேர்வை ஒடைசி விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இதற்கே யாரும் நம்ப முடியாத அளவிற்கு மிக மிக குறைவான விலையை ஒடைசி நிர்ணயம் செய்து இருக்கின்றது. ரூ. 63,650-யையே அது விலையாக நிர்ணயம் செய்து உள்ளது. உள்நாட்டிலேயே வைத்து தயாரித்த காரணத்தினாலேயே இந்த அளவு மிக குறைவான விலையை அதற்கு நிர்ணயம் செய்ய முடிந்திருப்பதாக கூறப்படுகின்றது.

Odysse unveils graphene variant for e2go

இந்த விலை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்ரோடில், இதைவிட சற்று அதிகமாக இருக்கும். ஒரு சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில் அது விற்பனைக்குக் கிடைக்கும். புதிய ஒடைசி இ2கோ கிரஃபேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ வரை ரேஞ்ஜ் தரும்.

இது மிக சிறந்த ரேஞ்ஜ் திறன் ஆகும். இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லட்சம் ரூபாய்க்கும் இணையான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேநேரத்தில் அவற்றின் ரேஞ்ஜ் திறன் 100 கிமீ அல்லது அதற்கும் குறைவானதாகவே இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே விலையில் மிகக் குறைவாகவும், ரேஞ்ஜ் வழங்குவதில் மிக தாராளமானதாகவும் ஒடைசி இ2கோ கிரஃபேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறங்கி இருக்கின்றது. இந்த வாரம் தொடங்கி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும்.

நேற்று (அக்டோபர் 15), மின்சாதன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஏசர் அதன் முவி 125 4ஜி எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியீடு செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 125 சிசி பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே முவி 125 4ஜி என்கிற பெயரை அதற்கு சூட்டி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 99,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் அறிமுகத்தின் குஷி ஓய்வதற்குள்ளாகவே தற்போது மற்றுமொரு மின்சார வாகனம் அறிமுகமாகி இந்தியர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கின்றது.

அதுவும், யாரும் எதிர்பார்த்திராத மிக மிக குறைவான விலையில் அது விற்பனைக்கு வந்திருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. கம்மி விலையில் ஒடைசி இ20கோவின் புதிய வேரியண்ட் கிரஃபேன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அதில் சிறப்பம்சங்களை வாரி வழங்க தயாரிப்பு நிறுவனம் தவறவில்லை.

சாவியே இல்லாமல் வாகனத்தை இயக்கும் வசதி, யுஎஸ்பி சார்ஜிங், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் என ஏகப்பட்ட அம்சங்களை அது வாரி வழங்கி இருக்கின்றது. இதுதவிர இந்த வாகனத்தை லைசன்ஸ் மற்றும் பதிவெண் இல்லாமல் ஓட்டிக் கொள்ள முடியும்.

ஏன், பதினெட்டு வயது பூர்த்தி அடையாத சிறுவர்களாலும் இந்த வாகனத்தை ஓட்டிக் கொள்ள முடியும். ஏனெனில் இது ஓர் ஸ்லோ ஸ்பீடு, அதாவது, மெதுவாக செல்லும் வாகனம் ஆகும். இந்தியாவில் மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கக் கூடிய வாகனங்களை இயக்க லைசென்ஸ் அல்லது பதிவு சான்று தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேகம் குறைவானதாக இருந்தாலும் இந்த வாகனத்தை இயக்கும்போது தனித்துவமான மற்றும் மிக சிறந்த ரைடிங் அனுபவம் கிடைக்கும் என ஒடைசி அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மூன்று ஆண்டுகள் வாரண்டியை ஒடைசி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவித்து இருக்கின்றது.

மேட் பிளாக் (Matte Black), காம்பேட் ரெட் (Combat Red), ஸ்கார்லெட் கிரீன் (Scarlet Red), டீல் கிரீன் (Teal Green), அசுரே ப்ளூ (Azure Blue) மற்றும் காம்பேட் ப்ளூ (Combat Blue) ஆகிய நிற தேர்வுகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன.

ஒடைசி நிறுவனத்தின்கீழ் வேடர் (VADER), எவோக்யூஸ் (EVOQIS), ஹாவ்க் (HAWK), இ2கோ (E2Go), வி2 (V2) மற்றும் ட்ரோட் (TROT) உள்ளிட்ட மின்சார இருசக்கர வாகன மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், இ2கோ மாடலைச் சிறப்பிக்கும் விதமாக அந்நிறுவனம் புதிய தேர்வான இ2கோ கிரஃபேனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்து வந்த இ2கோ (E2Go), இ2கோ பிளஸ் (E2go+), இ2கோ ப்ரோ (E2go PRO) ஆகியவற்றுடன் இணைந்து இனி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மற்ற தேர்வுகளுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Monday, October 16, 2023, 17:47 [IST]
English summary
Ev maker odysse unveils graphene variant for e2go electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+