பெட்ரோல் பைக் யூசர்களை குறிவைத்து எவ்ட்ரிக் ரைஸ் அறிமுகம்! விலை எவ்ளோ தெரிஞ்சா ஷோரூமுக்கு இப்பவே கிளம்புவீங்க!

இந்திய நிறுவனமான எவ்ட்ரிக் ரைஸ் எனும் புதுமுக மின்சார பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த இ-பைக் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எவ்ட்ரிக் நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 வாயிலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மின்சார பைக்கிற்கு அறிமுகமாக ரூ. 1.6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சதில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

எவ்ட்ரிக் ரைஸ்

இதுவே நிறுவனத்தின் முதல் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக் மாடலாகும். புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் எவ்ட்ரிக் மோட்டார்ஸ், வெறும் எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. தற்போது நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எவ்ட்ரிக் ஆக்ஸில், எவ்ட்ரிக் ரைடு மற்றும் எவ்ட்ரிக் மைட்டி ஆகிய மின்சார ஸ்கூட்டர்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது

இந்த நிலையிலேயே இவற்றின் வரிசையில் நிறுவனம் புதிதாக எவ்ட்ரிக் ரைஸ் மாடலை விற்பனைக்குச் சேர்த்திருக்கின்றது. ஆட்டோ எக்ஸ்போ 2023 வாயிலாகவே இ-பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகளும் தொடங்கியிருக்கின்றது. ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

எவ்ட்ரிக் ரைஸ்

நிறுவனத்திற்கு நாட்டின் 22 மாநிலங்களில் டச் பாயிண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாயிலாகவே நிறுவனம் அதன் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதிலேயே புதிய எவ்ட்ரிக் ரைஸ் இ-பைக்கும் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இதுமட்டுமின்றி இரு இ-ஸ்கூட்டர்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் எவ்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் மேட் இன் இந்தியா தயாரிப்பு ஆகும். ஸ்போர்ட்டி நிறம் மற்றும் சிறப்பம்சங்களில் இந்த எலெக்ட்ரிக் பைக் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. எல்இடி ஹெட்லேம்புகள், டிஆர்எல்களுடனும், ரியர் பகுதியில் பிளிங்கர்களும் வழங்கப்பட்டுள்ளன.

எவ்ட்ரிக் ரைஸ்

இத்துடன், 2000 வாட் பிஎல்டிசி மோட்டார் மற்றும் 70 V / 40 Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வளவு நேரம் செலிவிட்டு அதை சார்ஜ் செய்யும்பட்சத்திலேயே 110 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ வேகம் ஆகும்.

எலெக்ட்ரிக் பைக்கில் 10 ஆம்ப் மைக்ரோ சார்ஜர் ஆட்டோ கட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியை தனியாக கழட்டி செல்ல முடியும். ஆகையால், தேவைப்படும் இடத்திற்கு எடுத்துச் சென்று அதை சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும்.

இத்தகைய சூப்பரான வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கையே எவ்ட்ரிக் நிறுவனம் தற்போது இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பெட்ரோல் இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் கவரும் விதமாகவே இந்த பைக்கை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதை பராமரிப்பது மிக சுலபம் என்றும், பெரியளவில் பராமரிப்பு செலவு ஏற்படாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 15, 2023, 0:03 [IST]
English summary
Evtric rise auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+