இந்த டிசம்பரிலேயே ஒரு பைக்கை வாங்கி போடுங்க!! புதுசா ஜாவா பைக்கை வாங்க சரியான நேரம் இதுதான்!

ஜாவா, யெஸ்டி (Jawa, Yezdi) பைக்குகளுக்கு வருட-இறுதி தள்ளுபடிகள் ரூ.10,000 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எவ்வளவு குறைந்த விலையில் ஜாவா, யெஸ்டி பைக்குகளை வாங்கலாம் என்பதை பற்றியும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜாவா & யெஸ்டி பைக்குகளையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வருட இறுதி டிசம்பர் மாதத்தை நல்லப்படியாக முடிக்கவே பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன் காரணமாகவே, சமீப நாட்களாக ஹூண்டாய், டாடா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. அதேபோன்று, பைக் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது வருட-இறுதி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

december offers for jawa yezdi

இந்த வரிசையில், கிளாசிக் தோற்றம் கொண்ட பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்களான ஜாவா மற்றும் யெஸ்டி அவற்றின் பைக்குகளுக்கு குறுகிய கால சலுகைகளை அறிவித்துள்ளன. இந்த சலுகைகள் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். இந்த சலுகைகளின்படி, குறிப்பிட்ட ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளை ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் உடன் வாங்கலாம்.

அதாவது, வேறொரு பழைய 2-வீலரை கொடுத்து ஜாவா, யெஸ்டி பைக்கை வாங்குகிறீர்கள் எனில், அந்த பழைய 2-வீலருக்கான மதிப்பு தொகை உடன் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 வரையில் பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆனது அனைத்து ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கும் கிடையாது. ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகளுக்கு மட்டுமே ஆகும்.

december offers for jawa yezdi

அதிலிலும், ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகளை சிங்கிள் டோன் பெயிண்ட்டில் வாங்கினால் மட்டுமே இந்த எக்ஸ்சேஞ்ச் போன்ஸை பெற முடியுமாம். ஆனால், அனைத்து ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கும் 4 வருடத்திற்கான அல்லது 50,000 கிமீ-க்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் இந்த குறிப்பிட்ட சலுகை காலத்தில் கிடைக்கும். பொதுவாக, ஜாவா, யெஸ்டி பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 வருட (அ) 24,000கிமீ-க்கான உத்தரவாதம் வழங்கப்படுவது வழக்கம்.

அதாவது, 2 வருடத்திற்குள் அல்லது 24,000கிமீ தொலைவிற்கு பைக்கை இயக்குவதற்குள் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதனை இலவசமாக சரிச் செய்துக் கொள்ளலாம். 24,000கிமீ தொலைவிற்கு பைக்கை ஒரே வருடத்தில் ஓட்டினால், அப்போதே வாரண்டி காலம் முடிந்துவிடும். 2-வருட (அ) 24,000கிமீ உத்தரவாதம் தான் ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

december offers for jawa yezdi

கூடுதல் தொகையை செலுத்தினால், அதனை 4 வருடங்கள் (அ) 50,000கிமீ-க்கான உத்தரவாதமாக நீட்டித்து பெறலாம் என்கிற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், உத்தரவாதத்தை நீட்டிக்க கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை இந்த சலுகை காலத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி இருக்காது. இவற்றுடன், அனைத்து ஜாவா, யெஸ்டி பைக்குகளிலும் ரூ.1,888இல் இருந்து துவங்கும் குறைந்த மாதத்தவணை திட்டம் கிடைக்கிறது.

மேலும், பைக்கிற்கான ரைடிங் கியர் மற்றும் ஆக்ஸஸரீகளுக்கு (குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே) 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் ஜாவா பிராண்டில் இருந்து ஜாவா, ஜாவா 42, ஜாவா 42 பாப்பர் மற்றும் ஜாவா பெராக் பைக்குகளும், யெஸ்டி பிராண்டில் இருந்து யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

december offers for jawa yezdi

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்குவதற்கு என்றே தனி கூட்டம் இருப்பதை போல், ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அத்தகையவர்களுக்கு இந்த சலுகை அறிவிப்புகள் நிச்சயம் கவர்ச்சிக்கரமானதாக இருக்கும். இந்த சலுகைகள் குறித்து கூடுதல் விபரங்களை அறிய அருகில் உள்ள ஜாவா, யெஸ்டி டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 12, 2023, 11:02 [IST]
English summary
Exciting december offers for jawa yezdi motorcycles check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X