யமஹா ஆலைக்கு வந்த 2 பேர்! இவங்களை பாக்குறது எல்லாம் தெய்வத்தை தரிசனம் பண்ணுற மாதிரி!

தற்போது பரபரப்பாக மோட்டோ ஜிபி பாரத் 2023 போட்டிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் யமஹா நிறுவனத்தின் மோட்டோ ஜிபி ஓட்டுநர்களான ஃபேபியோ குவட்ராராரோ மற்றும் பிராங்கோ மார்பிடிலி ஆகியோர் உபி மாநிலத்தில் உள்ள யமஹா ஆலையில் உள்ள ஆயிரம் ஊழியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் முதல் முறையாக மோட்டோ ஜிபி பாரத் போட்டிகள் இன்று துவங்கியுள்ளது. இந்த போட்டிக்காக உலகம் முழுவதும் உள்ள மோட்டோ ஜி பி டீம்கள் சேர்ந்து இந்த போட்டியில் கலந்து கொள்ளுகின்றனர். மொத்தம் 11 டீம்கள் 22 போட்டியாளர்கள் என இந்த பைக் பந்தயத்தில் கலந்து கொள்கின்றனர். இதை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

yamaha motogp

இந்தப் போட்டி இந்தியாவில் நடப்பது இதுதான் முதல் முறை. இந்தியாவில் உள்ள பைக் ரேஸ் பிரியர்கள் பலர் இந்த நிகழ்விற்காக காத்துக் கொண்டிருந்தனர். இதனால் இந்த டிக்கெட் புக்கிங் துவங்கிய போது ஏராளமான மக்கள் இந்த போட்டிக்கான டிக்கெடுகளை முன்பதிவு செய்தனர். இந்த போட்டியில் யமஹா நிறுவனத்தின் மோட்டோ ஜிபி குழுவும் பங்கேற்கிறது. அந்த குழுவின் சார்பில் இரண்டு ஓட்டுனர்கள் பங்கேற்கின்றனர்.

ஃபேபியோ குவட்ராராரோ மற்றும் பிராங்கோ மார்பிடிலி ஆகிய இரண்டு ஓட்டுனர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இவர்கள் நொய்டாவிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் யமஹா நிறுவனம் இவர்களை உபி மாநிலத்தில் உள்ள யமஹா தயாரிப்பு ஆலைக்கு அழைத்து சென்றது. உபி மாநிலம் சுரஜ்ப்பூரில் யமஹா நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

yamaha motogp

இந்த ஆலைக்கு சென்ற இரண்டு ஓட்டுனர்களும் ஆலையிலுள்ள ஆயிரம் ஊழியர்கள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினர். இதில் இந்த இரண்டு ஓட்டுனர்களும் தங்கள் மோட்டோ ஜிபி பயணத்தில் சந்தித்து வந்த திரில்லான அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து சுவாரசியமாக பகிர்ந்து கொண்டனர். மேலும் இவர்கள் போட்டியின் போது செய்த யுக்திகள் மற்றும் டெக்னிக் குறித்தும் பேசினார். மேலும் ஊழியர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆட்டோகிராப் வழங்கியும் யமஹா ஊழியர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த நிகழ்வின் மூலம் யமஹா நிறுவனம் மோட்டோஜிபி குறித்து எவ்வளவு ஆர்வமாக இருக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்தது. யமஹா மோட்டார் நிறுவனம் அதன் ஓட்டுனர்களுக்காக இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்வை நடத்தியது. யமஹா ஆலையில் பணியாற்றும் பலருக்கு இந்த மோட்டோ ஜிபி ஓட்டுனர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அந்த ஆசையை தீர்த்து வைக்கும் விதமாகவும் யமஹா நிறுவனம் இதை செய்திருந்தது.

yamaha motogp

மோட்டோ ஜிபி பாரத் போட்டியை பொருத்தவரை இன்று நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வைத்து நடைபெற்று வருகிறது. இது வரும் 24ஆம் தேதி வரை நடக்க உள்ளது இன்றும் நாளையும் பயிற்சி மற்றும் தகுதி சுற்றுகள் நடைபெற உள்ளன. 24 ஆம் தேதி தான் இறுதி கட்டப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த மோட்டோ ஜிபி பாரத் 4 2023 ஆம் ஆண்டு நடக்கும் 13 வது போட்டியாகும்.

இந்த போட்டியில் மோட்டோ ஜிபி பைக் ரேஸ் மோட்டோ 2 மற்றும் மோட்டோ 3 ஆகிய பைக் ரேஸ்கள் எல்லாம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஃபேர் ஸ்டிரீன் நிறுவனம்தான் இந்தியாவில் நடத்தி வருகிறது. மோட்டோ ஜி பி போட்டிக்கான உரிமம் எல்லாம் துரோனா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருப்பதால் துரோனா ஸ்போர்ட் மற்றும் ஃபேர் ஸ்டிரீட் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து இந்த போட்டியை இந்தியாவில் நடத்தி வருகின்றன.

இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே டிக்கெட் விலை எடுத்து நேரடியாக போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்று போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த போட்டிக்கான பல்வேறு முன்னேற்பாடு வசதிகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் நடக்கும் முதல் பைக்கரை மோட்டோ ஜிபி போட்டி என்பதால் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டோ ஜிபி போட்டிகளில் வெகு சில அணிகளே கலந்து கொள்கின்றன. அதில் யமஹா நிறுவனம் மிக முக்கியமான நிறுவனமாக பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தனது மோட்டோ ஜி பி ரேசர்களை தனது ஊழியர்களை சந்திக்க வைத்தது அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 22, 2023, 17:30 [IST]
English summary
Fabio quartararo and franco morbidelli meet yamaha staff before inaugural event
மேலும்... #யமஹா #yamaha #motogp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X