ஒரே கடையில பல பிராண்ட் டூவீலர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களால் பிரச்சனை! கிளம்பியது புதிய புயல்!
இந்தியாவில் மல்டி பிராண்ட் அவுட்லெட்களால் டூவீலர் டீலர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் டூவீலர் மார்கெட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் இந்தியா முழுவதும் டீலர் ஷிப்களை உருவாக்கி அதன் மூலம் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி மக்கள் நேரடியாக டீலர் ஷிப்களை தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான கார், பைக்குகளை வாங்கிக்கொள்ளலாம்.

இப்படியான வாகன தயாரிப்பார்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்களே விற்பனை பிறகான சர்வீஸையும் சேர்த்து வழங்கி வருகின்றனர். இவர்கள் கூட்டமைப்பாக பெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர் அசோசியேஷன் (FADA) என்ற அரசின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் கீழ் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த FADA அமைப்பின் மூலம் தேசிய அளவிலான கூட்டத்தில் சட்டவிரோதமாக டூவீலர் டீலர்ஷிப்களை நடத்திவருவது குறித்து கவலை தெரிவித்தனர். இந்தியாவில் மல்டி பிராண்ட் அவுட்லெட் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத பல டூவீலர் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மல்டி பிராண்ட் அவுட்லெட்கள் டீலர்களிடம் பதிவு செய்யப்படாத வாகனங்களை மொத்தமாக வாங்கி குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இப்படியாக விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு விற்பனைக்கு பிறகான சர்வீஸ் குறித்து எந்த வித உத்தரவாதமும் வழங்கப்படுவதில்லை.
இப்படியான மல்டி பிராண்ட் டீலர்களால் மக்கள் மத்தியில் கம்பெனி டீலர்கள் மற்றும் பார்ட்னர்களுக்கு கெட்ட பெயர் வருகிறது. இது மட்டுமல்ல இந்த மல்டி பிராண்ட் டீலர்கள், ஜிஎஸ்டி, வருமான வரி, உள்ளிட்ட எதையும் வழங்குவதில்லை. மேலும் போலியான அல்லது குறைந்த வேல்யூ கொண்ட இன்சூரன்ஸ் பாலிசிகளை புரமோட் செய்கின்றனர். என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
இது போல இவர்கள் வாகனங்களைப் பதிவு செய்யாமல் அப்படியே விற்பனை செய்கின்றனர் என்றும், இவர்கள் விற்பனையின் போது ஹெல்மெட் வழங்குவதில்லை. என்றும், இதன் மூலம் இவர்கள் அதிகமாக லாபம் சம்பாதிப்பதாகவும், இது சட்ட விரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் கம்பெனியின் நேரடி டீலர்களுக்கு வருமானம் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இப்படியான மல்டி பிராண்ட் ஆட்டோமொபைல் ஷோரூம்களுக்கு எதிராக மகாராஷ்டிரா மற்றும் டில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர்களின் டிரேடு சான்றிதழ்களை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதே போல இந்தியா முழுவதும் உள்ள மல்டி பிராண்ட் டூவீலர் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன விற்பனை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதற்கான தரவுகளைப் பாதுகாப்பதும் முக்கியம். இப்படியாக மல்டி பிராண்ட் டீலர்கள் மூலம் விற்பனை செய்வதால் இந்தியாவில் வாகன பயன்பாட்டை அரசால் கண்காணிக்க முடியாது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








