இந்தியா முழுவதும் வீட்டுக்கு வீடு டூவீலர்! லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு அதிரடி?
நம் அனைவரின் போக்குவரத்திற்கும் டூவீலர்கள் (Two Wheelers) மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றன. ஒரு டூவீலர் இருந்தால் நினைத்த இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று வந்து விட முடியும். ஆனால் இன்றளவும் டூவீலர் இல்லாத வீடுகள் நம் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள், ஆரம்ப நிலை டூவீலர்களைதான் தங்கள் முதல் வாகனமாக வாங்க நினைப்பார்கள். 100 சிசி முதல் 125 சிசி வரையிலான டூவீலர்கள்தான், ஆரம்ப நிலை செக்மெண்ட்டை சேர்ந்தவை. இந்த ரகத்தை சேர்ந்த டூவீலர்களுக்கான ஜிஎஸ்டி (GST) வரி மிகவும் அதிகமாக இருப்பதால், மக்கள் பலரால் அவற்றை வாங்க முடிவதில்லை.

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆரம்ப நிலை டூவீலர்களுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்து வருகிறது. ஆனால் இந்த ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைக்கப்படுவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
ஃபாடா என சுருக்கமாக அழைக்கப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA - Federation of Automobile Dealers Associations) நிர்வாகிகள், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை (Nitin Gadkari) சமீபத்தில் சந்தித்து பேசினர். இவர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக உள்ளார்.

ஆரம்ப நிலை டூவீலர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தனர். 100 சிசி - 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்த ஆரம்ப நிலை டூவீலர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அரசு குறைக்க வேண்டும் என இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ஆரம்ப நிலை டூவீலர்களின் விலை ஓரளவிற்கு குறையும். இன்றைய காலகட்டத்திலும் கூட சொந்தமாக டூவீலர் இல்லாத பலர், தங்களின் சொந்த டூவீலர் கனவை நிஜமாக்கி கொள்ள இது மூல காரணமாக அமையலாம். தற்போதைய சூழல் மக்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளதால், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதாவது இந்தியாவில் அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் மாதங்களில் மக்களை கவர, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை மத்திய அரசு அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக ஆரம்ப நிலை டூவீலர்கள் மீதான ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்கும்பட்சத்தில், அது ஆட்டோமொபைல் துறைக்கும், டூவீலர்கள் இல்லாத மற்றும் புதிய டூவீலர்கள் வாங்க நினைப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்பட்சத்தில், இந்தியாவில் ஆரம்ப நிலை டூவீலர்களின் விற்பனை உயரலாம். தற்போது பண்டிகை காலம் வேறு நெருங்கி கொண்டிருப்பதால், பலர் புதிய டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால், அவர்களால் ஓரளவிற்கு பணத்தை சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








