இவி ஷோரூம்களில் மக்கள் கூட்டம் மொய்க்க போறாங்க! ஓரிரு வாரங்களில் வண்டி விலை ஏறப்போகுது!
எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கப்படும் ஃபேம் மானியம் இன்னும் ஒரு சில வாரங்களில் நிறுத்தப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாக வழங்கப்பட்ட மானியம் தற்போது நிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு கனரக தொழிற்சாலை அமைச்சகம் மூலம் ஃபேம் என்ற மானியத்தை வழங்கியது. அந்த மானியத்தின்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு வாகனத்தின் விலையை குறைக்க அவர்கள் செலவு செய்யும் பணத்தின் அளவை குறைக்க ஃபேம் என்ற மானியத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த மானியம் வழங்கப்படுவதால் மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும், பலர் தானாக முன்வந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள் என திட்டமிட்டு வெறும் ரூபாய் 75 கோடி பட்ஜெட்டில் ஃபேம் மானியம் துவங்கப்பட்டது. முதல் கட்டமாக இந்த மானியம் நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமானதால் இந்த மானியத்தின் இரண்டாம் கட்டம் மூலம் நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் வாகன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு நேரடியாக குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

2ம் கட்ட ஃபேம் மானியத்திற்காக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஃபேம் மானியத்தின் மூன்றாம் கட்டம் துவங்கும் நேரம் நெருங்கியது. இந்நிலையில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு வந்துவிட்டது எனவும் மக்கள் மத்தியில் வெற்றி வாகனங்களை வாங்கும் ஆர்வம் அதிகமாகி விட்டதாகவும் கூறி மத்திய அரசு இந்த மூன்றாம் கட்டத்தை நிறுத்திவிட்டு மொத்தமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் ஃபேம் மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதனால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் ஃபேம் மானியம் மொத்தமாக நிறுத்தப்படுகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை இந்தியாவில் கணிசமான அளவு அதிகமாகும் என தெரிய வந்துள்ளது. கடன் சில மாதங்களுக்கு முன்னர் ஃபேம் மானியத்தின் அளவை மத்திய அரசு குறைத்த போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மந்தமானது. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் இந்த மந்தநிலை சரியாகி மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த ஃபேம் 2 மானியம் மூலம் இதுவரை 10 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுள்ளது. இது மட்டுமல்லாமல் மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பொது போக்குவரத்து வாகனம் என அனைத்திற்கும் மானியங்கள் வழங்கப்பட்டது. தற்போது டெஸ்லா போன்ற மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவை குறி வைத்துள்ளதால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் அதிகமாகி உள்ளது.
மத்திய அரசு நடத்திய ஆய்வில் தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகி உள்ளது. ஆனால் வட இந்தியா மற்றும் வடமேற்கு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாக வில்லை இதற்கு அப்பகுதியில் உள்ள நில அமைப்புகளும் பொருளாதார சூழ்நிலைகளும் முக்கியமான காரணம் என தெரிகிறது.
மத்திய அரசு ஃபேம் மானியம் என்ற ஒரு விஷயத்தை எதற்காக கொண்டு வந்ததோ அந்த நோக்கத்தை தற்போது எட்டிவிட்டதாகவே தெரிகிறது. அதனால் இனி எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எந்த விதமான மானியங்களும் அளிக்கப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஓரிரு வாரங்களில் இந்த ஃபேம் மானியம் என்பது இந்தியாவில் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிக்கும் வாகனங்களில் பேம் மானியத்தை கழித்து தான் விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஃபேம் மானியம் என்பது நிறுத்தப்பட்டால் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் தங்கள் விலையேற்றம் குறித்து அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளன.


Click it and Unblock the Notifications









