ஹீரோ மோட்டோகார்பை இவ்வளவு பேர் தைரியமா நம்புறாங்க!! தீபாவளியில் ஷோரூம்ஸ் நிரம்பி வழிஞ்சுது!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் நடந்து முடிந்த பண்டிகை காலத்தில் சுமார் 14 இலட்ச வாகனங்களை விற்பனை செய்து விற்பனையில் புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. வெறும் 32 நாட்களில் ஹீரோ நிறுவனம் இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. வருட இறுதி பண்டிகை காலத்தில் ஹீரோ இதுவரையில் பதிவு செய்த அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.
இந்தியா மட்டுமின்றி, உலகளவிலேயே மிக பெரிய 2-வீலர் உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்பை சொல்லலாம். இந்தியாவை தாண்டி மற்ற உலக நாடுகளில் அதிகளவில் 2-வீலர்களை விற்பனை செய்யாவிடினும், இந்தியாவிலேயே ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான இரு சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்கிறது.

இதில் ஒரு படி மேலே சென்று, தீபாவளியுடன் முடிவுற்ற 2023ஆம் ஆண்டின் வருட இறுதி பண்டிகை சமயத்தில் சுமார் 14 இலட்ச வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் நவராத்திரியில் துவங்கிய இந்த வருட இறுதி பண்டிகை காலம் கடந்த நவம்பர் 15இல் பாய் டூஜ் பண்டிகை உடன் முடிவுற்றது.
இவ்வாறு, ஒரு வருடத்தின் பண்டிகை காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுமார் 14 இலட்ச வாகனங்களை விற்பனை செய்வது இதுவே முதல்முறை ஆகும். இந்த வகையில் புதிய சாதனையை ஹீரோ மோட்டோகார்ப் புரிந்துள்ளது. கடைசியாக, 2019இல் 12.7 இலட்ச வாகனங்களை விற்பனை செய்ததே ஹீரோ மோட்டோகார்பின் ஒரு பண்டிகை காலத்தில் அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கையாக இருந்தது.

அதனை இந்த வருட பண்டிகை காலத்தில் கடந்துள்ள ஹீரோ நிறுவனம், கடந்த 2022ஆம் ஆண்டின் பண்டிகை காலத்தை விடவும் கிட்டத்தட்ட 19% அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை இந்த வருட இறுதி பண்டிகை காலத்தில் விற்பனை செய்துள்ளது. நகர்புறங்களில் இருந்து மட்டுமின்றி, கிராமப் புறங்களில் இருந்தும் இந்த பண்டிகை காலத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாக ஹீரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடந்து முடிந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு 'ஹீரோ கிராண்ட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரஸ்ட்' என்ற பெயரில் ஒரு செயல்திட்டத்தை செயல்படுத்தி வந்தது. 2022இல் முதல்முறையாக இந்த செயல்திட்டத்தை அறிமுகப்படுத்திய ஹீரோ நிறுவனம் இந்த வருடத்தில் இந்த திட்டத்தின் 2வது எடிசனை செயல்படுத்தியது.

இந்த செயல்திட்டத்தின்படி, தனது இரு சக்கர வாகனங்களை அப்டேட் செய்வது, அவற்றிற்கு புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை வழங்குவது மற்றும் பொருளாதார ரீதியாக கஸ்டமர்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட வேலைகளில் ஹீரோ ஈடுப்பட்டது. இதன் விளைவாகவே, 14 இலட்ச வாகனங்கள் விற்பனை என்கிற மிக பெரிய பலனை ஹீரோ அறுவடை செய்துள்ளது.
இதற்கு மத்தியில், சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2023 கண்காட்சியிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பங்கேற்றது. இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெற்ற இந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹீரோ நிறுவனம் சார்பில் ஸ்பெஷல் விடா வி1 கூபே எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஸூம் 125ஆர் மற்றும் ஸூம் 160 ஸ்கூட்டர்கள் மற்றும் சில கான்செப்ட் மாதிரிகள் காட்சிக்கு நிறுத்தப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நவராத்திரி, பாய் டூஜ் பண்டிகைகள் நம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், இந்தியாவின் வட மாநிலஙகளில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனாலேயே, இந்தியாவின் முக்கிய பண்டிகை நாட்களுள் இவை இரண்டும் உள்ளன. என்னதான் பண்டிகை நாட்கள் வந்தாலும், ஹீரோவின் முயற்சி இல்லாமல் இந்த சாதனையை அந்த நிறுவனத்தால் செய்ய முடிந்திருக்காது.


Click it and Unblock the Notifications









