மலிவு விலை மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்கிய ஏத்தர்! எல்லாரு வீட்டுலயும் ஒன்னு இல்ல ரெண்டு இருக்க போகுது

கர்நாடாக மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன (Electric TwoWheeler) உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-ம் ஒன்று ஆகும். தற்போது இந்த நிறுவனத்திற்கும் ஓலா (Ola Electric)விற்கும்தான் மிகப் பெரிய போட்டியே நிலவிக் கொண்டு இருக்கின்றது.

இரு நிறுவனங்களும் மாறி மாறி மலிவு விலையில் மின்சார இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வந்த இ-ஸ்கூட்டர் மாடலே ஏத்தர் 450எஸ் (Ather 450S) ஆகும்.

Ather 450s

இதனை டெலிவரி கொடுப்தற்கான பணியிலேயே ஏத்தர் எனெர்ஜி தற்போது தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனம் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்து அதனை தற்போது வெளியேற்றும் பணியையேத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில தினங்களில் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெங்களூரூவை மையமாகக் கொண்டு ஏத்தர் எனெர்ஜி இயங்கி வந்தாலும், அது உற்பத்தி ஆலையை ஓசூரிலேயே அமைத்து இருக்கின்றது. இங்கேயே தற்போது 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் தொடங்கி இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெலிவரி பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன.

இந்த பணிகள் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. 450 எஸ்-தான் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதற்கு ரூ. 1,29,949 என்கிற விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

2.9 kWh பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் எனெர்ஜி பயன்படுத்தி இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 115 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும்.

இந்த வாகனத்தில் டர்ன் -பை- டர்ன் (திருப்பத்திற்கு திருப்பம்) வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம்,17.7 அங்குல திரை வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல கூடுதல் சிறப்பம்சங்களைக் ஏத்தர் 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், பார்க் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்ட், 22 லிட்டர் பூட் ஸ்பேஸ், மோனோஷாக் சஸ்பென்ஷன், சைடு ஸ்டாண்டு சென்சார்கள், ஆட்டோ இன்டிகேட்டர் கட்-ஆஃப், கைடு-மீ-ஹோம் மின் விளக்கு, கோ இன்காக்னிட்டோ, சைடு ஸ்டெப் உள்ளிட்ட அம்சங்களையும் ஏத்தர் எனெர்ஜி வழங்கி இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 36 நிமிடங்கள் தேவைப்படும். நான்கு விதமான வண்ண தேர்வை 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் எனெர்ஜி வழங்குகின்றது. காஸ்மிக் கருப்பு, ஸ்டில் ஒயிட், சால்ட் கிரீன் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய நிற தேர்வுகளே வழங்கப்படுகின்றது.

இத்துடன், ப்ரோ எனும் ஆட்-ஆன் வசதியையும் வழங்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதனை ரூ. 14 ஆயிரம் கூடுதல் கட்டணத்தில் ஏத்தர் எனெர்ஜி வழங்க இருக்கின்றது. இத்துடன், ரூ. 5,499 மதிப்புள்ள ஏத்தர் பேட்டரி புரடெக்ட் எனும் திட்டத்தை வெறும் 1 ரூபாய்க்கு வழங்கவும் ஏத்தர் திட்டமிட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான தேவை பல மடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே ஏத்தர் அதன் 450எஸ் மாடலையும், ஓலா எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 2, 2023, 23:23 [IST]
English summary
Finally ather energy has started rolling off 450s from hosur plant
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+