இந்தியாவில் எங்கு தேடினாலும் இப்படியொரு சைக்கிளை பார்க்க முடியாது!! முதல்முறையாக ஆட்டோமேட்டிக் டெக்னாலஜி உடன்!
ஃபையர்ஃபாக்ஸ் (Firefox) நிறுவனம் இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக்ன் க்ரூஸர் பை-சைக்கிளை இன்ஃபினிட்டி 700சி (Infinity 700C) என்கிற பெயரில் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய ஆட்டோமேட்டிக் பை-சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி பிரீமியம் பை-சைக்கிள் நிறுவனமான ஃபையர்ஃபாக்ஸ் பைக்ஸ் பல்வேறு பை-சைக்கிள்களை விற்பனை செய்கிறது. அவற்றில் புதிய மாடலாகவும், இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் பை-சைக்கிளாகவும் இன்ஃபினிட்டி 700சி வாகனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.25,599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினசரி நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற சைக்கிளான இன்ஃபினிட்டி 700சி -ஐ கரடுமுரடான சாலைக்கும் கொண்டு செல்லலாம் என்கிறது ஃபையர்ஃபாக்ஸ் நிறுவனம். சைக்கிள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த பை-சைக்கிளில் தொடர்ச்சியாக மாறக்கூடிய பிளாண்டரி (CVP) சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஃபையர்ஃபாக்ஸ் நிறுவனம் கூறுகிறது.
என்வியோலோ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சிவிபி சிஸ்டத்தின் மூலமாக சைக்கிளில் கியர்களை ஆட்டோமேட்டிக்காக மாற்றுவதற்கான ஸ்மார்ட் தொழிற்நுட்பத்தை இன்ஃபினிட்டி 700சி பெற்றுள்ளது. இதனால் ஓட்டுனர் எதிர்பாராத சூழல்களையும் எளிதாக கையாள முடியும் என ஃபையர்ஃபாக்ஸ் நிறுவனம் நம்புகிறது. ஏற்கனவே கூறியதுபோல், அன்றாட நகர்புற போக்குவரத்துக்கு மட்டுமில்லாமல், அட்வென்ச்சர் பயணங்களுக்கும் ஏற்ற சைக்கிளாக விளங்கும் இன்ஃபினிட்டி 700சி அதற்கேற்ப மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அட்வென்ச்சர் பயணங்களுக்காகவே உயர் தரத்திலான தொழிற்நுட்பத்தை பெற்றுள்ள ஃபையர்ஃபாக்ஸின் இந்த புதிய பை-சைக்கிளின் அலாய் சக்கரங்கள் இரட்டை சுவர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணத்தின் போது ரைடருக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கக்கூடியதாக விளங்கும் இன்ஃபினிட்டி 700சி-இன் டயர்கள் எந்தவொரு சாலையிலும் நல்ல பிடிமானத்தை வழங்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கு ஜக்-7 பிரேக் தொகுப்பும் இந்த ஆட்டோமேட்டிக் சைக்கிளில் இடம்பெற்றுள்ளது. இன்ஃபினிட்டி 700சி சைக்கிளில் பெரியதாக பராமரிப்பு செலவு ஏற்படாது என கூறும் ஃபையர்பாக்ஸ் நிறுவனம் என்வியோலோவின் சிவிபி சிஸ்டத்திற்கு மட்டும் 2 வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. இதனால் குறைந்தது 2 வருடம் ஆவது உங்களால் இன்ஃபினிட்டி 700சி -ஐ ஆட்டோமேட்டிக் சைக்கிளாக பயன்படுத்த முடியும்.

இன்ஃபினிட்டி 700சி-இன் அறிமுகம் குறித்து ஃபையர்ஃபாக்ஸ் பைக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீராம் சுந்தரேசன் பேசுகையில், "சைக்கிள் ரைடிங் துறையில் முன் உதாரணமாக எல்லைகளை தள்ளி, புதிய வரையறைகளை அமைப்பதற்கு நாங்கள் அர்பணித்துள்ளோம். இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் டிரைவ்டிரெயின் உடன் பொருத்தப்பட்ட என்வியோலோ சிவிடி ஹப் மூலம் இயக்கப்படும் இன்ஃபினிட்டி ஒரு புதுமையான ஸ்டீப்லெஸ் ஷிஃப்டிங் தொழிற்நுட்பத்தை ரைடர்களுக்கு வழங்குகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சந்தையில் புதிய புதிய தொழிற்நுட்பங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் ஃபையர்ஃபாக்ஸ் நிறுவனம் தற்போது இன்ஃபினிட்டி 700சி பை-சைக்கிளின் மூலமாக ஆட்டோமேட்டிக் அம்சத்தை களமிறக்கியுள்ளது. புதுமையாக ஆட்டோமேட்டிக் பவர்ட்ரெயின் உடன் கொண்டுவரப்பட்டாலும் இன்ஃபினிட்டி 700சி-இன் விலை ரூ.25 ஆயிரம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









