சைக்கிள் விலையே 14 ஆயிரம் ரூபாதான்.. 5,000 ரூபா மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை ஃப்ரீயா தர போறாங்களாம்..

பிரபல சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய மாடல் மிதிவண்டியை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த விலை குறைவான புதுமுக சைக்கிளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக, அந்நிறுவனம் ஸ்மார்ட் வாட்சை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

"14 ஆயிரம் ரூபா மதிப்புள்ள சைக்கிளுக்கு, 5 ஆயிரம் ரூபா மதிப்புள்ள வாட்ச் இலவசமா" யாருங்க அந்த இளிச்ச வாய் நிறுவனம்? இப்படியான கேள்வியே நம்பில் பலருக்கு எழும்பி இருக்கக்கூடும். இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஃபயர்ஃபாக்ஸ்-ம் ஒன்று.

Firefox tremor x series ss 27

பிரீமியம் தர மிதிவண்டிகளை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக இது இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே அந்த இளிச்ச வாயன் நிறுவனம் ஆகும். ஆமாங்க, இதுவே தன்னுடை புதுமுக சைக்கிளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகவே ஸ்மார்ட் வாட்ச் இலவசம் என்கிற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் புதிதாக ட்ரெமோர் எக்ஸ் சைக்கிள் சீரிஸை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சீரிஸ் என்பது இந்த மாடலில் பல தேர்வுகளை நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் என்பதற்கான பொருள் ஆகும். இதன் உடன் சேர்த்து அவலான் எனும் புதுமுக மிதிவண்டி மாடலையும் அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

Firefox tremor x series ms 29

இதற்கே இலவச ஸ்மார்ட் வாட்ச் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அவலான் பிரத்யேகமாக பெண்களுக்கென வடிவமைக்கப்பட்ட மிதிவண்டி ஆகும். இதற்கு அறிமுகமாக விலையாக ரூ. 14 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சைக்கிளை வாங்கினால் ரூ. 4,999 மதிப்புள்ள நாய்ஸ் பிராண்டின் 'பீட்' ஸ்மார்ட்வாட்ச் இலவசமாக வழங்கப்படும்.

இது குலுக்கல் முறையில் வழங்கப்படும் பரிசு பொருள் அல்ல. அவலானை வாங்கும் ஒவ்வொரு நபருக்கும் இலவசமாக இந்த ஸ்மார்ட்வாட்சை வழங்க நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. ஆகையால், அவலான் ஸ்மார்ட் வாட்சை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் நாய்ஸ் பீட்-ஐ இலவசமாக வாங்கிக் கொள்ள முடியும்.

Firefox tremor x series ss 29

புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் அவலான் மற்றும் ட்ரெமோர் எக்ஸ் ஆகிய இரு மிதிவண்டிகளையும் ஆன்லைன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனையகம் வாயிலாக வாங்கிக் கொள்ள முடியும். இதில், ட்ரெமோர் எக்ஸ் ரூ. 10 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

மிகவும் இலகு ரக எடைக் கொண்ட மிதிவண்டியாக இந்த சைக்கிளை ஃபையர்ஃபாக்ஸ் வடிவமைத்து இருக்கின்றது. அதேவேளையில், மிகவும் உறுதியான மற்றும் நீண்ட காலம் உழைக்கும் திறனில் இதனை நிறுவனம் வடிவமைத்திருப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, சாகச பயணங்களை விரும்புபவர்களுக்கு என்றே பிரத்யேகமாக இந்த சைக்கிளை ஃபயர்ஃபாக்ஸ் வடிவமைத்து உள்ளது.

Firefox avalon

நாட்டில் உள்ள பன்முக நிலப்பரப்புகளை இதனால் சமாளிக்க முடியுமாம். குறிப்பாக, மலை மற்றும் கரடு-முரடான பாதையை சமாளிக்கும் வகையில் இதனை நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. அதேவேளையில் எந்த மாதிரியான சாலையில் பயணித்தாலும் என்ஜாய் மற்றும் மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும்.

இதற்கேற்பவே ட்ரெமோரை ஃபையர்ஃபாக்ஸ் வடிவமைத்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இரண்டு விதமான வேரிண்டுகளில் இந்த சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும். சிங்கிள் ஸ்பீடு வேரியண்ட் மற்றும் 21 எஸ் ஷிமனோ டிரைவ் டிரெயின் வசதிக் கொண்டது என இந்த இரு தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

இதுதவிர, 24 அங்குலம், 26 அங்குலம், 27.5 அங்குலம் மற்றும் 29 அங்குலம் ஆகிய அளவுகள் கொண்ட வீல் தேர்விலும் ட்ரெமோர் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோலவே பெண்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும் அவலான் சைக்கிள்களிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, பெண்கள் சுலபமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவலான் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. நகர்புற பெண்கள் பயன்பாட்டிற்கு இந்த சைக்கிள் மிகுந்த உதவியாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதிலும், இலகு ரக எடைக் கொண்ட ஃப்ரேமே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இத்துடன், ஷிமனோ ஷிஃப்டர் மற்றும் மிக சிறந்த கிரிப்பான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய 700சி டயர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த டயர் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் அசால்ட் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடன் வி பிரேக் மிக சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்குவதற்காக அவலானில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ட்ரெமோர் எக்ஸ்-இல் வழக்கமான டிஸ்க் பிரேக்குகளே கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சைக்கிள்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்க மிக சிறப்பாக உதவுகின்றது. வழக்கமான அருகாமையில் உள்ள பயணங்களுக்கு சைக்கிளை பயன்படுத்துவதனால் பெட்ரோலுக்கு செலவு செய்யப்படும் செலவும் மிச்சமாகும், நம்முடைய பாக்கெட்டும் பாதுகாக்கப்படும். இதுமட்டுமா, காற்று மாசுபடுதலையும் நம்மால் தவிர்க்க முடியும். ஆகையால், பெட்ரோல் டூ-வீலர்களுக்கு பதிலாக சைக்கிளை நாம் அனைவரும் அருகாமை பயணங்களுக்கு பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 22, 2023, 11:59 [IST]
English summary
Firefox introduces tremor x series and avalon women bicycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X