இந்த எலக்ட்ரிக் பைக்கை ஃப்ளிப்கார்ட்டிலேயே இனி வாங்கிடலாம்... ஷோரூமுக்கு சென்று நேரத்தை வீணாக்க வேண்டாம்!!

ஏரா (AERA) எலக்ட்ரிக் பைக்கை வாடிக்கையாளர்கள் எளிமையாக ஃபிளிப்கார்ட் (Flipkart)-இல் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக பைக்கை தயாரிக்கும் மேட்டர் நிறுவனம் புதியதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எந்த மாதிரியான நடவடிக்கை அது? என்பதையும், ஏரா எலக்ட்ரிக் பைக்கை பற்றியும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத்தை சேர்ந்த தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்பு எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமாக மேட்டர் எனர்ஜி (Matter Energy) விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் 1ஆம் தேதி ஏரா என்ற பெயரில் எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் பல எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த எலக்ட்ரிக் பைக் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் முதல் கியர் எலக்ட்ரிக் பைக்காக மேட்டர் ஏரா களமிறக்கப்பட்டுள்ளது.

matter collaborates with flipkart

அதாவது தற்போதைய பைக்குகளை போன்று, ஏரா எலக்ட்ரிக் பைக்கிலும் கியர் வசதி உள்ளது, ஆனால் சந்தையில் உள்ள மற்ற எலக்ட்ரிக் பைக்குகள் ஸ்கூட்டர்களை போன்று ஆட்டோமேட்டிக்காக இயங்குகின்றன. இத்தகைய ஏரா எலக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் சவுகரியத்திற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் மேட்டர் நிறுவனம் கூட்டணி அமைத்து கொண்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியை மேட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டணியின் விளைவாக, மிக விரைவில் ஏரா எலக்ட்ரிக் பைக்கின் பெயர் ஃப்ளிப்கார்ட்டில் கொண்டுவரப்படும். மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கை ஃப்ளிப்கார்ட்டிலேயே விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். வாடிக்கையாளர்களுடன் எந்த அளவிற்கு நெருக்கமாக முடிகிறதோ அந்த அளவிற்கு நெருக்கமாகிவிட வேண்டும் என்பது மேட்டர் நிறுவனத்தின் நோக்கமாகவும், கொள்கையாகவும் உள்ளது.

matter collaborates with flipkart

இதனாலேயே வழக்கமான டீலர்ஷிப்கள் இருந்த போதிலும், இணையம் வழியாகவும் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த மேட்டர் நிறுவனம் ஆயத்தமாகி உள்ளது. இதுகுறித்து மேட்டர் நிறுவனத்தின் சிஇஒ-வும், நிறுவனருமான மோகல் லால்பாய் கருத்து தெரிவிக்கையில், "அனைத்து பிராந்தியங்களிலும் மக்கள் மின்சார வாகனங்களை எளிமையாக அணுகுவதற்கு மேட்டர் விரும்புகிறது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையத்தின் சகாப்தத்தில் மின்வணிகம் ஒரே அளவிலான உயரத்தில் நடைபெறுகிறது.

ஃப்ளிப்கார்ட் உடனான எங்களது கூட்டணி 22ஆம் நூற்றாண்டில் சிறந்த எதிர்காலத்துடன் நுழைவதற்கு ஏதுவாக பரந்த பார்வையாளர்களை அணுகவும், நிலையான தொழிற்நுட்பத்தை உருவாக்கவும் உதவும்" என்றார். மேட்டர் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்கான ஏராவை பற்றி கூற வேண்டுமென்றால், இது 5000 மற்றும் 5000+ என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

matter collaborates with flipkart

இதில் 5000 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.44 லட்சமாகவும், உயர்-நிலை 5000+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.54 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் மத்திய அரசு வழங்கும் மானியங்கள் கழிக்கப்பட்டவை, ஆனால் மாநில அரசாங்கங்களின் மானியத்தால் கழிக்கப்படாதவை. ஆதலால், வாடிக்கையாளர்கள் வாங்கும்போது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை இன்னும் குறைவாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உலகம் வேகமாக மாறி வருகிறது. எல்லாமே இணைய மயமாகி வரும் தற்போதைய சூழலில், இவ்வாறான நடவடிக்கைகள் நிச்சயம் அவசியமாகும். ஏனெனில் சமீப காலங்களில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இவ்வாறு தங்களது தயாரிப்புகளை ஃப்ளிப்கார்ட்டிலும், அமேசானிலும் சந்தைக்கு கொண்டுவருவதை பார்க்க முடிகிறது. இருப்பினும், டீலர்ஷிப்பிற்கு நேரில் சென்று பார்த்து வாகனத்தை வாங்குவதே தனி சுகம் தான் என நினைப்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 27, 2023, 17:04 [IST]
English summary
Flipkart can pre book india first geared electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X