இவங்க சேர்ந்து தயாரிக்கப்போற பைக் வந்துச்சுன்னா எலெக்ட்ரிக் பைக்கை எல்லாம் குப்பையில தான் போடனும்!
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஜப்பானில் யமஹா, சுஸூகி, ஹேண்டா, கவாஸகி ஆகி நிறுவனங்கள் இணைந்து ஹைட்ரஜன் பவர் பைக் இன்ஜின்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
உலக நாடுகள் எல்லாம் தற்போது மாசுவை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டைக் குறைத்து மாற்று எரிசக்தியில் மாசு இல்லாத எரிபொருளில் இயங்கும் வாகனங்களை ஊக்குவித்துவருகிறது. இதற்காக எலெக்டரிக் வானகங்களை உலக நாடுகள் முழுவதும் ஊக்கப்படுத்தி வருகின்றன.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள மிகப்பெரிய சிக்கல் நீண்ட தூரம் சாத்தியமில்லாதது தான். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் முழு பேட்டரி திறனில் 300 கி.மீ பயணித்தாலும் அதற்கு மேல் பயணிக்க வேண்டும் என்றால் சார்ஜ் போட வேண்டும். பேட்டரியை சார்ஜ் ஏற்ற அதிக நேரம் எடுக்கும். ஆனால் பெட்ரோல் வாகனங்களைக் குறைவான நேரத்தில் எரிபொருளை ரீஃபில் செய்து விட முடியும். இதனால் சிலர் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்புவதில்லை.
இந்நிலையில் இதற்குத் தீர்வளிக்கும் வகையில் ஹைட்ரஜன் எரிசக்தியில் இயங்கும் வாகன இன்ஜினை தயாரிக்க ஜப்பான் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளது. இதனால் யமஹா, சுஸூகி, ஹோண்டா, கவாஸகி ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து HySE என்ற பேண்டை உருவாக்கியுள்ளனர். இதற்கு அந்நாட்டு அரசு அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த அமைப்பு சிறிய வாகனங்களுக்கான ஹைட்ரஜன் பவர்டு இன்ஜினை உருவாக்கவுள்ளனர். கூட்டுச் சேர்ந்த நிறுவனங்கள் எல்லாம் டூவீலர் நிறுவனங்கள் என்பதால் ஹைட்ரஜன் பவர்டு டூவீலர் இன்ஜினை இவர்கள் விரைவில் தயாரிப்பாளர்கள் என எதிர்பார்க்கலாம். இதில் ஒவ்வொரு நிறுவனமும் இந்த இன்ஜின் வடிவமைப்பில் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொள்கின்றனர்.
ஹோண்டா நிறுவனம் இன்ஜின் வடிவமைப்பிலும், சுஸூகி நிறுவனம் அதன் திறன், பெர்ஃபாமென்ஸ், நம்பகதன்மை ஆகிய விஷயங்களிலும், யமஹா மற்றும் கவாஸகி ஆகிய நிறுவனங்கள் இந்த இன்ஜிற்கு ஹைட்ரஜனை ரீஃப்யூல் செய்வது எப்படி என்ற தொழிற்நுட்பத்திலும் ஆய்வு செய்ய களமிறங்கியுள்ளது. இந்த ஆய்வில் இவர்கள் கொண்டு வரும் தயாரிப்பு தான் எதிர்கால உலகத்திற்கு ஹைட்ரஜன் பவர்டு வாகனங்களாக விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது.
இதில் சிறப்பு உறுப்பினராக டொயோட்டோ இணைந்துள்ளது. அந்நிறுவனம் தனது ஹைட்ரஜன் பவர்டு கார் இன்ஜின் ஆய்வுகளை இவர்களுக்கு வழங்கி இந்த இன்ஜினை வடிவமைக்கும் போது ஏற்படும் சிக்கல்களை இவர்களுடன் இணைந்து மீட்டுவர உதவுகிறது. இவர்கள் ஒன்றாக இணைந்து விரைவில் ஹைட்ரஜன் பவர்டு பைக்குகளை தயாரிப்பார்கள் என நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்கால உலகிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் நிச்சயம் தீர்வை தராது, நமது தேவைகளை பூர்த்தி செய்ய ஹைட்ரஜன் வாகனம் போன்ற சில மேம்பட்ட தொழிற்நுட்பமும் தேவை, அதற்கான ஆய்வுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் அந்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








