ராகுல்காந்தி லடாக் போக ஓட்டி சென்ற கேடிஎம் பைக்கோட விலை இவ்ளோ அதிகமா? அட இந்த அம்சங்கள் எல்லாம் அதுல இருக்கா!

வயநாடு எம்பியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இருசக்கர வாகனத்திலேயே லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டிருக்கின்றார். லடாக்கிற்கு இளைஞர்கள் டூ-வீலரில் சுற்றுலா செல்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால், ராகுல்காந்தி பயன்படுத்தி இருக்கும் மோட்டார்சைக்கிள்தான் இங்கு மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது. அந்த வாகனத்தின் சிறப்புகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இருசக்கர வாகனத்தில் டூர் செல்வதற்கு பெயர்போனவராக நடிகர் அஜித் குமார் இருக்கின்றார். இவர் டூ-வீலரைக் கொண்டு உலகையேச் சுற்றி வந்திருக்கின்றார். அதேவேளையில், இவர் மட்டுமே டூ-வீலரில் உலகை சுற்றி வந்திருக்கின்றார் என கூறிவிட முடியாது. இந்திய இளைஞர்கள் பலரிடம் இவ்வாறு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா செல்லும் வழக்கம் அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

Rahul gandhi

அந்தவகையில், இருசக்கர வாகனத்தையே சுற்றுலா வாகனமாக மாற்றி தமிழக இளைஞர்கள் பலர் கன்னியாகுமரி தொடங்கி லடாக் வரையில் சென்றிருக்கின்றனர். இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி மோட்டார்சைக்கிளில் தன்னுடைய லடாக் டூரை தொடங்கினார். இந்த பயணத்திற்காக அவர் பயன்படுத்தியது கேடிஎம் 390 அட்வென்சர் பைக்காகும்.

அட்வென்சர் பயணங்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஓர் மோட்டார்சைக்கிளே இதுவாகும். ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan), பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS) மற்றும் யெஸ்டி அட்வென்சர் (Yezdi Adventure) ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் சூப்பரான அட்வென்சர் அம்சங்கள் கொண்ட டூ-வீலரே இதுவாகும்.

Rahul gandhi ladakh trip

இதன் ஆரம்ப விலையே ரூ. 3,38,746 ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அதிகபட்சமாக 42.3 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும். மேலும், இந்த மோட்டார் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு இருக்கின்றது.

மிக சிறப்பான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த கியர்பாக்ஸில் பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர் கருவி வழங்கப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு பயணங்களின்போதுகூட சுலபமான ஸ்பிஃப்டிங் அனுபவத்தை இந்த கருவி வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட ஆறு ஸ்போக் வீல்கள், நான் இன்வெர்டடர் ஃபோர்க் முன்பக்கத்திலும், டபிள்யூபி அபெக்ஸ் மோனோ ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

Ladakh

இந்த இரு சஸ்பென்ஷன்களும் இந்தியாவின் கரடு, முரடான சாலைகளைச் சமாளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர சிங்கிள் டிஸ்க் பிரேக் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு உள்ளன. இதனுடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரட்டை சேனல் ஏபிஎஸ், ஆஃப்-ரோடு மோடுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இவையே கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை மிக சிறந்த ஆஃப் ரோடு வாகமாக காட்டுகின்றது. இத்தகைய வாகனத்தை பயன்படுத்தியே ராகுல் காந்தி தன்னுடைய லடாக் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். இந்த பைக்கில் கூடுதல் சிறப்பு வசதியாக டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் திரை முழு கலர் வசதி மற்றும் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

Rahul gandhi riding bike in ladakh

அந்த திரை திருப்பத்திற்கு திருப்பம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்கிற தகவலை வழங்கும் திறன் கொண்டது. இதனைத் தொடர்ந்து, பைக்கின் டிராக்சன் கன்ட்ரோலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்ட்ரீட் மற்றும் ஆஃப்-ரோடு ஆகிய அம்சங்களும் 390 அட்வென்சரில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகையால், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமின்றி வழக்கமான சாலை பயன்பாட்டிற்கு இந்த பைக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவர் லடாக்கில் உள்ள அழகிய பான்காங் ஏரியை விசிட் செய்யவே கேடிஎம் மோட்டார்சைக்கிளில் சென்றிருக்கின்றார். இது கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் 50 சதவீத பகுதி சீன எல்லையிலும், 40 சதவீத பகுதி இந்திய பகுதியிலும் உள்ளன. பாக்கி உள்ள 10 சதவீதம் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில் இரண்டு நாட்கள் பயணமாகவே இவரது இந்த பயணம் தொடரப்பட்டது. பான்காங் ஏரிக்கு அவர் செல்ல விரும்பியதை அடுத்து இந்த லடாக் பயணம் தற்போது ஆறு நாட்களாக நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. ராகுல் காந்தியின் இந்த பயண்குறித்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அவர் இந்த பயணத்திற்கு கேடிஎம் பைக்கை பயன்படுத்தி இருப்பது கேடிஎம் பைக் பயன்பாட்டாளர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, August 21, 2023, 9:54 [IST]
English summary
Full details about ktm bike used by rahul gandhi to visit ladakh
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X