முதல் தயாரிப்பிலேயே எல்லாரையும் திரும்பி பாக்க வெச்சுட்டாங்க! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதுப்புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. அது கோதாவரி எப்ளூ ஃப்யோ (Godawari Eblu Feo) ஆகும்.
கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்புதான் எப்ளூ ஃப்யோ. இதுதான் இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ராய்ப்பூர் நகரில் உள்ள கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையில் எப்ளூ ஃப்யோ உற்பத்தி செய்யப்படுகிறது.

கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரே ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கப்பட்டன. தற்போது முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்யும் பணிகள் வரும் ஆகஸ்ட் 23ம் தேதியில் (நாளை) இருந்து தொடங்கப்படுகின்றன. கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 2.52 kW லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 110 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் (Range) ஆகும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகானமி, நார்மல், பவர் என கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மொத்தம் 3 ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், சைடு ஸ்டாண்டை எடுக்காவிட்டால் எச்சரிக்கும் சென்சார், நேவிகேஷனுக்காக ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி போன்ற வசதிகளும் (Features) கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 7.4 இன்ச் அளவில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. சியான் ப்ளூ, ஒயிட் ரெட், ஜெட் பிளாக், டெலி க்ரே மற்றும் டிராஃபிக் ஒயிட் என மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில், கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.
கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் 60 V திறனுடைய ஹோம் சார்ஜர் ஒன்றையும் வழங்குகிறது. இதன் மூலம் பேட்டரியை 5 மணி நேரம் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாக வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கோதாவரி எப்ளூ ஃப்யோ கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 110 கிலோ மீட்டர் ரேஞ்ச் என்பது உங்களின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். அத்துடன் தற்போது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு அதிநவீன வசதிகளும், கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது நிச்சயம் பலரை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோதாவரி எப்ளூ ஃப்யோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை (Price) 99,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே 1 லட்ச ரூபாய் என்ற விலையில் ஒரு நல்ல தரமான, அதிநவீன வசதிகள் கொண்ட மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் உடன் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








