ஆக்டிவா, ஸ்பிளெண்டரை எலெக்ட்ரிக் வண்டியா மாத்த இவ்ளோதான் செலவாகுமா! இது முன்னாடியே தெரியாம போச்சே!

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களை (Electric Two-wheelers) உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோலில் இயங்கும் டூவீலர்களை எலெக்ட்ரிக் டூவீலர்களாக மாற்றும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் கோகோஏ1 (GoGoA1) ஒன்றாகும்.

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை தலைமையிடமாக கொண்டு கோகோஏ1 நிறுவனம் இயங்கி வருகிறது. கோகோஏ1 நிறுவனத்தின் ஆரம்ப கட்ட தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் உற்சாகம் அடைந்த அந்த நிறுவனம் தற்போது, பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

Hero Splendor EV

கோகோஏ1 நிறுவனம் தற்போது பல்வேறு டூவீலர்களுக்கு, எலெக்ட்ரிக் வாகன கன்வெர்ஷன் கிட்-களை (EV Conversion Kits) விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த கிட்-களை பொருத்தினால், பெட்ரோலில் இயங்கும் டூவீலர்களை எலெக்ட்ரிக் டூவீலர்களாக மாற்றி கொள்ள முடியும். இவற்றுக்கு ஆர்டிஓ அனுமதி வழங்கப்படுகிறது என்பது முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

எனவே எலெக்ட்ரிக் டூவீலர்களாக மாற்றப்பட்ட தங்களது இரு சக்கர வாகனங்களை எடுத்து கொண்டு, அனுமதிக்காக ஆர்டிஓ அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் வீணாக அலைய வேண்டியதில்லை. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 50 டூவீலர்களுக்கு, எலெக்ட்ரிக் வாகன கன்வெர்ஷன் கிட்-களை கோகோஏ1 நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

GoGoA1 EV Conversion Kits

இதில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) மற்றும் ஹோண்டா (Honda) போன்ற மிகவும் பிரபலமான நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் அடங்கும். ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரின் மொத்தம் 5 வேரியண்ட்களுக்கு, கோகோஏ1 நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-கள் கிடைக்கின்றன.

இந்த கிட்-களை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. அத்துடன் பேட்டரி நீண்ட ஆயுளை வழங்கும். சரி, இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-களின் விலை (Price) எவ்வளவு? என நீங்கள் கேட்பது புரிகிறது. கோகோஏ1 நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே விலைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கான எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-டின் விலை 19,999 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜர் போன்றவற்றுக்கான கட்டணம் தனி. அதே நேரத்தில் மோட்டார்சைக்கிள்களுக்கான எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-களின் விலை 29,999 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜருக்கான கட்டணம் தனி.

செயல்திறன் மற்றும் ரேஞ்ச் ஆகியவை நீங்கள் தேர்வு செய்யும், எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-களை பொறுத்து மாறுபடும். இந்தியாவில் வரும் காலங்களில், பெட்ரோல் டூவீலர்களை எலெக்ட்ரிக் டூவீலர்களாக மாற்றுவதற்கான கன்வெர்ஷன் கிட்-களின் தேவை மிகப்பெரிய அளவில் உயரும் என கோகோஏ1 நிறுவனம் கருதுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக ஒரு எலெக்ட்ரிக் டூவீலரை வாங்குவதை காட்டிலும், ஏற்கனவே கைவசம் உள்ள பெட்ரோல் டூவீலரை, எலெக்ட்ரிக் டூவீலராக மாற்றி கொள்வது சிறந்தது. ஏனெனில் இதற்கு குறைவான செலவுதான் ஆகும். பெட்ரோல் டூவீலர்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் டூவீலர்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு.

எனவே பெட்ரோல் டூவீலர்களை எலெக்ட்ரிக் டூவீலர்களாக மாற்றுவது என்பது மிகவும் சிக்கனமான ஒரு நடவடிக்கை ஆகும். இதன் காரணமாக கோகோஏ1 நிறுவனத்தை போலவே, நாங்களும் கூட, வரும் காலங்களில் பெட்ரோல் டூவீலர்களை எலெக்ட்ரிக் டூவீலர்களாக மாற்றுவதற்கான கன்வெர்ஷன் கிட்-களுக்கு மிகப்பெரிய அளவில் டிமாண்ட் ஏற்படும் என கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 19, 2023, 19:06 [IST]
English summary
Gogoa1 rto approved ev conversion kits price all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+