ஸ்கூட்டர்களின் எஸ்யூவி! தைவான் நாட்டு கம்பெனி உருவாக்கிய புரோடெக்ட்!! சைஸில் ரொம்ப பெருசு...
கோகோரோ (Gogoro) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கிராஸ்ஓவர் என்ற பெயரில் வெளியீடு செய்துள்ளது. தைவான் நாட்டில் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தைவான் நாட்டில் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் கோகோரோ நிறுவனம் இந்தியாவிலும் அதன் மார்கெட்டை விரிவுப்படுத்தும் முனைப்பில் உள்ளது. இந்த நிலையில், இந்த இவி நிறுவனத்தில் இருந்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிராஸ்ஓவர் என்ற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கோகோரோ நிறுவனத்தில் இருந்து பல்வேறு விதமான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தைவான் உள்பட சில ஆசிய நாடுகளில் விற்பனையில் உள்ளன. ஆனால், அவை எதிலிலும் இல்லாத புதுமையாக, புதிய கிராஸ்ஓவர் ஓர் அட்வென்ச்சர் ஸ்டைல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாதாரண சாலைகளுக்கு மட்டுமின்றி, கரடு முரடான ஆஃப்-ரோடு சாலைகளுக்கும் கொண்டு செல்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
புதிய கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இரு சக்கரங்களை கொண்ட எஸ்யூவி என கோகோரோ நிறுவனம் அழைக்கிறது. இதற்கேற்ப, இந்த ஸ்கூட்டர் மிகவும் ரக்டான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றாட செயல்முறைகளுக்கு ஏற்றதாக, பல்வேறு விதங்களில் பயன்படுத்தக்கூடியதாக புதிய கோகோரோ கிராஸ்ஓவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு விதமான ஸ்டோரேஜ் பகுதிகளையும், ரைடிங் திறன்களையும் பெறுவதற்காக புதிய பிளாட்ஃபாரத்தில் கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளதாக கோகோரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆஃப்-ரோடு ஸ்கூட்டரில் 7.6 கிலோ வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி குறித்த விபரங்கள் இல்லை.
அதேபோல், பேட்டரியின் ரேஞ்ச் மற்றும் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஆகும் நேரம் உள்ளிட்ட விபரங்களும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. புதிய கோகோரோ கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒத்திசைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், டெலெஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க் மற்றும் ட்யூயல் ஷாக் அப்சார்பர் செட்அப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 12-இன்ச் சக்கரங்களில் இயங்கும். இந்த சக்கரங்களில் மேக்ஸிஸ் ட்யூயல்-பர்பஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹேண்டில் பாருக்கு மத்தியில் வண்ண நிறத்திலான டேஸ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஸ்கூட்டரை மொபைல் போன் உடன் இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் அனைத்து ரைடு டேடாக்களையும் பெற முடியும்.
கவர்ச்சிக்கரமான அம்சங்களாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில், க்ரூஸ் கண்ட்ரோல் வசதிகளை பெற கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என கோகோரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அட்வென்ச்சர் ஸ்டைல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைக்கு தைவான் நாட்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. ஆனால், சில வருடங்களில் கிராஸ்ஓவர் இந்தியாவிற்கும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வென்ச்சர் ஸ்டைல் இருசக்கர வாகனங்களை வாங்குவதில் நம் இந்தியர்கள் இன்னும் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளனர். இருப்பினும், இவ்வாறான வித்தியாசமான தோற்றத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாகுவது நல்லதே. ஏனெனில், இவ்வாறான வாகனங்கள் மலைப் பிரதேச பகுதிகளில் வசிப்போர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









