டெலிவரி பாய்ஸ்க்கு இனி பெட்ரோல் செலவே கிடையாது! சிங்கிள் சார்ஜ்ல 100 கி.மீ போற ஸ்கூட்டர் அடுத்த மாசம் வருது!

நீண்ட காத்திருப்பதற்குப் பிறகு ஒரு வழியாக கோகோரோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் தயாரிப்பை அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. எந்த வாகனத்தை அறிமுகப்படுத்தலாம் என்ற முடிவை நிறுவனம் எடுத்துள்ளது. அதற்கான தயாரிப்பையும் துவங்கியுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் மாதம் தனது முதல் தயாரிப்பை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கோகோரோ என்ற நிறுவனம் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். அந்நாட்டில் இந்நிறுவனம் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்நாட்டில் சிறப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் நிறுவனத்தில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது காலடித்தடத்தை எடுத்து வைத்து இந்தியாவிலேயே தனது வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

gogoro crossover launch

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் இந்நிறுவனம் கிராஸ் ஓவர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் நிறுவனத்தின் சர்வதேச போர்ட்போலியோவில் கடைசியாக சேர்க்கப்பட்ட ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரை தான் இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கோகோரோ கிராஸ் ஓவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசம்பர் மாதம் அறிமுகமானாலும், இதன் டெலிவரி என்பது 2024 ஆம் ஆண்டு முதல் பாதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோகோரோ நிறுவனம் தனது தயாரிப்புகளை பி2பி பார்ட்னர்களுக்கு விற்பனை செய்யவே அதிகம் முனைப்பை காட்டுகிறது. முக்கியமாக சோமாட்டோ, ஸ்விகீ நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்களுக்கு இந்த வாகனத்தை விற்பனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

gogoro crossover launch

அதற்கு அடுத்த முயற்சியாக பொது மக்களுக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 12,300 கோடியை முதலீடு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்நிறுவனம் தனது ஆலையை அமைத்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை அதிகமான சரக்குகளை ஏற்றி செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்டீல் ட்யூப்ளர் ஃபிரேம்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1400மிமீ வீல் பேஸ் நீளம் வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற கோகோரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வீல் பேஸை விட அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டரின் பின்பக்கமும் சரி முன்பக்கம் உள்ள ஃபூட்போர்டு பகுதியிலும் சரி சரக்குகளை ஏற்றி செல்லும் வசதி இருக்கிறது. இதுபோக எல்இடி ஹெட்லைட் மெட்டல் பிராக்கெட் உடன் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முன்பக்கம் ரேக் வேண்டுமானால் தனியாக பொருத்திக் கொள்ள முடியும்.

gogoro crossover launch

ஃப்ளோர் போர்டு பகுதியும் பெரிதாக பெரிய பையை எடுத்து செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் சரக்குகளை எடுத்துச் செல்ல தனியாக ஆக்சஸரீஸ்களை அந்நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்க சீட்டை மடித்துக் கொள்ளும் வகையில் நிறுவனம் வழங்கியுள்ளது. அது மட்டுமல்ல பின்பக்க சீட்டை மொத்தமாக கழட்டி எக்ஸ்ட்ரா லக்கேஜை வைத்துக்கொள்ள வசதிகள் உள்ளது.

இதன் சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் போர்க் சஸ்பென்ஷனும் பின்பக்கம் ஷாக் அப்சர்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. 12 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் 220மிமீ மற்றும் பின்பக்கம் 180மிமீ டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கில் 142மீமி கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் பேட்டரியுடன் சேர்த்து மொத்தம் 126 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

gogoro crossover launch

இந்த ஸ்கூட்டரில் மொத்தம் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பேட்டரியும் சுமார் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பேட்டரியை கழட்டி மாட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதை கழட்டி மாட்ட வெறும் 6 நொடிகள் தான் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால் இரண்டு பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு மற்ற இரண்டு பேட்டரியில் வாகனம் ஓட்ட முடியும்.

அந்த வாகனம் தனது பேட்டரி சார்ஜை இழக்கும் முன்பு சார்ஜ் போட்டிருக்கும் பேட்டரியில் சார்ஜ் ஏறிவிடும். இதனால் எந்த வித காலதாமதம் இல்லாமல் தொடர்ந்து இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி திறன் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மோட்டாரை பொறுத்தவரை 7கிலோவாட் பவரை வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 26.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் பேட்டரியை பொருத்தவரை சர்வதேச மார்க்கெட்டில் ஒரு ஒரு பேட்டரியும் 1.6 கிலோ வாட் ஹவர் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் முழு சார்ஜில் 100 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த கோகோரோ கிராஸ் ஓவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் இந்தியாவிலேயே உதிரிபாகங்களை வாங்கி இந்தியாவில் வைத்து தனது உற்பத்தியை செய்கிறது. இதனால் இந்த ஸ்கூட்டரின் விலை கம்மியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை ஸ்வாப் செய்து சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற வசதி இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பயன்பாட்டின்போது அதன் செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோபுர நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷனை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிறுவனம் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோகோரோ நிறுவனம் அடுத்த மாதம் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம் அறிமுகமானாலும், இதன் டெலிவரி 2024ம் ஆண்டு முதல் பாதியில் செய்யப்படும் என செய்யப்படுகிறது. இது பொதுமக்கள் விற்பனைக்கு பின்னர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 7:00 [IST]
English summary
Gogoro crossover launch in december brands first electric scooter india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X