என்னது 60 ஆயிரத்திற்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? எவ்ளோ ரேஞ்ச் தரும்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
ஓலா நிறுவனத்திற்கு போட்டியாக குறைந்த விலையில் கோகோரோ நிறுவனம் ஜிஎஸ் 250 என்ற குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஃபேம் 2 கட்டுப்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்ட பின்பு இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமான அளவு அதிகரித்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் தான். அந்த செக்மெண்டில் விற்பனை சற்று மந்தமடைந்தது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க பல்வேறு யோசனைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஓலா நிறுவனமும் தற்போது குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து தைவான் நாட்டின் நிறுவனமான கோகோரோ இந்தியாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் டிரெண்டில் இணைந்துள்ளது. இதனால் இந்நிறுவனம் ஓலா, ஏத்தர் போன்ற பெரு நிறுவனங்களுக்கு போட்டியாக வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது.
கோகோரோ நிறுவனத்திடம் தற்போது சூப்பர் ஸ்போர்ட்ஸ் மற்றும் 2 சீரியஸ் ஆகிய வாகனங்கள் விற்பனையில் இருக்கிறது. இவை இரண்டும் ஸ்மார்ட் வாகனங்களாக உள்ளன. இதுபோக கோகோரோ டிலைட், விவா, எஸ்1 ஆகிய வாகனங்கள் தற்போது விற்பனையில் உள்ளன. இந்த ஆண்டு துவக்கத்தில் கோகோரோ 2 பிளஸ் ஸ்கூட்டருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லாம் 7கிலோவாட்டிற்க்கும் அதிகமான பவர் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது. இந்நிலையில் கோகோரோ நிறுவனம் புதிய குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு கோகோரோ ஜிஎக்ஸ்250 என பெயர் வைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட குறைவான விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அரசு வழங்கிய அனுமதி சான்றிதழ் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த கோகோரோ ஜிஎஸ் 250 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. எல் 1 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் அதிகபட்சம் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இன்ஜின் அல்லது 50 சிசிக்கும் குறைவான இன்ஜின் கொண்ட வாகனமாக இருக்கும்.

கோகோரோ ஜிஎஸ் 250 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.471 கிலோ வாட் பவரையும் ஒரு மணி நேரத்துக்கு 24 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனையும் அதே நேரம் 2.29 கிலோ வாட்டை 54.8 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனும் கொண்டதாக வடிவமைக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் பேட்டரியை பொருத்தவரை 37.2 ஆம்ஸ் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 1.6126 கிலோ வாட் ஹவர் பேட்டரி அளவு கொண்டதாக இருக்கிறது. இது முழு சார்ஜில் 112 கிலோமீட்டர் ரேஞ்சை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை பொருத்தவரை 10.3 கிலோ எடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை போர்ட்டபிள் பேட்டரியாக பொருத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அளவை பொருத்தவரை 1425 மிமீ வீல் பேஸூம், 650மிமீ அகலமும், 1980 மிமீ நீளமும், 1165 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது மொத்தமாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 772 கிலோ எடையுடன் இரண்டு பேர் பயணிக்க கூடிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்க முடியும். சிட்டி பயன்பாட்டிற்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக ஏற்றதாக இருக்கும். அதுவும் பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம் இருப்பதால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மக்கள் அதிகம் விரும்ப வாய்ப்புள்ளது.
இதன் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 60,000 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இப்படி விற்பனைக்கு வந்தால் இது மார்க்கெட்டில் உள்ள ஓலா உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோகோரோ நிறுவனத்தின் இந்த குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சய மக்கள் மத்தியில் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக லாஸ்ட் மைல் டெலிவரி செய்யும் நபர்களுக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயம் உதவியாக இருக்கும். இதில் உள்ள பேட்டரி மாற்றும் தொழில்நுட்பம் மற்றும் நீண்ட ரேஞ்ச் ஆகியவை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை அந்த செக்மெண்டில் அதிகமாக்கலாம்.


Click it and Unblock the Notifications









