பேட்டரியை கழட்டிக் கொடுத்தா புது பேட்டரி கிடைக்கும்!! சார்ஜிங் ஸ்டேஷனில் லைனில் நிற்க தேவை இல்ல!
கோகோரோ (Gogoro), பேட்டரி-ஸ்வாப்பிங் ஈக்கோ சிஸ்ட துறையில் ஆசிய அளவில் முன்னணியில் இருக்கும் தொழிற்நுட்ப நிறுவனம் ஆகும். இந்தியாவில் இந்த நிறுவனம் தற்போது பேட்டரி ஸ்வாப்பிங் ஈக்கோ சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன், கிராஸ்ஓவர் ஜிஎக்ஸ்250 என்ற பெயரில் புதியதாக ஓர் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் வெளியீடு செய்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டுமெனில், நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேநேரம் சில நிறுவனங்கள் வேறு வித்தியாசமாக யோசித்து, பேட்டரி-ஸ்வாப்பிங் முறையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுவர முயற்சிக்கின்றன.

பேட்டரி-ஸ்வாப்பிங் ஈக்கோ சிஸ்டத்தில் பல்வேறு ஆராய்ச்சிக்களை செய்து புது, புது கண்டுப்பிடிப்புகளை கொண்டுவரும் நிறுவனம் கோகோரோ ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் பேட்டரி-ஸ்வாப்பிங் ஈக்கோ சிஸ்டம் ஆனது முதற்கட்டமாக டெல்லி மற்றும் கோவாவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
முதற்கட்டமாக இந்த பேட்டரி-ஸ்வாப்பிங் சேவையை பிஸ்னஸ்-டூ-பிஸ்னஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க கோகோரோ திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த சேவையை சில காலத்திற்கு பொது மக்களால் பயன்படுத்த முடியாது. வணிக நிறுவனங்கள் மட்டுமே கோகோரோ உடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு பயன்படுத்த உள்ளன.

அதேபோல், கோகோரோ நிறுவனம் தற்போது வெளியீடு செய்துள்ள கிராஸ்ஓவர் ஜிஎக்ஸ்250 எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் முதற்கட்டமாக டெல்லி, கோவாவில் வணிக நிறுவனங்களுக்காக விற்பனைக்கு கிடைக்கவுள்ளன. டெல்லி, கோவாவை தொடர்ந்து, மும்பை மற்றும் புனேவில் கோகோரோவின் பேட்டரி-ஸ்வாப்பிங் ஈக்கோசிஸ்டம் மற்றும் கிராஸ்ஓவர் ஜிஎக்ஸ்250 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிற 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்து கிடைக்கும்.
கோகோரோவின் முதல் மேட்-இன்-இந்தியா எலக்ட்ரிக் ஸ்கூட்டரான கிராஸ்ஓவர் ஜிஎக்ஸ்250 மும்பை மற்றும் புனேவிலும் 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்தே, பொது மக்களுக்கு 2024ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள ஜி.எக்ஸ்250 உள்பட கோகோரோவின் கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரீடிசைன் செய்யப்பட்ட ஆல்-டெர்ரன் ஃப்ரேமில் வடிவமைக்கப் படுகின்றன.

இத்தகைய ஃப்ரேமில் உருவாக்கப்படுவதால், கோகோரோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் விசாலமான இடவசதி கிடைப்பது மட்டுமின்றி, சிறப்பான பயணம் அனுபவமும் பயணிகளுக்கு கிடைக்கிறது. அத்துடன், கோகோரோ கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ்சேஷன் செய்துக் கொள்வதும் எளிதாக இருக்கிறது.
புதிய கிராஸ்ஓவர் ஜி.எக்ஸ்250 ஸ்கூட்டர் வெளியீட்டை தொடர்ந்து மேலும் இரு கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியீடு செய்ய கோகோரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிராஸ்ஓவர் 50 மற்றும் கிராஸ்ஓவர் எஸ் என்பன அந்த 2 கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இவற்றின் இந்திய வெளியீடு அடுத்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோகோரோ நிறுவனத்தை பற்றி இந்தியாவில் பலர் கேள்விப்படாமல் இருக்கலாம். ஆனால், தைவான் மற்றும் சீனாவில் இந்த இவி பேட்டரி சார்ஜிங் செல்யூஷன் நிறுவனம் பிரபலமானதாக உள்ளது. தற்போது இந்திய மார்க்கெட்டிலும் அதிரடியாக நுழைந்துள்ள இந்த தைவான் நாட்டு நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் உடனடியாக வெளியீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









