பெட்ரோல் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் திடீரென நிறுத்தம்! தலையில குண்டை தூக்கி போட்டுட்டாங்க! அரசின் அதிரடியால் ஷாக்!

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்துவதால், இந்தியாவில் அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுடன், பல்வேறு மாநிலங்களின் அரசுகளும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles), சிஎன்ஜி வாகனங்கள் (CNG Vehicles) மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் (Hybrid Vehicles) பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. இந்த சூழலில் சண்டிகர் நகரில் தற்போது மிகவும் அதிரடியான நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. சண்டிகர் நகரில், 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதியில் இருந்து (நேற்று) எலெக்ட்ரிக் அல்லாத டூவீலர்களை பதிவு செய்யும் பணிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பெட்ரோல் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் திடீரென நிறுத்தம்! தலையில குண்டை தூக்கி போட்டுட்டாங்க! அரசின் அதிரடியால் ஷாக்!

எதுக்காக?

இதன்படி சண்டிகரில் எலெக்ட்ரிக் அல்லாத டூவீலர்களை பதிவு செய்யும் பணிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது பெட்ரோல் மூலம் இயங்கும் டூவீலர்களை பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி வரும் மார்ச் 31ம் தேதி வரை சண்டிகரில் பெட்ரோல் மூலம் இயங்கும் டூவீலர்கள் பதிவு செய்யப்படாது. எலெக்ட்ரிக் டூவீலர்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். எலெக்ட்ரிக் டூவீலர்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீங்க என்ன சொல்றீங்க?

பெட்ரோல் மூலம் இயங்கும் டூவீலர்களை பதிவு செய்யும் பணிகளை நிறுத்தியுள்ளதால், சண்டிகர் மக்கள் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு அதிகளவில் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சண்டிகர் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. இதற்கிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இன்னும் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் சண்டிகர் நிர்வாகம் எடுத்து வருகிறது.

பெட்ரோல் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் திடீரென நிறுத்தம்! தலையில குண்டை தூக்கி போட்டுட்டாங்க! அரசின் அதிரடியால் ஷாக்!

இந்த சலுகைலாம் கூட குடுக்கறாங்களா!

இதன் ஒரு பகுதியாக சண்டிகர் நகரில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு சாலை வரியில் இருந்து சண்டிகர் நிர்வாகம் தள்ளுபடி வழங்கி கொண்டுள்ளது. இதுதவிர ஹைப்ரிட் வாகனங்களுக்கும் கூட சாலை வரியில் இருந்து தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருவதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்...

சண்டிகர் மட்டுமல்லாது டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்களை திருப்புவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது, பதிவு செய்யும் பணிகளை நிறுத்துவது, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவது போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாக கூறலாம். எனவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இறுதி அத்தியாத்தை நெருங்கி கொண்டுள்ளன.

தெளிவா புரிஞ்சு போச்சு!

அரசாங்கங்களின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அதனை தெளிவாக எடுத்து காட்டுகின்றன. அத்துடன் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை வழங்க வேண்டும் என்ற ஆர்வமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளதால், இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதேபோல் இந்திய சந்தையில் சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனையும் முன்னேற்ற பாதையில் செல்ல தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் இறங்கிய முன்னணி நிறுவனங்கள்!

எனவே டாடா (Tata), மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), எம்ஜி மோட்டார் (MG Motor), மஹிந்திரா (Mahindra) மற்றும் டொயோட்டா (Toyota) போன்ற பல்வேறு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் அல்லாத மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை அடுத்தடுத்து விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை மட்டும் தனியாக எடுத்து கொண்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அங்கு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 11, 2023, 12:42 [IST]
English summary
Government stops petrol two wheelers registration all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+