இந்த இ-பைக்குல குமரி-டூ-லடாக் அசால்டா போகலாம்... இந்த விஷயத்துல விருதே வாங்கியிருக்கு!
அதிக தூரத்தை குறைவான நேரத்தில் கடந்து சாதனைப் படைத்த எலெக்ட்ரிக் பைக்கை கிரேவ்டன் மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் கிரேவ்டன் மோட்டார்ஸ். இது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது புகழ்மிக்க இருசக்கர வாகன மாடலான குவாண்டா எலெக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது ஓர் வேர்ல்டு ரெக்கார்டு சாதனைப் படைத்த வாகனம் ஆகும்.

இடையில சார்ஜே பண்ணல
கன்னியாகுமரி முதல் கர்துங் லா வரை குறைவான நேரத்திலும், இடையில் சார்ஜ் செய்யாமலும் பயணித்த ஒரே எலெக்ட்ரிக் பைக் இதுவாகும். நீங்கள் நினைப்பது சரிதான் இந்த வாகனத்தை சார்ஜ் செய்யவில்லை. அதற்கு பதிலாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் ஸ்வாப்பிங் முறையில் மாற்றப்பட்டே அது இயக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே தமிழ்நாட்டின் குமரி தொடங்கி லடாக்கின் கர்துங் லா பகுதி வரை கிரேவ்டனின் குவாண்டாவால் பயணிக்க முடிந்திருக்கின்றது.
விருது பெற்ற வாகனம்
இது அவ்வளவு சாதாரணமான சாதனை அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. 4,011 கிமீ தூர இடைவெளிக் கொண்டதே இந்த பயணம் ஆகும். எனவேதான் உலக சாதனையாக கருதப்பட்டு இதற்கான விருதும் குவாண்டாவுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கையே கிரேவ்டன் நிறுவனம் உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி அழகுப் பார்த்திருக்கின்றது.

மோட்டார் திறன்
கிரேவ்டன் குவாண்டா எலெக்ட்ரிக் பைக்கில் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 3 kW பவர் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் குவாண்டாவில் வழங்கப்பட்டுள்ளது.
ரைடிங் மோட்கள் விபரம்
எகனாமி (வேகம் குறைவான மோட்), சிட்டி மோட் மற்றும் ஸ்போர்ட் (இந்த மோடில் அதிக வேகத்தில் பயணிக்க முடியும்) ஆகிய மோட்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய மோடாக எகனாமி இருக்கின்றது. இது ஓர் ஃபுல் சார்ஜில் 150 கிமீ ரேஞ்ஜை வழங்கும். சிட்டி மோடில் 110 கிமீ ரேஞ்ஜும், ஸ்போர்ட் மோடில் 85 கிமீ ரேஞ்ஜும் குவாண்டா வழங்கும். இதன் ரேஞ்ஜ் திறனை 320 கிமீ வரையில் உயர்த்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பேட்டரி பேக் விபரம்
டூயல் பேட்டரி பேக்கை வாங்கிக் கொள்வதனால் இந்த அளவு அதிக ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். இதன் 3 kWh பேட்டரி பேக்கை வெறும் மூன்று மணி நேரங்களிலேயே சார்ஜ் செய்து கொள்ள முடியும். அதேவேளையில், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை 90 நிமிடங்களிலேயே ஏற்றிக் கொள்ள முடியும். இதை உச்சபட்ச காத்திருப்பு நேரமாக நீங்கள் கருதினால், பேட்டரி ஸ்வாப் முறை வாயிலாக பேட்டரியை மாற்றிக் கொண்டு சார்ஜ் செய்யும் நேரத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தையே நிறுவனம் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் கிரேவ்டன் காட்சிப்படுத்தி இருக்கின்றது. குவான்டாவின் சேடில் உயரம் 785 மிமீட்டராகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 195 மிமீட்டராகவும் இருக்கின்றது. மேலும், இருசக்கர வாகனத்தில் 17 அங்குல வீலே முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








