மத்திய அரசுக்கே விபூதி அடிக்க பார்த்த பிரபல டூ-வீலர் உற்பத்தி நிறுவனம்.. கோடி கோடியா சுருட்ட பாத்திருக்காங்க!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று மத்திய அரசாங்கத்திற்கே விபூதி அடிக்க பார்த்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனைக் கண்டித்து ரூ. 124 கோடியை திரும்பி தருமாறு அந்நிறுவனத்திற்கு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை தற்போது பலமடங்குக் குறைந்துக் காணப்படுகின்றது. இதற்கு மத்திய அரசு முன்னெடுத்து வரும் முன்னோடி திட்டங்களே காரணம் ஆகும். அரசு ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே எலெக்ட்ரிக் வாகனங்கள் பலவற்றின் விலை நம்பட முடியாத அளவிற்கு பல மடங்கு குறைவாகக் காணப்படுகின்றது.

Greaves cotton fame 2 violations

அரசு சார்பில் மானியம் வழங்கப்படவில்லை எனில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெறும் பணக்காரர்களுக்கான வாகனமாக மட்டுமே இருந்திருக்கும். இந்த நிலை நாட்டில் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அரசு ஃபேம் 2 திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்கீழ் அனைத்து விதமான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் விளைவு நாட்டில் ஏழை மற்றும் எளிய மக்களும் பயன்படுத்தக் கூடிய வாகனங்களாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மாறி இருக்கின்றன. ஆனால், இந்த திட்டத்தை சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்தின்கீழ் ஓர் எலெக்ட்ரிக் வாகனம் மானியம் பெற வேண்டும் எனில் குறிப்பிட்ட சில தகுதிகளை அந்த இ-வாகனம் கொண்டிருக்க வேண்டும்.

Greaves electric mobility escooters

மேட்-இன் இந்தியா வாகனமாக அது இருத்தல் வேண்டும். இதுவே முதன்மையான தகுதியாகும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகனங்களால் வாகனம் உருவாக்கப்படும் எனில் அதற்கு மானியம் திட்டம் பொருந்தாது. இந்த முக்கிய கொள்கையையே சில மின்வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீறி இருப்பதாக அரசுக்கு அண்மையில் புகார்கள் பறந்திருக்கின்றன.

இந்த புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட சில மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீது அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அந்த நிறுவனங்களுக்கு வழங்கி வந்த அத்தனை சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக மானியம் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே ஓர் நிறுவனம் ஃபேம்-2 திட்டத்திற்கான விதிகளை பூர்த்தி செய்யாமலே அதன் பலன்களை அனுபவித்து வந்திருப்பது மத்திய அரசுக்கு தெரிய வந்திருக்கின்றது.

அந்த நிறுவனத்தின்மீது தற்போது கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்கத் தொடங்கி இருக்கின்றது. பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கிரீவ்ஸ் காட்டனே குளறுபடியில் ஈடுபட்ட நிறுவனம் ஆகும். இந்த காரணத்திற்காகவே அது தற்போது அரசின் கடுமையான நடவடிக்கையில் சிக்கி இருக்கின்றது.

இந்த நிறுவனம் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். கொள்கை விதி மீறலில் இந்த நிறுவனம் ஈடுபட்டதன் காரணத்தினால் தற்போது ரூ. 124 கோடியை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கனரக தொழில்துறை அமைச்சகம் (Ministry of Heavy Industries) வாயிலாக எழுத்துப்பூர்வமான கடிதம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், ஃபேம்-2 திட்டத்திற்கான நிறுவனத்தின் பதிவையும் அமைச்சகம் ரத்து செய்ய முன் மொழிந்திருக்கின்றது. ஆகையால், இனி நிறுவனத்திற்கு ஃபேம்-2 திட்டத்தின் எந்த சலுகையும் கிடைக்காது என்கிற நிலை உருவாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இருக்கும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், தாங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும், உள்ளூர் உற்பத்திகளுக்கும் அதிக மதிப்பளிப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுதவிர, அரசின் உள்ளூர்மயமாக்கல் பார்வைக்கு தாங்கள் பேராதரவை வழங்கி வருவதாகவும் கூறி இருக்கின்றது. மேலும், விரைவில் இந்த பிரச்னையில் சுமூகமான தீர்வு எட்டப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு அதன் பேட்டரியின் கிலோவாட் திறனைப் பொருத்தே மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.

பேட்டரியின் ஒரு kWh ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகின்றது. உதாரணமாக ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சம் எனில் அந்த வாகனத்தில் 2kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எனில், அந்த வாகனம் மானியம் திட்டத்தின்கீழ் ரூ. 80 ஆயிரத்திற்கு பொதுமக்களுக்கு விற்பனைச் செய்யப்படும்.

இத்தகைய சூப்பரான திட்டத்தின்கீழ் தங்கள் நிறுவனம் பலன் பெற வேண்டியே சில குளறுபடிகளில் கிரீவ்ஸ் காட்டன் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கான பலனையே தற்போது நிறுவனம் அனுபவிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஒரு kWh பேட்டரி பேக்கிற்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டது. ஆனால், இதனையே மத்திய அரசாங்கம் ஒரு kWh பேட்டரி பேக்கிற்கு ரூ. 15 ஆயிரமாக குறைத்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த காலங்களில் மிக மிக அரிதாக மட்டுமே மின்சார வாகனங்கள் காட்சியளித்து வந்தன. ஆனால் இப்போது சாலையில் கண்களில் படும் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாகவே இருக்கின்றன. இதில் ஃபேம்-2 திட்டத்தின் பங்களிப்பு அளப்பறியாதது. பட்டி, தொட்டி எங்கும் மின்சார வாகனங்கள் தற்போது பரவிக் காணப்படுவதற்கும் ஃபேம்-2 திட்டமே காரணமாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 28, 2023, 8:29 [IST]
English summary
Greaves electric mobility fame 2 violations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+