இவ்ளோ கம்மி விலையில் இவ்ளோ சூப்பரான இ-ஸ்கூட்டரா! ஓலா, ஹீரோ எலெக்ட்ரிக்-லாம் கை கட்டிதான் நிக்கணும் போலிருக்கே!
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility)-க்கு சொந்தமான நிறுவனம் ஆம்பியர் (Ampere). இது ஓர் ஸ்டார்ட்-அப் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்திய இளைஞர்களைக் கவரும் விதமாக ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
ஆம்பியர் ஜூல் இஎக்ஸ் (Ampere Zeal EX) எனும் மாடலையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் என்ட்ரீ லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டருக்கு லேசான ஸ்போர்ட்டி தோற்றத்தை ஆம்பியர் வழங்கி இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 69,900 என்கிற மிகக் குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

குறைவான நாட்களுக்கு மட்டுமே இந்த மலிவு விலையில் கிடைக்கும்
இந்த மலிவு விலையில் இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே ஜூல் இஎக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விலை குறைவான தயாரிப்பாக இருந்தாலும் இதில் சிறப்பு வசதிகளை கஞ்சத் தனமின்றி ஆம்பியர் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக ஜூல் இஎக்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஓர் முழுமையான சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 120 கிமீ வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
பேட்டரி பேக் விபரம்
இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக ஆம்பியர் ஜூல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60V, 2.3 KWh திறன் கொண்ட அட்வான்ஸ்டு லித்தியம் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார மோட்டாரை பொருத்தவரை 1.8 KW திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டாப் ஸ்பீடு
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ முதல் 55 கிமீ ஆகும். இந்த வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் டிரம் பிரேக் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் ட்வின் ட்யூபும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான வாகனமாகவே ஆம்பியர் ஜூல் இஎக்ஸ் இந்திய மின்வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் பக்கம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக சிறப்பு சலுகை ஒன்றை ஆம்பியர் அறிவித்துள்ளது. ஜூல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு பலன்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பலன் திட்டம் மத்திய பிரதேசம், பிஹார், உத்தர் பிரதேசம் மற்றும் ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எப்போது வரை மலிவு விலையில் வாங்கிக்க முடியும்
இதேபோல், மேலே பார்த்த அறிமுக விலையும் இந்த மாநில வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 69,900 என்கிற விலையில் ஜூல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர்களால் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு பின்னர் சற்று உயர்வான விலையில் ஜூல் இஎக்ஸ் விற்கப்பட இருக்கின்றது.
அதேவேளையில், தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் ரூ. 75 ஆயிரத்திற்கும் அதிகமான விலையில் இதனை விற்க ஆம்பியர் முடிவு செய்யதிருக்கின்றது. இந்த விலையும் இன்னும் சில தினங்களில் மாற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி உள்ளன. ஆகையால், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே இந்த மலிவு விலையில் ஜூல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

150 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 150 கிலோ வரையில் எடையை தாங்க முடியும். ஆகையால், சற்று கொழு கொழுவென நபர்களாலும் இந்த வாகனத்தை பயன்படுத்தி பயணிக்க முடியும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் ஜூல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஸ்டோன் கிரே (Stone Grey), ஐவரி ஒயிட் (Ivory White) மற்றும் இன்டிகோ ப்ளூ (Indigo Blue) ஆகியைவே அவை ஆகும்.
ஆம்பியர் நிறுவனம் நேற்றைய தினமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்தை மட்டுமின்றி மற்றுமொரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹை-ஸ்பீடு திறன் கொண்ட வாகனமாக தயாரிக்கப்பட்டு இருக்கும் ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus) மாடலையே அது அறிமுகம் செய்தது. இதற்கு அறிமுகமாக ரூ. 1.09 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









