ராயல் என்ஃபீல்டுக்கு ரவுண்டு கட்டிட்டாங்க! இரண்டாவது பைக்கையும் தயார் செய்த ஹார்லி டேவிட்சன்! பெயர் தெரியுமா?

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது பைக்கை வெளியிட தயாராகி வருகிறது. இந்த மாதம் தான் தனது முதல் பைக்கான எக்ஸ் 440 என்ற பைக்கை அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், இரண்டாவது பைக்காக நைட்ஸ்டர் 440 என்ற பைக் வெளியாகவுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹார்லிடேவிட்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு எப்படியாவது இந்தியாவில் தன் மார்கெட்டை பிடிக்க வேண்டும் என முடிவு செய்தது. இதறால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. அதன்படி ஹார்லி பைக்குகளை ஹீரோ நிறுவனம் தயாரித்து தர அதை ஹார்லி பிராண்டில் விற்பனை செய்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

harley davidson nightster 44

இந்த ஒப்பந்தத்தின் படி ஹார்லிடேவிட்சன் இந்தியாவிற்கு முதல் பைக்காக எக்ஸ் 440 என்ற பைக்கை இந்த மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் ஒரு ஹார்லிடேவிட்சன் பைக் வருகிறது என்றால் சும்மாவா? மக்கள் இந்த பைக்கை வாங்க ஈ போல மொய்க்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் ஹார்லி நிறுவனம் தனது 2வது பைக்கை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் "நைட்ஸ்டர் 440" என அந்த பைக்கிற்கு பெயரை வைத்துள்ளது. இந்த பைக் இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கனவே வெளியான எக்ஸ் 440 பைக்கை போல இதுவும் 440சிசி இன்ஜின கொண்ட பைக் தான்.

harley davidson nightster 440

இந்த நைட்ஸ்டர் என்ற பைக் ஒன்று ஹார்லிடேவிட்சன் நிறுவனத்திற்கு புதிது கிடையாது. ஏற்கனவே இந்த பெயரில் 975 சிசி வி-டிவின் இன்ஜின் பைக் இருக்கிறது. இது பான் அமெரிக்காவின் 1250 சிசி இன்ஜினிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்போர்ட் ரேஞ்ச் பைக்குகளில் ஒன்று. இதனால் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் நைட்ஸ்டர் பைக் ஏற்கனவே அறிமுகமாகன எக்ஸ் 440 பைக்கின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கின் ஸ்டைலிங்கை பொருத்தவரை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது நைட்ஸ்டர் 975 சிசி இன்ஜின் பைக்கின் அதே போல தான் வடிவமைக்கப்படும் என தெரிகிறது. இருந்தாலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம். சீட்டிங் போஷிசன், சேஸிஸ் அட்ஜெஸ்ட்மென்ட், ஆகிய மாற்றங்கள் இருக்கலாம்.

harley davidson nightster 440

இன்ஜினில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. இன்ஜினை பொருத்தவரை ஏற்கனவே ஹார்லியிடம் உள்ள 440 இன்ஜினை சற்று டியூன் செய்து அதிக பவருடன் வரும் என எதிர்பார்க்கலாம் அதனால் தான் இது ஸ்போர்ட்டி மாடலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ் 440 பைக்கிலும் இந்த நைட்ஸ்டர் பைக்கிலும் ஒரே மாதிரியான இன்ஜின் தான் இருக்கும்.

இந்த பைக் மார்கெட்டில் நேரடி போட்டியாக ராயல் என்ஃபீல்டு, ஹோண்டா, மற்றும் டிரையம்ப் ஆகிய நிறவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் மூலம் இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மட்டும் கையில் வைத்திருக்கும் மிகப்பெரிய மார்கெட்டை ஹார்லிடேவிட்சன் உடைக்கப்பார்க்கிறது. ஹார்லிடேவிட்சன் குறைவான விலையில் இந்தியாவில் களம் இறங்குவது அதன் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஒரு பக்கம் என்றால் இதே செக்மெண்டில் தான் டிரையம்ப் நிறுவனமும் பஜாஜ் நிறுவனத்துடன் சேர்ந்து களம் இறங்குகிறது. இந்த இரு நிறுவனங்களும் சேர்த்து ராயல் என்ஃபீல்டை தான் குறை வைத்துள்ளனர். இப்படி சுத்தி வளைச்சு ராயல் என்ஃபீல்டிற்கு கட்டம் கட்ட பார்க்கும் போட்டி நிறுவனங்களுக்கு ராயல் என்ஃபீல்டு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதை பொருத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹார்லிடேவிட்சன் மீண்டும் களம் இறங்குவதே மிகப்பெரிய சந்தோஷனமான விஷயம் தான் அதுவும் குறைவான விலையில் எளிய மக்களும் வாங்கும் வகையில் பைக்குகளை தயாரித்து வெளியிடுவது டபுள் சந்தோஷம் தான். இந்நிலையில் இரண்டாவது பைக்காக நைட்ஸ்டர் 440 பைக் அறிமுகமாகனால் அந்த பைக்கிற்கும் மார்கெட்டில் செம மவுசு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 26, 2023, 11:04 [IST]
English summary
Harley davidson is developing nightster 440 as their second bike after x440
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X