Harley-Davidson Pan America 1250 அறிமுகம்.. விலையில் இன்னோவா ஹைகிராஸையே மண்டியிட செய்யும்!
ஹார்லி டேவிட்சன் அதன் 2023 பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் (Harley Davidson Pan America 1250 Special) அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கிற்கு ஓர் நடுநிலை சொகுசு வசதிகளைக் கொண்ட கார்களுக்கு இணையான விலையை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது.
ஆம், 24.49 லட்ச ரூபாயையே விலையாக அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தொகையில் நான்கு ஆல்டோ கார்களையே வாங்கிவிட முடியும். ஏன் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் வேரியண்டின் உயர்நிலை வேரியண்டையே நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

இன்னோவா ஹைகிராஸ் ஜிஎக்ஸ் 8-சீட்டர் (பெட்ரோல்), இந்தியாவில் ரூ. 19.45 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றது. இதைவிட கிட்டதட்ட ஐந்து லட்சம் ரூபாய் அதிகம் விலைக் கொண்டதாகவே பான் அமெரிக்கா 1250 அட்வென்சர் டூரர் பைக் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், இது இன்னோவா ஹைகிராஸ் காரைக் காட்டிலும் காஸ்ட்லியான பைக்காக காட்சியளிக்கின்றது. மேலும், பான் அமெரிக்கா 1250 அட்வென்சர் டூரரின் ஸ்பெஷல் ட்ரிம் மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது உயர் நிலை தேர்வாகும். முன்னதாக விற்பனைச் செய்யப்பட்ட ஸ்டாண்டர்டு வேரியண்ட் விற்பனையில் இருந்து தற்போது அகற்றப்பட்டு இருக்கின்றது.

பெரியளவில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாமலேயே இந்த பைக்கை ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. சிறப்பு வசதியாக அலாய் மற்றும் ஸ்போக் வீல் ஆப்ஷனை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், கூடுதலாக ட்யூப்லெஸ் டயர் தேர்வையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு பிரீமியம் தொகை ரூ. 1 லட்சம் ஆகும் என கூறப்படுகின்றது.
பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக ஹார்லி டேவிட்சனின் இந்த பான் அமெரிக்கா 1250 பைக் இருக்கின்றது. இதில் டிராக்சன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக்காக லிங்க் செய்யப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் எஞ்ஜின் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ரைடிங் அனுபவத்தை கூடுதல் சுவாரஷ்யமனதாக மாற்றிக் கொள்ள ஏதுவாக ஐந்து ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில், மூன்றை பயனர் தனக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு இயக்கத்தையும் அலாதியானதாக மாற்றக் கூடிய சூப்பரான சஸ்பென்ஷன்களே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
47 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் எலெக்ட்ரானிக்களாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதிக் கொண்ட செமி-ஆக்டீவ் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவையே பான் அமெரிக்கா 1250 பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம் முன் பக்கத்திலும், ஃப்ளோட்டிங் ரக சிங்கிள் பிஸ்டன் காலிபர் பின் பக்கத்திலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன், பைக்கின் ரைடு உயரத்தை மாற்றிக் கொள்ளும் வசதி, லிஃப்ட் மிடிகேஷன் ஆகிய அம்சங்களும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு உள்ளன. எஞ்ஜினை பொருத்தவரை பான் அமெரிக்கா 1250 பைக்கில் 1,252 சிசி வி-ட்வின் லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 151 பிஎச்பி பவரையும், 128 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஓர் சொகுசு காருக்கு இணையான விலையில் பான் அமெரிக்கா 1250 மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த பைக்கின் வருகை பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ், டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி4, டிரையம்ப் டைகர் 1200 மற்றும் ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









