ராயல் என்ஃபீல்டை விட கெத்தா இருக்கும்! ஹார்லி டேவிட்சன் கம்மி ரேட்ல பைக்கை இறக்கீட்டாங்க! புக்கிங் துவக்கம்!
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முதன் முறையாக முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஹீரோ நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங்கும் தற்போது துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தது. இதனால் ஹார்லிடேவிட்சன் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர். அதன்பின் 3 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ஹார்லி அறிவித்தது. அதன்படி அந்நிறுவனம் ஹீரோ நிறுவனத்துடன் கை கோர்த்தது.

இந்தியாவில் ஹீரோவுடன் சேர்த்து தனது வர்த்தகத்தைப் புதுப்பித்தது. அதன் முதன் தயாரிப்பாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹார்லிடேவிட்சன் எக்ஸ் 440 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங்கையும் துவங்கியுள்ளது. அதிகாரப்பூர்வமான டீலர்கள் மூலம் ரூ25 ஆயிரம் முன்பணம் செலுத்தி இந்த பைக்கை புக்கிங் செய்துகொள்ளலாம்.
இந்த பைக்கின் வடிவமைப்பையும் மேம்பாட்டையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பார்த்துக்கொள்கிறது. ஹீரோ நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு பிறகான சர்வீஸ் ஆகியவற்றைச் செய்கிறது. இனி ஹார்லி டேவிட்சன் பைக்குகளை ஹீரோ ஷோரூம்களிலேயே அதிகாரப்பூர்வமான சர்வீஸ்களை செய்யலாம்.

ஹார்லிடேவிட்சன் நிறுவனம் இந்த எக்ஸ் 440 பைக்கை ரெட்ரோ ஸ்டைலிங் கொண்டு உருவாக்கியுள்ளது. இந்த பைக்கை சாலையில் ஓட்டி சென்றால் நிச்சயம் மற்றவர்களைத் திருப்பி பார்க்க வைக்கும் அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஹார்லி என்ற பெயரை இருந்தாலே திரும்பி பார்ப்பார்கள். இதில் சிறப்பான டிசைன் இருந்தால் கேட்கவா வேண்டும்.
இந்த பைக்கில் வட்டமான ஹைடெலைட், டர்ன் இன்டிகேட்டர்கள், பின்பக்க கண்ணாடி, என நாஸ்டாலஜி ஃபீலில் உருவாக்கியுள்ளது. லைட்டிங்கள் எல்லாம் எல்இடி லைட்களாக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது. டர்ன் இண்டிகேட்டரில் ஹார்லி லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் பாட் வட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ஸ்கிரீன் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்யூயல் டேங்கில் ஹார்லி மற்றும் எக்ஸ் 440 லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. ஃப்யூயல் டேங்க் கோனிக்கல் வடிவில் வழங்கப்பட்டுள்ளது. பாடி ஒர்க் மினிமலாக வழங்கப்பட்டுள்ளது. காப்பர் நிற எக்ஸாஸ்ட் பைப் வழங்கப்பட்டுள்ளது. கிராப் ரெயில்கள் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் சில பாகங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. கறிப்பாக ஹெட்லைட்டை சுற்றியுள்ள பாகங்கள். இன்ஜின் அசெம்பிளி, இன்ஜின் கார்டு, பின்பக்க ஷாக் அபர்சர்பர், எக்ஸாஸ்ட் மஃப்லர், டூயல் டோன் ஃபினிஷில் அலாய் வீல்கள், ஆகியன இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் சொகுசான ரைடிங் போசிஷன் வழங்கப்பட்டுள்ளது. ஃப்ளாட்டான ஹேண்டில் பார் வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் பொருத்தப்பட்ட ஃபூட் பெக்குக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட்டி எக்ஸ்பிரியன்ஸிற்காக ஹேண்டில் பார் குறைவான உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. பின் சீட் குறுகலாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னால் அமர்ந்து செல்ல வசதியாக தான் இருக்கிறது.
இந்தபைக் மார்கெட்டில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 40 என்எம் டார்க் திறன் வரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாசிக் 350 பைக்கில் 27 என்எம் டார்க் திறனைத்தான் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் முன்பக்க 18 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ 2.5 லட்சம் முதல் ரூ 3லட்சம் வரையிலான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கை பொருத்தவரை ரூ1.9 லட்சம் முதல் ரூ 2.2 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த அதைவிடச் சற்று பிரிமியம் ரேஞ்சில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லிடேவிட்சன் பைக்குகளுக்கு
இந்தியாவில் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் குறைந்த விலை பைக்குகளை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஹார்லி-ஹீரோ கூட்டணி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் பைக்கே ராயல் என்ஃபீல்டிற்கு போட்டியாகக் களம் இறங்குவது பலரை ஆச்சரியப்படவைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









