புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை இவ்ளோதானா! ராயல் என்பீல்டு கண்ணுல விரல் விட்டு ஆட்ட போறாங்க!

அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்று ஹார்லி டேவிட்சன் (Harley Davidson). இந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களை வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். அந்த அளவிற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள்கள் மிகவும் தனித்துவமானவை.

ஆனால் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை மிகவும் அதிகம். எனவே அனைவராலும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை வாங்கி விட முடியாது. ஆனால் ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்குகளின் விலையில் (Price), ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை வாங்கும் சூழல் வெகு விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை இவ்ளோதானா! ராயல் என்பீல்டு கண்ணுல விரல் விட்டு ஆட்ட போறாங்க!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2 ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களை சந்தையில் களமிறக்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அந்த மோட்டார்சைக்கிள்களின் அறிமுக தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த 2 புதிய மோட்டார்சைக்கிள்களும் நாளை (மார்ச் 10) அறிமுகம் செய்யப்படவுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஹார்லி டேவிட்சன் எக்ஸ்350 (Harley Davidson X350) மற்றும் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்500 (Harley Davidson X500) என 2 புதிய மோட்டார்சைக்கிள்கள் நாளை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெனெல்லி (Benelli) நிறுவன பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பிளாட்பார்ம் அடிப்படையில், இவை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை இவ்ளோதானா! ராயல் என்பீல்டு கண்ணுல விரல் விட்டு ஆட்ட போறாங்க!

சீனாவின் கியான்ஜியாங் மோட்டார்ஸ் (Qianjiang Motors) நிறுவனத்துடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அமைத்துள்ள கூட்டணிதான் இதற்கு காரணம். இது பெனெல்லி நிறுவனத்தின் தாய் நிறுவனம் (Parent Company) ஆகும். எனவே பெனெல்லி நிறுவனத்தின் பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பிளாட்பார்ம், ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்350 மோட்டார்சைக்கிளில், 353 சிசி, ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 36 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. மறுபக்கம் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்500 மோட்டார்சைக்கிளில், 500 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவரை வழங்கும்.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை இவ்ளோதானா! ராயல் என்பீல்டு கண்ணுல விரல் விட்டு ஆட்ட போறாங்க!

இந்த 2 மோட்டார்சைக்கிள்களின் முன் பகுதியில் யூஎஸ்டி ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எல்இடி லைட்கள் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவை வாடிக்கையாளர்களை கவர கூடியதாக இருக்கும்.

இந்த 2 மோட்டார்சைக்கிள்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது. இந்த 2 மோட்டார்சைக்கிள்களும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கடுமையான சவாலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350) ஆகிய பைக்குகள் உடன், ஹார்லி டேவிட்சன் எக்ஸ்350 போட்டியிடும். அதே சமயம் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்500 மோட்டார்சைக்கிளானது, ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) பைக்கிற்கு சவால் அளிக்கும்.

இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்350 மோட்டர்சைக்கிளின் விலை 2.30 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. மறுபக்கம் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்500 மோட்டார்சைக்கிளின் விலை 3-3.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 9, 2023, 19:14 [IST]
English summary
Harley davidson x350 x500 expected price india full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+