ஹீரோ-ஹார்லி டேவிட்சன் இணைவில் உருவாக்கப்பட்ட மலிவு விலை பைக்கிற்கு புக்கிங் தொடக்கம்.. இவ்ளோ குறைவான கட்டணமா!

ஒட்டுமொத்த இந்தியாவையும், குறிப்பாக இருசக்கர வாகன பிரியர்களை வியக்க வைக்கும் வகையில் மிக மிக மலிவான விலைக் கொண்ட பைக்கை இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 'எக்ஸ்440' எனும் பெயர் கொண்ட பைக்கையே குறைவான விலையில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்தே ஹார்லி டேவிட்சன் இந்த பைக்கைத் தயாரித்து இருக்கின்றது. இதன் உடன் இணைந்து தயாரித்த காரணத்தினாலேயோ என்னமோ அதை ஹீரோவின் தயாரிப்புகளைப் போலவே மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

Harley davidson x440 bookings open

பொதுவாக ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகளின் விலை பல லட்சங்களைக் கொண்டிருக்கும். ஓர் காருக்கு இணையான விலையைக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால், தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கோ ரூ. 2.29 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரீமியம் தயாரிப்புகள் சிலவற்றின் விலையைக் காட்டிலும் இது சற்று குறைவானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக விரைவில் இந்திய இருசக்கர வாகன சந்தையை ஹார்லி டேவிட்சன் ஆளுகைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

Harley davidson x440 launch pic

நேற்று மாலை முதலே பைக்கிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ மோட்டோகார்ப் தளத்தின் வாயிலாகவும் இந்த பைக்கை நம்மால் புக் செய்துக் கொள்ள முடியும். புதிய ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டெனிம், விவிட் மற்றும் எஸ் ஆகியவையே அவை ஆகும்.

இவற்றின் டெலிவரி பணிகள் வரும் அக்டோபரில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன. ஸ்டைல், சிறப்பு வசதிகள் மற்றும் எஞ்ஜின் என அனைத்திலும் இந்த மோட்டார்சைக்கிள் மிக சிறப்பான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. 440 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு லாங் ஸ்ட்ரோக் மோட்டாரே எக்ஸ்440 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Harley davidson x440 side view

இந்த மோட்டாரால் 27 பிஎச்பி பவரையும், 38 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இந்த மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். இதுதவிர மிக சிறந்த சஸ்பென்ஷன் சிஸ்டத்திற்காக முன் பக்கத்தில் 43 மிமீ டபுள் கார்ட்ரிட்ஜ் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் வாயு நிரப்பப்பட்ட ட்வின் ஷாக் அப்சார்பர், 7 ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இவை இந்தியாவின் கரடு-முரடான சாலையை சமாளிக்க ஏதுவானவை ஆகும். மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டு இருக்கின்றன. முன் பக்க வீலில் 320 மிமீட்டரிலும், பின் பக்க வீலில் 240 மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர தொழில்நுட்ப வசதிகளும் இந்த பைக்கில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இது 3.5 அங்குலம் கொண்டது. இந்த திரை வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்றல், மியூசிக்கைக் கன்ட்ரோல் செய்தல் மற்றும் நேவிகேஷனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுமாதிரியான பன்முக வசதிகளுடனேயே ஹீரோ, ஹார்லி டேவிட்சன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் எக்ஸ்440 பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக் இந்தியாவில் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகிய நாள் முதலில் இருந்தே இந்தியர்கள் கவனத்தை எக்ஸ்440 ஈர்க்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் தொடங்கி இருக்கின்றன. ஆகையால், விரைவில் இந்த பைக் இந்தியாவில் விற்பனையில் வெற்றி நடைப்போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 5, 2023, 9:22 [IST]
English summary
Harley davidson x440 bookings open here is what is the booking amount
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X