வெயிட்டிங்கே வெறியாகுதே! ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் டெலிவரி எப்பொழுது துவங்குகிறது தெரியுமா!

ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவான முதல் பிரீமியம் பைக் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440. இந்த பைக்கின் டெலிவரி வரும் 15ஆம் தேதி தூங்குகிறது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதான் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்தியாவின் குறைந்த விலை பைக்காக அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது. ஆனால் இந்தியாவிற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு ஓரளவு மார்க்கெட் இருக்கிறது. ஆனால் இந்திய மக்களால் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை என அந்நிறுவனம் புரிந்து கொண்டது.

harley davidson x440 delivery date

வெளிநாடுகளிலிருந்து பைக்குகளை தயார் செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வதால் தான் அதிக விலை இருப்பதால் இந்தியாவிலேயே அது தனது பைக்குகளை தயாரித்து விற்பனை செய்தால் மக்களுக்கு உகந்த விலையில் பைக் விற்பனை செய்ய முடியும் என்பதால் இந்தியாவிலேயே அதன் பைக்குகளை தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக தனியாக ஆலையை அமைக்காமல் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி ஹீரோ நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் டிசைன் செய்து வழங்கும் பைக்கை தயாரித்து வழங்க வேண்டும். அந்த பைக்குகளை ஹார்லி டேவிட்சன் பெயரில் இந்தியா முழுக்க நிறுவனம் விற்பனை செய்யும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி இந்த இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தயாரிக்கும் முதல் பைக்காக எக்ஸ் 440 என்ற பைக் அறிமுகமாகியுள்ளது.

harley davidson x440 delivery date

இந்த பைக்கிற்கான புக்கிங் ஏற்கனவே கடந்த செப்டம்பர்1ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இதுவரை இந்த பைக்கை சுமார் 25,000 பேர் புக் செய்துள்ளதாக தெரிகிறது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ராஜஸ்தானில் உள்ள தனது ஆலையில் இந்த பைக்கை தயாரித்து விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் செய்து வருகிறது. இந்நிலையில் நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 15-ம் தேதி இந்த பைக்கின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இந்த பைக்கிற்கான புக்கிங் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த பைக்குக்கான புக்கிங் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த பைக்கே புக் செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த பைக்கின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கை பொறுத்தவரை அந்நிறுவனத்தின் குறைந்த திறன் கொண்ட இன்ஜின் பைக் ஆகும். இந்த பைக்கில் 400 சிசி, 2வால்வு, ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27.4பிஎஸ் பவரை 6000 ஆர்பிஎம்மிலும், 38என்எம் டார்க் திறனை 4000ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர் பாக்ஸ் அசிஸ்ட் மற்றும் ஸ்லீப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் லைட்டிங் எல்லாம் எல்இடி நியூ ஸ்டைலிங்கில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த க்கில் மினிமாலான டிஎஃப்டி ப்ளூடூத் கனெக்டிவிட்டி சிஸ்டம் இருக்கிறது. இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த பைக்கின் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் 43 மிமீ தலைகீழாக பொருத்தப்பட்ட கேஸ் சார்ஜ்டு போர்க் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பின்பக்கம் ஃப்ரீ லோட் அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சர்வர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் முன்பக்கம் 18 இன்ச் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எம்ஆர்எப் சேப்பர் ஹைட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்குகளை பொருத்தவரை பைபிரே டிஸ்க் டிஸ்க் பிரேக்குகள் இரண்டு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பிளாடான ஹேண்டில் பார்கள் உள்ளன.

இந்த பைக் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. டெனீம், விவிட் மற்றும் எஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் டெனீம் ரூபாய் 2.39 லட்சம் என்ற விலையிலும் விவிட் வேரியன்ட் ரூபாய் 2.59 லட்சம் என்ற விலையிலும்,

எஸ் வேரியன்ட் ரூபாய் 2.79 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் மார்க்கெட்டில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 450 பைக்கிற்க்கும் சமீபத்தில் அறிமுகமான டரையம் நிறுவனத்தின் ஸ்பீடு 400 பைக்கிற்க்கும் போட்டியாக விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லி டேவிட்சன் பைக்கிற்க்கு என்று மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவிற்கு மவுசு இருக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் பலர் ஹார்லி டேவிட்சன் பைக்கில் வாங்கி ஓட்ட விரும்புகின்றனர். ஆனால் விலை அதிகமாக இருந்த காரணத்தால் பலருக்கு இது வெறும் கனவாகவே இருந்தது. இந்த கனவுகளை எல்லாம் நினைவாக்கவே ஹார்லி டேவிட்சன் குறைந்த விலை பைக்குகளை களம் இறக்கி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 3, 2023, 19:34 [IST]
English summary
Harley davidson x440 commencement of deliveries set for october 15th
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+