இந்தியர்கள் வாங்கி குவிக்கும் ஹார்லி-டேவிட்சன் பைக்!! டிரெண்டில் இருக்கு... 2 நாட்களில் 1,000 பைக்குகள்!

ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) நிறுவனம் அதன் எக்ஸ்440 பைக்குகளை வெறும் இரண்டே நாட்களில் 1,000 பேருக்கு டெலிவிரி செய்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்தும், இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கை பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல அமெரிக்கன் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் அதன் திட்டங்களை கடந்த சில வருடங்களில் வெகுவாக மாற்றியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நேரடி வணிகத்தை நிறுத்திக் கொண்ட ஹார்லி-டேவிட்சன் நிறுவனம், அதற்கு பதிலாக ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி சேர்ந்தது.

1000 harley davidson x440 delivered

ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் விற்பனையையும், சர்வீஸ்களையும் ஹீரோ மோட்டோகார்ப்பின் உதவியுடன் இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் மேற்கொள்கிறது. அத்துடன், சமீப கால சிறந்த நடவடிக்கையாக ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 என்ற விலை குறைவான மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

எக்ஸ்440 பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி துவங்கின. இந்த நிலையில், வெறும் 2 நாட்களில் சுமார் 1,000 எக்ஸ்440 பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 எக்ஸ்440 பைக்குகள் டெலிவிரி செய்யப்படுகின்றன.

1000 harley davidson x440 delivered

இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகள் மொத்தம் 100 டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கின்றன. இந்த 100 ஷோரூம்களில் சில ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்துடையது, சில ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடையது. இந்தியாவில், எக்ஸ்440 பைக்குகளை ராஜஸ்தானில் உள்ள ஹீரோ மோட்டோகார்பின் கார்டன் ஃபேக்டரியில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

கடந்த 2023 ஜூலை மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட எக்ஸ்440 பைக்கிற்கு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே 25,000 முன்பதிவுகளை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் பெற்றுவிட்டது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஹீரோ மோட்டோகார்ப் அல்லது ஹார்லி-டேவிட்சன் டீலர்ஷிப் ஷோரூம்கள் மூலமாக இந்த பைக்கை முன்பதிவு செய்து, டெஸ்ட் ரைடு செய்யலாம்.

அத்துடன், இந்த பைக்கை இணையம் மூலமாகவும் புக் செய்யலாம். டெனிம், விவிட் மற்றும் எஸ் என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் புதிய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2,39,500 இல் இருந்து ரூ.2,79,500 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1,000 ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகள் டெலிவிரி என்பது ஒரே இடத்தில் விற்பனை செய்யப்பட்டவை கிடையாது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெலிவிரி செய்யப்பட்டவை ஆகும். இருப்பினும், வெறும் 2 நாட்களில் 1,000 ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகள் இந்தியாவில் டெலிவிரி என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 17, 2023, 20:18 [IST]
English summary
Harley davidson x440 delivered 1000 customers in just 2 days
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+