ரூ2.29 லட்சத்தில் ஹார்லி டேவிட்சன் பைக் அறிமுகம்! ராயல் என்ஃபீல்டு மார்கெட் காலியாக போகுது!
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை எக்ஸ் 440 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை இந்நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளது. மிக குறைவான விலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளுக்கு போட்டியாக இந்த பைக் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
ஹார்லிடேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் 2020 தனது பிஸ்னஸ்களை மூடிவிட்டு சென்றது. தற்போது தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி ஹீரோ ஆலையில் ஹார்லிடேவிட்சன் பைக்குகள் தயாராகி விற்பனைக்கு வரும். இந்த ஒப்பந்தப்படி முதன் பைக்காக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எக்ஸ்440 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. முதல் வேரியன்ட் டெனிம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிளாசிக் லுக், ஸ்போக் வீல் டிசைன் உடன் வருகிறது. இரண்டாவது வேரியன்ட் விவிட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மார்டன் டச் உடன் கூடிய அலாய் வீல் மற்றும் டூயல் கலர் டிசைன் உடன் வருகிறது. 3வது வேரியன்ட் அல்டிமேட்டாக அனைத்து எக்ஸ்பிரியன்ஸையும் வழங்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டு பினாக்கில் எனப் பெயரிடப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இந்த பைக்கில் முக்கிய அம்சங்களாக டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பாகத் தயார் செய்யப்பட்ட இன்ஜின் ஃபின்கள், அட்வான்ஸ்டு அம்சங்கள் மற்றும் 3டி டீக்கல் ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாம் டாப் வேரியன்ட் பைக்கில் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வேரியன்ட்களிலும் இந்த அம்சம் கிடையாது.

இந்த பைக்கின் பினாக்கில் என்ற டாப் வேரியன்டில் முக்கிய அம்சமே இதில் வழங்கப்பட்டுள்ள டிஎஃப்டி ஸ்கிரீன் தான் இதில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இருக்கிறது. இது ஒரு ஸ்மார்ட் ஸ்பீடோ மீட்டராக இருக்கிறது. இதில் ரியல் டைம் மைலேஜ், டிஸ்டன்ஸ் டூ எம்டி, கியர் இண்டிகேட்டர், பேட்டரி ஹெல்த், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
இது போக இந்த பைக்கை உங்கள் ஸ்மார்ட் போன் உடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும். அதன் மூலம் கால்களை எடுப்பது, மெசேஜ் அலர்ட் மியூசிக் கண்ட்ரோல் ஆகியவற்றைச் செய்ய முடியும். மேலும் இது டே/நைட் மோடுகள், ஆம்பியன்ஸ் லைட், ஆப்டிமைஷிங் விசிபிளிட்டி ஹெட்லைட் ஆகிய பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை சிங்கிள் சிலிண்டர் 3வால்வு, ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27 பிஎச்பி பவரையும் 38 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த பைக்கில் முன்னேறப் பலர் கணித்தது படி டுயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பாடி பெரும்பாலும் மெட்டல்பாடியாகவே வழங்கப்பட்டுள்ள. மற்ற பிளாஸ்டிக் பாகங்கள் குறைவு தான்.
இந்த பைக்கின் விலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவில் டெனிம் வேரியன்ட் ரூ2.29 லட்சம் என்ற விலையிலும், விவிட் வேரியன்ட் ரூ2.49 லட்சம் என்ற என்ற விலையிலும், பினாக்கில் வேரியன்ட் ரூ2.69 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த விலை எல்லாம் எக்ஸ்-ஷோரும் விலைகள் தான் ஆன்-ரோடு விலை மாறுபடும்.
இந்த பைக் மார்கெட்டில் நேரடியாக ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இதன் விலையும் ராயல் என்ஃபீல்டு பைக்கின் விலையை ஒத்த விலைக்கு வந்துள்ளதால் மார்கெட்டில் ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு இந்த பைக் டஃப் கொடுக்கும். தனி காட்டு ராஜாவாக இருந்த ராயல் என்ஃபீல்டு மார்கெட்டை பிடிக்க தற்போது ஹார்லி டேவிட்சன் களம் இறங்கிவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லிடேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மவுசு இருந்தாலும் அதன் விலை அதிகமாக இருந்ததால் பலர் வாங்க முடியாமல் தவித்தனர். இந்த பிரச்சனையைத் தீர்க்க ஹீரோ நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் குறைந்த விலையில் ஹார்லிடேவிட்சன் நிறுவனம் பைக்கை இறக்கியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








