இன்னும் 1 நாள் தான் டைம் இருக்குது! ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கை விலை ஏறப்போகுது! இப்பவே புக் பண்ணுங்க!

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் விலையை திடீரென அதிகரித்துள்ளது. இதுவரை ஒரு பைக் கூட இதுவரை டெலிவரி ஆகாத நிலையில் தற்போது இந்த விலை உயர்வை ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மூலம் பைக்குகளை தயாரித்து இந்தியாவிற்குள் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதன்படி நிறுவனத்தின் முதல் பைக்காக ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 என்ற பைக்கை குறைவான விலையில் அறிமுகப்படுத்தியது. மக்கள் பலர் நீண்ட நாட்களாக இதை தான் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

harley davidson x440 price hike

அதன்படி இந்த பைக் ரூபாய் 2.29 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமானது. தற்போது இந்த பைக்கில் காண புக்கிங் நடந்து வருகிறது. ரூபாய் 5000 முன்பணத்துடன் வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை புக்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் ஆன்லைனில் நடக்கிறது.

இந்நிலையில் ஹீரோ நிறுவனம் திடீரென தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 3 தேதி வரை தான் இந்த ஹாலிடேவிட்சன் எக்ஸ்440 பைக் ரூபாய் 2.29 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும் என்றும், ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குப் பிறகு புக் செய்பவர்களுக்கு இந்த பைக் ரூபாய் 2,39,500 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

harley davidson x440 price hike

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக் அறிமுகமான போதே அதன் விலை 2.29 லட்சம் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இது அறிமுக விலை தான் என தெரிவித்திருந்தது. இதன் பின்னர் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிக விரைவாகவே இந்த விளைவு உயர்வை அந்நிறுவனம் கொண்டு வந்து விட்டது.

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை பொறுத்தவரை மொத்தம் டெனீம், விவிட் மற்றும் எக்ஸ் ஆகிய மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் மார்க்கெட்டில் நேரடியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு 400 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இறங்குகிறது.

harley davidson x440 price hike

இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை பொறுத்தவரை மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் தான் இந்த பைக்கை முழு முயற்சியில் ஹீரோ நிறுவனம் தயாரிக்க உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான கார்டன் பேக்டரி ஆலையில் இந்த பைக் தயாராகிறது. இந்த பைக்கின் டெலிவரி அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. முதலில் புக் செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இதன் டெலிவரி துவங்குகிறது.

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை பொறுத்தவரை ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6000 ஆர்பிஎம்-ல் 27 பிஎச்பி பவரையும் 4000 ஆர்பிஎம்-ல் 38 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்440 பைக் அம்சங்களைப் பொருத்தவரை இதில் எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. யூஎஸ்பி போர்ட் மொபைல் சார்ஜிங்கிற்காக வழங்கப்பட்டுள்ளது. 3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், டேகோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்ட,ர் சர்வீஸ் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் அலர்ட், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இதுபோக இந்த மோட்டார் சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் சப்போர்ட் செய்யும்.

இந்த விலை உயர்வு குறித்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் சிஇஓ நிரஞ்சன் குப்தா கூறும்போது: "இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக் அறிமுகமாகும் போதே ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. ரூபாய் 2.29 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த புக்கிங் விண்டோவில் இதன் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

தற்போது உள்ள ஆரம்ப விலையிலான புக்கிங் விண்டோ ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தான் இருக்கும். அதன் பிறகு இதன் விலை ரூ2,39,500 என்ற விலையில் விற்பனையாகும்"எனத் தெரிவித்தார். இதனால் இந்த பைக்கை நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்றால் இன்று அல்லது நாளைக்குள் செய்து கொள்ளுங்கள்.

இந்த பைக்கை புக் செய்தால் ரூபாய் 10,500 வரை நீங்கள் சேமிக்க முடியும் ஒரு நாள் தாமதமானால் கூட நீங்கள் இந்த பைக்கை புக் செய்யும் போது ரூபாய் 10,500 இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் இப்பொழுதே புக்கிங் செய்யுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆரம்பத்தில் தங்கள் வாகனத்தின் விற்பனையை அதிகரிக்க அறிமுக விலை என்ற டெக்னிக்கை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இது பைக் அறிமுகமான புதிதில் அதன் விளம்பரத்திற்காகவும், அது குறித்த பேச்சு மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த யுக்தி சிறப்பாகப் பயன்படுகிறது. அதையே இந்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனமும் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 2, 2023, 11:15 [IST]
English summary
Harley davidson x440 prices raised check new prices
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X