இந்திய மார்க்கெட் தான் எல்லாருக்கும் டார்க்கெட்!! ஹார்லி-டேவிட்சன் vs டிரையம்ப்... போட்டியில் எது ஜெய்க்கும்?

இந்திய சந்தையில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களான ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் போட்டி போட்டு தங்களது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்440 பைக் மிக சமீபத்தில் தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்ற இரு மோட்டார்சைக்கிள்கள் ஜூலை 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. யுகே-இல் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுவிட்ட இந்த டிரையம்ப் பைக்குகளில் ஸ்பீடு 400 ஆனது ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு நேரடி போட்டி மாடலாக விளங்கும். இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.

harley-davidson x440 vs triumph speed 400

உருவாக்கப்பட்ட முறை: மேற்கூறப்பட்ட 3 மோட்டார்சைக்கிள்களும் வெளிநாடுகளில் இருந்து வெளியீடு செய்யப்பட்டாலும், இவை மூன்றும் முக்கியமாக இந்திய சந்தையையே டார்க்கெட் செய்து விற்பனைக்கு வருகின்றன. இதனாலேயே ஹார்லி-டேவிட்சன் இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டான ஹீரோ மோட்டோகார்ப்பின் உதவியுடனும், டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணி சேர்ந்தும் இந்த பைக்குகளை வடிவமைத்துள்ளன.

என்ஜின்: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440, டிரையம்ப் ஸ்பீடு 400 இந்த இரண்டில் எக்ஸ்440 பெரிய அளவிலான என்ஜினை கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில் இதில் 440சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு, 2-வால்வு செட்-அப்பை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதுவே, டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் 398.15சிசி-இல் லிக்யுடு-கூல்டு, DOHC, சிங்கிள்-சிலிண்டர் 4-வால்வு செட்-அப்பை கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

harley-davidson x440 vs triumph speed 400

என்ஜின் அவுட்புட்: அளவில் பெரிய என்ஜினை கொண்டிருப்பினும், ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 38 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே இயக்க ஆற்றலை பெற முடியும். ஆனால், டிரையம்ப் ஸ்பீடு400 பைக்கில் 39.5 பிஎச்பி& 37.5 என்எம் டார்க் திறன் வரையில் கிடைக்கும். ஹார்லி-டேவிட்சன் பைக்கில் உடனடி பிக்அப்பிற்கு தேவையான டார்க் திறன் அதிகம் கிடைக்கும். இந்த இரு பைக்குகளிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

எக்ஸாஸ்ட் சத்தம்: எக்ஸ்440, ஸ்பீடு 400 இவை இரண்டிலும் ஒற்றை-பக்க எக்ஸாஸ்ட் குழாயே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் டிரையம்ப் மாடலில் மேல்நோக்கி வளைக்கப்பட்ட டிசைனில் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதன் எக்ஸாஸ்ட் குழாயை டபுள்-பேரல் டிசைனிலும் கூடுதல் தொகையை செலுத்தி பெறலாம். ஆனால் ஹார்லி-டேவிட்சன் பைக்கில் இந்த அம்சங்கள் எல்லாம் இல்லை.

harley-davidson x440 vs triumph speed 400

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் டாப் எஸ் வேரியண்ட்டில் மாடர்ன் தரத்தில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கிடைக்கும். ஆனால் டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஸ்பீடு 400 பைக்கின் விலையை இந்தியாவில் குறைவானதாக எதிர்பார்க்கிறோம்.

விலை: ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் எக்ஸ்440 பைக்கை ரூ.2.29 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.69 லட்சம் ஆகும். டிரையம்ப் ஸ்பீடு400 பைக்கின் இந்திய விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜூலை 5ஆம் தேதி அறிவிக்கப்படும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.2.5 லட்சம்- ரூ.3.2 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

harley-davidson x440 vs triumph speed 400

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டிரையம்ப் நிறுவனம் புதிய பைக்குகளை கொண்டுவருவதால், ஹார்லி-டேவிட்சன் தனது எக்ஸ்440 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளதா அல்லது ஹார்லி-டேவிட்சனின் நடவடிக்கையை அறிந்து டிரையம்ப் தனது பைக்குகளை அறிமுகப்படுத்துகிறதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த இரு நிறுவனங்களும் சொல்லி வைத்தாற்போல் அடுத்தடுத்து தங்களது புதிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டுவருகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 4, 2023, 11:59 [IST]
English summary
Harley davidson x440 vs triumph speed 400 comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X