Harley Davidson X500 சீனாவில் வெளியீடு.. இந்த ஹார்லி பைக்கை இந்தியாவில் களமிறக்கினால் நீங்கள் வாங்குவீர்களா?

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்500 (Harley Davidson X500) பைக் சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிந்றது. இந்த பைக் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இருசக்கர வாகனத்தை காதலிக்காத இளைஞர்களே இருக்க முடியாத என கூறிவிடலாம். அந்த அளவிற்கு நாட்டு இளசுகள் மத்தியில் டூ-வீலர்களின் மீதான மோகம் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களுக்கு சூப்பரான டிமாண்ட் இந்திய இளைஞர்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது.

Harley davidson x 500

இந்த மாதிரியான சூழலிலேயே ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தன்னுடை விலை குறைவான மோட்டார்சைக்கிளை சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 500 (Harley Davidson X500) பைக்கே சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அந்நாட்டு மதிப்பில் 44 ஆயிரம் யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை ரூ. 5.3 லட்சம் ஆகும். இது சற்று அதிக விலையே ஆகும். இந்த விலையில் ஓர் குட்டி ஹேட்ச்பேக் காரின் புதிய யூனிட்டையே வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த பைக்கை இந்திய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Harley davidson x 500 back view

அவ்வாறு, அது செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் எனில் நிச்சயம் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்500 இந்தியாவில் வெற்றிகரமான மோட்டார்சைக்கிளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியாவில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு அதன் 650 சிசி மோட்டார்சைக்கிள்களான சூப்பர் மீட்டியோர் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 ஆகியவற்றை ரூ. 3.78 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு குறைவான விலையில் அதிக சிசி கொண்ட மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும் பட்சத்தில், அவற்றிற்கு டஃப் கொடுக்கும் விதமாக இந்த எக்ஸ்500 பைக் விற்பனைக்கு வந்தால் அதனால் இந்தியாவில் தாக்கு பிடிக்க முடியும் என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது. அதேவேளையில், இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஹீரோ மோட்டாகார்ப் கையாண்டு வருகின்றது.

Harley davidson x 500 side view

இந்த கூட்டணியின்கீழ் விரைவில் ஓர் மலிவு விலை ஹார்லி டேவிட்சன் பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஹீரோ நிறுவனத்தின் இந்த புதுமுக பைக்கின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதால் பலமடங்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் ஒரு சில வாரங்களில் ஹார்லி டேவிட்சன் மலிவு விலை மோட்டார்சைக்கிளின் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் எக்ஸ் 500 மாடல் பைக்கில் 500 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் ஒவ்வொரு சிலிண்டரும் 4 வால்வுகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால் இதன் திறன் வெளிப்பாடு மிக அருமையானதாக இருக்கும். உயர் சிசி திறனைக் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கு இதன் திறன் வெளிப்பாடு செம்ம டஃப் கொடுக்கும். இதை மேம்படுத்தும் விதமாக டிஓஎச்சி மற்றும் லிக்யூடு-கூல்டு கட்டமைப்பும் மோட்டாரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 46.8 பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிய ஸ்டைலில் இந்த பைக்கை வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் பொருட்டு பற்பல அம்சங்களை இந்த பைக்கில் ஹார்லி டேவிட்சன் வழங்கி இருக்கின்றது. 500 மிமி யுஸ்டி ஃபோர்க் (முன் பக்கம்), மோனோ ஷாக் (பின் பக்கத்திலும்) சஸ்பெஷன்கள் பைக்குகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை ஏற்ற கருவிகள் ஆகும். இந்தியாவிற்கான ஹார்லி டேவிட்சன் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரிப்பதைப் போல், சீனாவிற்கான அந்நிறுவனத்தின் பைக்குகளை க்யூஜே நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. இது சீனாவைச் சேர்ந்த முன்னணி டூ-வீலர் பிராண்ட் ஆகும்.

இந்த நிறுவனத்தின்கீழ் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்500 விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதனாலேயே அதன் விலை பலமடங்கு குறைவானதாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதேபோல், இந்தியாவிலும் இதன் விலை மலிவானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ரூ. 4 லட்சம் அல்லது ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே அந்த பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் பிரீமியம் தர பைக்குகளுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த சான்றாக ராயல் என்பீல்டு இன்டர்செப்டார்650 மற்றும் சூப்பர் மீட்டியோர்650 ஆகிய மோட்டார்சைக்கிள் இருக்கின்றன. இவை இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ஹார்லி டேவிட்சன் மலிவு விலைக்கு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கூறப்படும் புதுமுக மாடலுக்கும் நல்ல டிமாண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 19, 2023, 16:21 [IST]
English summary
Harley davidson x500 launched in china would you buy this if launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X