Helmet Man of India தன்னுடைய வீட்டையே விற்றிருக்கின்றார்.. இலவசமா ஹெல்மெட்டை தர வேற ஒன்னையும் செஞ்சிருக்காரு!

இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் தலைக் கவசம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இந்த ஹெல்மெட்டை ஓர் நபர் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார். இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்குவதற்காக அவர் தன்னுடைய வீட்டையே விற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுமட்டுமின்றி, தன்னுடைய மனைவியின் நகைகளையும் அவர் அடகு வைத்திருக்கின்றார்.

இந்த செயலுக்காக அவரை இந்த சமூகத்தினர் 'பைத்தியம்' என பட்டம் சூட்டி இருக்கின்றனர். ஆனால், அரசோ அவரை அழைத்து கௌரவ பட்டம் வழங்கி இருக்கின்றது. மேலும், 'ஹெல்மேட் மேன் ஆஃப் இந்தியா' என்கிற பெயரையும் அவருக்கு அரசு வழங்கி இருக்கின்றது. ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கே இவர் இலவசமாக ஹெல்மெட்டை வழங்கி வருகின்றார்.

Helmet man of india giving helmet

அண்மையில்கூட, ஹெல்மெட் அணியாமல் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு 'ஹெல்மெட் மேன் ஆஃப் இந்தியா' தலைக் கவசத்தை வழங்கி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராக்வேந்தரா குமார்.

இவரே ஹெல்மேட் மேன் ஆஃப் இந்தியா ஆவார். இவரின் ரூம் மேட்டும், நெருங்கிய நண்பருமான ஒருவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். யமுனா அதி-வேக சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று மோதியது. இந்த சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.

Helmet man of india providing helmet

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதனாலேயே உயிர் சம்பவ இடத்திலேயே பறிபோயிருக்கின்றது. அந்த நேரத்தில் அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதேவேளையில், சிறு சிறு காயங்களுடன் அவர் பிழைத்திருப்பார் என கூறப்படுகின்றது. இந்தநிலையிலேயே தன்னுடைய நண்பரை போல் வேறு எந்தவொரு நபரும் சாலை விபத்தில் இறக்கக் கூடாது என்பதற்காக சாலையில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ராக்வேந்தரா குமார் இலவசமாக தலைக்கவசங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

பல ஆண்டுகளாக இந்த சேவையில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இதுதவிர ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தையும் அவர் உணர்த்தி வருகின்றார். குறிப்பாக, காவலர்களுடன் சேர்ந்து ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். இதுமட்டுமின்றி, தானும் ஹெல்மெட் அணிந்து பிறருக்கு முன்னுதாரணமாக அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

Helmet man of india providing free helmet

இருசக்கர வாகனம் ஓட்டும்போது மட்டுமல்ல காரை ஓட்டும்போதும் அவர் ஹெல்மெட் அணிந்த வண்ணமே அவர் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இதுவரை அவர் 56 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு இலவசமாக ஹெல்மெட்டை வழங்கியதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அவரை ஹெல்மெட் வள்ளல் என அழைக்கின்றனர். இந்த நிலையிலேயே மத்திய அரசும் அவருக்கு கௌரவ பட்டத்தை வழங்கி மரியாதைச் செலுத்தி இருக்கின்றது.

அரசை போலவே சோனு சூட் போன்ற முன்னணி நடிகர்களும் ராகவேந்தரா குமாரின் செயலைப் பாராட்டி வருகின்றனர். நடிகர் சோனு சூட்-டும் இதுபோன்ற பல்வேறு பொது நல சேவைகளை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் அவர் ஆற்றிய சேவைகள் மிக உண்ணதமானதாகும். இத்தகைய ஓர் சிறப்பான சேவையையே ராகவேந்தரா ஆற்றி வருகின்றார்.

இவர் வெகு விரைவில் சொந்த கிராமத்திற்கு மாற இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். தன்னுடைய மகனை அரசு பள்ளியிலும் சேர்க்கவும் திட்டமிட்டிருக்கின்றார். படிப்பிற்கு ஆகும் செலவைக் குறைத்து ஹெல்மெட்டை கூடுதலாக வழங்க இவ்வாறு செய்ய இருப்பதாக கூறி இருக்கின்றார். ஏற்கனவே, வீடுகளை விற்றது மற்றும் மனைவியின் நகைகளை அடகு வைத்தது போக தற்போது தன்னுடைய மகனின் படிப்பிலும் அவர் கை இருப்பதாக கூறி இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

"உண்மையில் இவர் பைத்தியக்காரர்தான். பிறருடைய உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் தன்னலம் இன்றி மிகுந்த கவனத்துடன் செயலாற்றி பைத்தியம்" இவரை போலவே கோடிகளில் புறளும் திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பொது சேவையில் களமிறங்கினால் இந்த உலகில் யாரும் வறுமையில் வாட மாட்டார்கள் என்பதே எங்களின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 11, 2023, 15:39 [IST]
English summary
Helmet man of india still continuing free helmet service
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X