ஆக்டிவா தொடங்கி ஹீரோ ஜூம் வரை.. இந்த ஆண்டை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்கு வந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இந்தியர்கள் மிகப் பெரிய இருசக்கர வாகன பிரியர்கள் என்பது உலகம் அறிந்த தகவல். இதனால்தான், விற்பனையில் எப்போதும் டூ-வீலர்கள் முதல் இடத்தில் இருக்கின்றன. இந்தியாவின் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு உகந்த வாகனங்களாக இரண்டு சக்கர வாகனங்களே இருக்கின்றன. இதனாலேயே வாகன உற்பத்தியாளர்களும் இந்தியாவை மையப்படுத்தி அதிகளவில் 2வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு உள்ளன.

குறிப்பாக, நடப்பு 2023 ஆம் ஆண்டை அலங்கரிக்கும் விதமாக இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் ஏகப்பட்ட புதுமுக இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றன. அந்தவகையில், இந்த 2023 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக விற்பனைக்கு களமிறங்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள் அறிமுகம் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Scooters

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ (Honda Activa 6G Smart Key): கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஸ்மார்ட் சாவி அம்சத்தை முதல் முறையாக ஓர் பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றது என்றால் அது ஹோண்டா ஆக்டிவா 6 ஆகும். இந்தியர்களின் பிரியமான இருசக்கர வாகன மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது.

இதில் ஸ்மார்ட் சாவி வசதி வழங்கப்பட்டது அதன் பிரியர்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்தது. இதுமட்டுமில்லைங்க, இந்த வெர்ஷனில் இன்னும் பல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், சாவியே இல்லாமல் திறக்கும் வசதிக் கொண்ட ஃப்யூவல் லிட், ரிமோட்டில் ஹேண்டில் பாரை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி, பெரிய ஸ்டோரேஜ் இருக்கைக்கு அடியில் என ஏகப்பட்ட அம்சங்களை ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இதன் விலை ரூ.76 லட்சம் ஆகும்.

ஹீரோ ஜூம் (Hero Xoom): இந்திய இருசக்கர வாகன பிரிவை அதகளப்படுத்தும் விதமாக ஹீரோ நிறுவனம் இந்த ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வந்த ஸ்கூட்டர் மாடலாக ஹீரோ ஜூம் இருக்கின்றது. மிகவும் தனித்துவமான தோற்றம் மற்றும் அம்சங்களைத் தாங்கியதாக இந்த டூ-வீலர் உள்ளது. இதன் முகப்பு பகுதியே இதற்கு சான்று.

இந்த ஸ்கூட்டரில் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் பொருட்டு எல்இடி ஹெட்லைட், எல்சிடி ப்ளூடூத் இணைப்பு அம்சம், கார்னரிங் லைட் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் என ஏகப்பட்ட அம்சங்களையே இது தாங்கி இருக்கின்றது. மோட்டாரை பொருத்த வரை இந்த ஸ்கூட்டரில் 110.9 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரே ஜூமில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.05 பிஎச்பி பவரையும், 8.70 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் 450 எஸ் (Ather 450X and 450S): இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஏத்தர் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட ஓர் தரமான தயாரிப்புகளே 450எக்ஸ் மற்றும் 450எஸ் ஆகும். இதில், 450எஸ் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

2.9 kWh மற்றும் 3.7 kWh ஆப்ஷன்களே இந்த கார்களில் வழங்கப்படுகின்றது. இதைவிட சற்று காஸ்ட்லியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450எக்ஸ் காட்சியளிக்கின்றது. இது ரூ. 1.37 லட்சம் தொடங்கி ரூ. 1.44 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். 450 எஸ் மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1X): ஓலா இந்தியா மின்சார இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வந்த மிக மிக விலைக் குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே இது ஆகும். இது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 89,999 ஆகும். உச்சபட்ச விலை ரூ. 1.09 லட்சம் ஆகும்.

பஜாஜ் சேத்தர் அர்பேன் (2024 Bajaj Chetak Urbane): பஜாஜ் நிறுவனம் சேத்தக் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் நீண்ட காலமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விலை சற்று அதிகம் ஆகும். இதைவிட குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கும் விதமாக கொண்டு வரப்பட்டதே சேத்தக் அர்பேன் ஆகும். இதன் விலை ரூ. 1.15 லட்சம் ஆகும். இது இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

உயர்நிலை தேர்வு மணிக்கு 73 கிமீ வேகத்திலும், ஸ்டாண்டர்டு தேர்வு மணிக்கு 63 கிமீ வேகத்திலும் இயங்கும். இத்துடன், ஹில் ஹோல்டு, ரிவர்ஸ் மோட், ஃபுல் ஸ்மார்ட்போன் இணைப்பு, டேம்பர் அலர்டு, ஓடிஏ அப்டேட்ஸ் ஆகியவை சேத்தக் அர்பேனில் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக இந்த 2023 ஆம் ஆண்டில் ஏகப்பட்ட டூ-வீலர்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டன. அவை அனைத்தைக் காட்டிலும் மிக பெஸ்ட்டானவற்றை பற்றியே இந்த பட்டியலில் வழங்கி இருக்கின்றோம். இவை விலை மலிவானவை, அதேவேளையில், பெஸ்டானவையும் கூட என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 28, 2023, 23:38 [IST]
English summary
Here is a list of scooters that launched in india in 2023
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+