2லட்ச ரூபாக்கும் கீழான விலையில் கிடைக்கும் க்ரூஸர் பைக்குகள்! இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் க்ரூஸர்களும் இவைதான்
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தியாவில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்குக் கிடைத்தன. அவை விலை உயர்ந்தவை. ஆனால், இப்போது நிலைமை மாறி இருக்கின்றது. நாட்டில் அதிக எண்ணிக்கையில் க்ரூஸர் ரக டூ-வீலர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதுவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. இவற்றின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் க்ரூஸர் ரக பைக்குகளுக்கு வரவேற்பு மிக அதிகம். இவை லாங் டிரைவிற்கு ஏற்ற வாகனங்கள் ஆகும். கம்ஃபோர்டான ரைடிங் அனுபவத்தை அவை வழங்கும். எனவேதான் லாங் டிரைவிற்கு பலரின் தேர்வாக க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. மேலும், இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம். இத்தகையோரைக் கவரும் விதமாக முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் பஜாஜ் நிறுவனத்தின் பங்களிப்பு சற்று அதிகமாக உள்ளது. இரு விலை குறைவான க்ரூரஸ்ர மோட்டார்சைக்கிள் மாடல்களை அது நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ராயல் என்பீல்டு நிறுவனமும் குறைவான விலைக் கொண்ட க்ரூஸர் டைப் பைக் மாடலை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுபோன்று வேறு எந்த நிறுவனங்கள் எல்லாம் நாட்டில் விலை குறைவாக க்ரூஸர் ரக டூ-வீலரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக, 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
முதலில் இந்த பட்டியலின் மிக அதிக விலை கொண்ட க்ரூஸர் பைக் மாடலை பார்க்கலாம்.
யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster)
விலை: ரூ. 2 லட்சம்
நம்முடைய இந்த மலிவு விலை க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளின் பட்டியலின் காஸ்ட்லியான மோட்டார் சைக்கிள் மாடலாக யெஸ்டி நிறுவனத்தின் ரோட்ஸ்டர் இருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 2 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் சற்று பிரீமியம் அம்சம் அதிகம் என்பதால் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது. 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் ஃப்யூவல் இன்ஜெக்டடட் டிஓஎச்சி மோட்டார் ஆகும்.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 28 பிஎச்பி பவரை 7,300 ஆர்பிஎம்மிலும், 29 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. பைக்கின் இரு வீல்களிலும் இந்த அம்சத்தை காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது. இதுமட்டுமின்றி பன்முக முக்கிய தகவல்களை இது வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350):
விலை: ரூ. 1.69 லட்சம்
யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் மாடலுக்கு அடுத்தபடியாக நம்முடைய பட்டியலின் அடுத்த காஸ்ட்லியான மலிவு விலை க்ரூஸர் ரக பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 ஆகும். இதனை 2022 ஆம் ஆண்டிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் மிக மலிவு விலைக் கொண்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் இதுவாகும். இதனால்தான் தற்போது விற்பனையில் இந்த பைக் மாடல் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் விலை ரூ. 1.69 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகந்தது. ரெட்ரோ ஃபேக்டரி, மெட்ரோ டேப்பர் மற்றும் மெட்ரோ ரிபெல் என 3 விதமான வண்ண தேர்வுகளில் ஹண்டர் 350 பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் ஃப்யூவல் இன்ஜெக்டட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் அவென்ஜர் க்ரூஸே 220 (Bajaj Avenger Cruise 220):
விலை: ரூ. 1.38 லட்சம்
மேலே பார்த்தது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். நிறுவனம் சற்று அதிக விலைக் கொண்ட க்ரூஸர் மாடலாக இது இருக்கின்றது. இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஞ்ஜின் சற்று அதிக பவர்ஃபுல்லானது. மேலும், அலங்கார அம்சங்களும் இந்த மாடலில் சற்று அதிகம். பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் அழகிய மற்றும் சிறிய வட்ட வடிவ ஹெட்லேம்ப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக அலாய் வீலுக்கு பதிலாக ஸ்போக் வீல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 220 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஆயில் கூல்டு மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.7 என்எம் டார்க்கையும், 17.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
பஜாஜ் அவென்ஜர் 160 ஸ்ட்ரீட் (Bajaj Avenger 160 Street):
விலை: ரூ. 1.12 லட்சம்
பஜாஜ் நிறுவனம் அவென்ஜர் 220 மாடலைக் காட்டிலும் குறைவான விலையில் க்ரூஸர் பைக்கை தேடுபவர்களுக்கு உதவும் விதமாக அவென்ஜர் 160 ஸ்ட்ரீட் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. தோற்றத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக தென்பட்டாலும், அலங்கரிப்பில் இரண்டிலும் பல்வேறு வித்தியாசங்களை நம்மால் காண முடிகின்றது. சிறிய விண்ட் ஸ்கிரீன், அலாய் வீல்கள் போன்றவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 160 சிசி திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது 14 பிஎச்பி மற்றும் 13.7 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








