டிக்கில ஒரு அரிசி மூட்டையையே வச்சு கொண்டு போகலாம் போல! பெரிய ஸ்டோரேஜ் வசதி கொண்ட டாப்5 இ-ஸ்கூட்டர்கள் லிஸ்ட்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதே இதற்கான மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இதன் விளைவாகவே முன்னணி நிறுவனங்கள் தொடங்கி புதுமுக நிறுவனங்கள் வரை, இந்தியாவின் மின் வாகன பிரிவை மையமாகக் கொண்டு தங்களின் தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்கின்ற வகையில் தங்களின் தயாரிப்புகளை எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், மிகப் பெரிய ஸ்டோரேஜ் வசதி தேவையைப் பூர்த்தி செய்யும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் இந்திய சந்தையில் மிகவும் தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்டையே இந்த பதிவில் நாம் பார்க்க இறுக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரிவர் இன்டீ (River Indie) 43 லிட்டர்: இந்தியாவில் விற்பனையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே மிக அதிக இட வசதியைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இதுவே இருக்கின்றது. ரிவர் இன்டீக்கு கொழு கொழுவென்ற தோற்றத்தையே தயாரிப்பு நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இந்த கொழுத்த தோற்றமே இதன் மிகப் பெரிய ஸ்டோரேஜ் வசதிக்கு காரணமாக இருக்கின்றது.
இதன் இருக்கைக்கு அடியில் சுமார் 43 லிட்டர் வரையிலான பொருட்களை நிரப்பிக் கொள்ள முடியும். இரண்டு ஹெல்மெட் அல்லது ஒரு வாரத்திற்கு தேவையான காய் கறிகள் அல்லது ஏன் ஓர் மினி அரசி மூட்டையைகூட ஏற்றிச் செல்ல இந்த இட வசதி போதுமானதாக இருக்கும்.
அந்த அளவு பெரிய ஸ்டோலேஜையே இருக்கைக்கு அடியில் இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 1.25 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) 36 லிட்டர்: ரிவர் இன்டீக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஸ்டோரேஜ் வசதி உடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இது இருக்கின்றது. ஓலாவின் அதிகம் சேல் ஆகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் இதுவே ஆகும்.
இதிலும், இரண்டு ஹெல்மெட்டுகள் அல்லது வாரக் கணக்கில் வீட்டுக்கு தேவைப்படும் காய்-கறிகளை வாங்கி எடுத்துச் செல்ல முடியும். இதன் விலை ரூ. 1.39 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ஓர் முழு சார்ஜில் 195 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.
இத்துடன் ஏகப்பட்ட வசதிகளுடன் இந்த ஸ்கூட்டர் தற்போது இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. குறிப்பாக, இது ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் போன்ற முன்னணி மின்சார டூ-வீலர் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஓலா எஸ்1 ப்ரோ ஜென் 2 மற்றும் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Pro Gen 2 / Air) 34 லிட்டர்: ஓலா எஸ்1 ப்ரோவிற்கு அடுத்த இடத்தையும் ஓலாவின் தயாரிப்புகளே பிடித்திருக்கின்றன. இதில் இருக்கும் இட வசதியைப் பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை அசால்டாக எடுத்துச் செல்ல முடியும். ஏன் அவசர நேரத்தில், பேக்-பேக் கிடைக்கவில்லை என்றால், இதையே பெட்டியாக பயன்படுத்தி உடைமைகளைக் கொண்டு செல்லலாம்.
சிம்பிள் ஒன் (Simple One) 30 லிட்டர்: மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். இதில் ரிமூவபிள் பேட்டரி பேக் வசதியை சிம்பிள் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆகையால், லேசாக இட வசதி அடி வாங்கி இருக்கின்றது.
இருப்பினும், இதில் 30 லிட்டர் வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இப்போது விற்பனையில் இருக்கும் ஐசிஇ ஸ்கூட்டர்களைக் காட்டிலும் அதிக இட வசதியைக் கொண்டதே இதுவாகும். இதன் விலை ரூ. 1.45 லட்சம் - ரூ. 1.58 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இந்த ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 212 கிலோ மீட்டர் தூரம் வரை டிராவல் செய்ய முடியும். மேலும், வெறும் 2.77 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது.
ஹீரோ விடா வி1 (Hero Vida V1) 26 லிட்டர்: நம்முடைய இந்த லிஸ்டின் கடைசி மாடலாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. மிகவும் அழகிய தோற்றம், இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான சிறப்பு வசதிகள் என பல விஷயங்களில் முன்னணி தயாரிப்பாக விடா வி1 காட்சியளிக்கின்றது.
இதன் ஆரம்ப விலை ரூ. 1.25 லட்சம் ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அதிகபட்சமாக 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், வெறும் 3.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தில் இது எட்டிவிடும். இதுபோன்ற பல்வேறு சிறப்புகளை தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே விடா வி1 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் மேலே உள்ள ஏதேனும் ஓர் மாடலை நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம். மேலே உள்ளவையே அதிக இட வசதியைக் கொண்ட விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








