கண்ணெதிர்க்க இருந்தாலும் நைசா நகர்த்திட்டு போய்டுவாங்க... இந்தியாவில் அதிகம் காணாமல் போகும் 5 டூ-வீலர்கள்!
இப்போது எல்லாம் தெருவிற்கு தெரு, முக்கிற்கு முக்கு என அனைத்து மூலைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. திருட்டு போன்ற அனைத்து வகையான குற்றச் சம்பவங்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே சிசிடிவி கேமிராக்கள் அதிகளவில் பொருத்தப்படுவதற்கான முக்கிய காரணமாக ஆகும்.
இதேபோல், வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் குற்ற நிகழ்வுகளைத் தவிர்க்கும் விதமாகவும் அனைத்து சிக்னல்கள் மற்றும் சாலைகளிலும் சிசிடிவி கேமிராகள் நிறுவப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் திருட்டை தவிர்க்க முடியாத சூழலே நிலவுகின்றது. வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்கூட அசால்டாக திருடர்களால் களவாடப்பட்டு செல்லப்படுகின்றன.

சைடு லாக், இரும்பு சங்கிலி என எதைக் கொண்டு பத்திரப்படுத்தி இருந்தாலும் அதனை அவர்கள் அசால்டாக கழட்டி எறிந்துவிட்டு லாவமாகக் களவாடிச் செல்கின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் உள்ள லாக்கை அவர்கள் நொடிப்பொழுதில் நொருக்கும் வீடியோக்களைக் காணும் போது மனசே நொறுங்குவதுபோல் இருக்கும்.
இந்த மாதிரியான சுழலிலேயே இந்தியாவில் குறிப்பிட்ட ஐந்து டூ-வீலர் மாடல்களுக்கு இந்தியர்கள் அதிக மவுசு இருப்பதாகவும், அவையே இந்தியாவில் அதிகம் திருடப்படுவதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை எவை? என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹீரோ ஸ்பிளெண்டர்: திருடர்கள் அதிகம் திருடப்படும் இருசக்கர வாகனங்களின் லிஸ்டின் முதல் இடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டரே இருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இருசக்கர வாகனமாக ஸ்பிளெண்டர் இருக்கின்றது. இதில் மட்டுமல்ல திருடு போவதிலும் இந்த பைக்கே முதல் இடத்தில் இருக்கின்றது என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது.
இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் நீடித்து உழைக்கம் தரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்காக ஸ்பிளெண்டர் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 71,586 மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏழை மற்றும் எளிய மக்களின் மிகுந்த விருப்பமான தேர்வாக இது இருப்பதும் கவனிக்கத்தகுந்தது. இவர்களிடத்தில் இருந்தே இந்த பைக்கை திருடர்கள் லாவமாக திருடிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஹோண்டா ஆக்டிவா: ஹீரோ ஸ்பிளெண்டரை அடுத்து இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. அதேவேளையில், அதிகம் திருடுபோகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இந்த ஸ்கூட்டர் மட்டுமே இடம் பிடித்திருக்கின்றது. ஆகையால், திருடர்களுக்கு மிகவும் பிரியமான ஸ்கூட்டராக ஆக்டிவா இருப்பது தெளிவாக தெரிகின்றது. இதுவும் இந்தியாவின் மிக சிறந்த விற்பனையாகும் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பஜாஜ் பல்சர்: இந்தியாவில் அதிகம் திருடுபோகும் இருசக்கர வாகனங்களில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வாகனம் பல்சர் ஆகும். அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் சீறி பாய்ந்து செல்லும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த டூ-வீலராக இது இருக்கின்றது. இதே வாகனமே திருடர்களின் உள்ளம் கவர்ந்த வாகனமாகவும் இருக்கின்றன. இதற்கான காரணம்தான் என்ன என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கும் இதன் ஸ்டைல் பிடிக்குமோ என்னமோ..

ராயல் என்பீல்டு கிளாசிக் 350: இந்த வண்டியை யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை என பலதரப்பட்டோருக்கு பிடித்தமான இருசக்கர வாகனமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 இருக்கின்றது. ஆண்களுக்கு மட்டுமில்லைங்க பெண்களுக்கும் மிகவும் பிடித்தமான டூ-வீலராக இது இருக்கின்றது. இந்த நிலையிலேயே திருடர்களுக்கும் மிகவும் பிடித்தமான டூ-வீலர் இது என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் அதிகம் திருடப்படும் இருசக்கர வாகனங்களின் லிஸ்டில் இதுவே நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.
டிவிஎஸ் அப்பாச்சி: துடிப்பான வேகம், ஆர்பரிக்கும் ஸ்டைல் என அனைத்திலும் அசத்தும் ஓர் டூ-வீலரே இந்த அப்பாச்சி ஆகும். இது மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் இருக்கின்ற காரணத்தினாலேயோ என்னமோ இதுவும் திருடர்களுக்கு அதிகம் இரையாகிக் கொண்டிருக்கின்றது. ஆமாங்க, திருடர்கள் இந்த பைக்கையும் அதிகம் திருடிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் அதிகம் களவாடப்படும் இருசக்கர வாகனங்களின் லிஸ்டில் ஐந்தாவது இடத்தை அப்பாச்சி பிடித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இருசக்கர வாகனங்களே திருடர்கள் அதிகம் விரும்பும் டூ-வீலர்களாக இருக்கின்றன. ஆகையால், இவற்றில் ஏதேனும் ஒன்றின் உரிமையாளராக நீங்கள் இருந்தால் உங்கள் வாகனத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். சமீபத்தில் அக்கோ இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளோம்.


Click it and Unblock the Notifications









