ஒரு லட்சத்துக்கும் கம்மியான விலை - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரையுடன் கிடைக்கும் டாப் 5 டூ-வீலர்கள்..

வாகன உலகில் தற்போது போட்டி நம்ப முடியாத அளவிற்கு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் விலை குறைவான வாகனங்களிலும் அதிக சிறப்பு வசதிகளை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. போட்டியைச் சமாளிக்க இது அவசியமானதாகப் பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், இருசக்கர வாகனங்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மிக தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான விலைக் கொண்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்களிலும் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இதை உங்களால் நம்ப முடியவில்லையா.. ஆச்சரியமாக இருந்தாலும், இதை நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்.

Two wheelers with digital instrument screens

ஹீரோ, யமஹா, டிவிஎஸ் மற்றும் சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களே இதற்கு சான்றாக இருக்கின்றன. அவை தங்களின் விலை குறைவான டூ-வீலர்களில் அதிக பிரீமியம் தர அம்சமாக கருதப்படும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Hero splendor plus xtec

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Hero Splendor+ XTEC): நாட்டின் மிக மிக விலைக் குறைவான பைக்காக இது காட்சியளிக்கின்றது. ரூ. 76,346க்கே அது விற்பனைக்குக் கிடைக்கும். இந்த அளவு மலிவு விலையில் இது கிடைத்தாலும், அதில் சிறப்பு வசதிகளை வழங்க ஹீரோ தவறவில்லை. ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக்கே முதல் முறையாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை பெற்ற என்ட்ரீ லெவல் பைக்காகும். இதன் விலை ரூ. 76,346 ஆகும்.

Tvs ntorq race edition

டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் (TVS Ntorq 125 Race Edition): இந்தியாவில் நல்ல விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்கூட்டராக இது இருக்கின்றது. சமீபத்திலேயே இதன் விற்பனை எண்ணிக்கை 1.45 மில்லியன் யூனிட்டை எட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அளவிற்கு அமோக வரவேற்பையே அது பெற்று வருகின்றது. இதற்கு ஸ்கூட்டரின் மலிவு விலை, அதிக திறனை வெளியேற்றும் மோட்டார் உள்ளிட்டவையே காரணமாக இருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் ஒன்றாகும். இத்தகைய அம்சத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் அதன் விலை ரூ. 92,891 ஆக இருக்கின்றது. இந்த அம்சத்தை டிவிஎஸ் அனைத்து வேரியண்டுகளிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ப்ளூடூத் இணைப்பு அம்சம், டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட், நேவிகேஷன் அசிஸ்ட் என எக்கசக்க வசதிகளும் இதில் இடம் பெற்றிருக்கும்.

Suzuki avenis

சுஸுகி அவெனிஸ் (Suzuki Avenis): இந்தியாவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வசதியுடன் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டராக இது இருக்கின்றது. இதன் விலை ரூ. 92,300 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ப்ளூடூத் இணைப்பு, சுஸுகியின் ரைடு கன்னெக்ட் ஆகிய அம்சங்களைத் தாங்கியதாகவும் அவெனிஸ் இருக்கின்றது.

Suzuki access 125

சுஸுகி அக்செஸ் 125 (Suzuki Access 125): சுஸுகியின் அவெனிஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் பலவற்றை அக்செஸ் 125லும் பார்க்க முடிகின்றது. அந்தவகையில், சுஸுகி ரைடு கன்னெக்ட் அம்சம் கொண்ட டிஜிட்டல் கன்சோலும் அக்செஸ் 125இல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு, எஸ்எம்எஸ், வாட்ஸ்-ஆப் அலர்டு உள்ளிட்ட தகவலை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Yamaha fascino

யமஹா ஃபஸ்ஸினோ (Yamaha Fascino): இந்த ஸ்கூட்டரிலும் ப்ளூடூத் மற்றும் டிஜிட்டல் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. யமஹாவின் ஒய் கன்னெக்ட் அம்சமே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 88,230 ஆகும். இந்த திரை சர்வீஸ் ரிமைண்டர், வாட்ஸ்-ஆப் அலர்டு மற்றும் ஃப்யூவல் கன்சம்ப்சன் உள்ளிட்ட தகவலை இது வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். இந்த விலையிலேயே அட்டகாசமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரையை வாகன உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மேலே பார்த்த அனைத்து மாடல்களுக்கும் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 22:16 [IST]
English summary
Here is list top 5 two wheelers with digital instrument screen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X