இவ்ளோ கம்மி விலையில டிரையம்ப் பைக்கா!.. சொந்தா செலவுல தனக்கு தானே சூன்யம் வச்சுக்க போது இந்த பஜாஜ்!

டிரையம்ப் நிறுவனத்திற்கான புதிய பைக் பஜாஜ் (Bajaj)- டிரையம்ப் (Triumph) கூட்டணியில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த பைக் பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் போலவே சற்று குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையே ஒரு சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் உறுதிப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையிலேயே இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய பைக் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் வெளியாகி உள்ளன. வரும் ஜூலை 5 ஆம் தேதி அன்றே பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய டிரையம்ப் பைக் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

Bajaj triumph bike

இந்த பைக்கை உலகளவில் அந்நிறுவனம் விற்பனைக்கு எடுத்துச் செல்ல இருக்கின்றது. ஆகையால், முதலில் வரும் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலக வெளியீட்டை செய்ய நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் வைத்தே இந்த சம்பவத்தை அது செய்ய இருக்கின்றது.

இதற்கு பின்னரே இந்தியாவில் அடுத்த மாதம் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியின்கீழ் ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என இரு ரக பைக்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டில் எது முதலில் விற்பனைக்கு வரும் என தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டு பைக்குகளைதான் வரும் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலக அளவில் பஜாஜ்-டிரையம்ப் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Triumph drg t120

பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான புனேவில் உள்ள சக்கன் ஆலையிலேயே டிரையம்ப் நிறுவனத்திற்கான புதிய பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பைக்குகளின் இந்திய வருகை ஜூலை 5 என்பதை தன்னுடைய டீசர் படம் வாயிலாக பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி உறுதிப்படுத்தி இருக்கின்றது. டீசர் படத்தில் பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கைகளின் நிறல் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இத்துடன், குரோமிங் செய்யப்பட்ட ஃப்யூவல் டேங்க் மூடி பயன்படுத்தப்பட்டு இருப்பதும் டீசர் படம் வாயிலாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் டிரையம்ப் பைக்குகளில் இடம் பெற இருக்கின்றன. ஆனால், என்ன மாதிரியான அம்சங்கள் இந்த டூ-வீலர்களில் இடம் பெற இருக்கின்றன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Triumph rocket 3 gt

கடந்த காலங்களில் இந்த பைக்குகள் சோதனையோட்டம் செய்யும்போது கேமிராவின் கண்களில் சிக்கின. இதன் வாயிலாக இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி வரும் பைக்குகளில் டூயல் (ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு) பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர்கள், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க், பின் பக்கத்தில் மோனோஷாக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என எக்கசக்க அம்சங்கள் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுதவிர, வட்ட வடிவ ஹெட்லேம்ப், கருப்பு நிற அலாய் வீல்கள், சற்று குட்டையான விண்ட்ஸ்கிரீன், உயரமான மற்றும் நீளம் குறைவான பின் பக்க இருக்கை, அகலமான ஹேண்டில் பார் உள்ளிட்டவையும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் பைக்குகளில் இடம் பெற இருக்கின்றது. இந்த பைக்குகளில் என்ன மாதிரியான மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி பவர்ஃபுல்லான 400 சிசி சிங்கிள் மோட்டாருடனேயே இந்த பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த பைக்கை ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான விலை விபரம் அறிமுகத்தின்போதே அறிவிக்கப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அளவு மிகக் குறைவான விலையில் டிரையம்பிற்கான பைக்குகளை பஜாஜ் விற்பனைக்குக் களமிறக்கும் எனில், அதன் இந்த செயல், சொந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கே ஆப்பு வைக்கும் வகையில் அமையும் என யூகிக்க முடிகின்றது. இதனால் ஏற்பட இருக்கும் பின் விளைவுகளை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 11:50 [IST]
English summary
Here is the launch date of bajaj triumph s first alliance bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X