2023ஐ மிகவும் ஸ்பெஷலான ஆண்டாக மாற்றிய டாப்5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! இந்த 8மாசத்துல இத்தன ஸ்கூட்டர் அறிமுகமா!

இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு நடப்பு 2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன என கூறலாம். அந்த அளவிற்கு இந்தியாவில் புதுமுக மின்சார வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன, அறிமுகம் செய்யப்பட்ட வண்ணமும் இருக்கினறன.

குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களின் அறிமுகம், போர் காலத்தில் எதிரி நாட்டு வீரர்களின் படையெடுப்பை போல அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இதில், இந்தியாவையே அதகளப்படுத்தும் அறிமுகம் செய்யப்பட்ட டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிந் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

Top 5 electric scooters launched in 2023

ஓலா எஸ்1 எக்ஸ் (OLA S1X): இந்திய மின்சார வாகன உலகின் தலைவனாகவே ஓலா மாறிவிட்டது என கூறலாம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே அண்மையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 எக்ஸ் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இதன் விலை ரூ. 89,999 ஆகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்1 எக்ஸ் 2 kWh, எஸ்1 எக்ஸ் 3 kWh மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் 3 kWh ஆகியவையே அவை ஆகும்.

இதன் ஆரம்ப நிலை தேர்வான எஸ்1 எக்ஸ் 2 kWh, ஓர் முழு சார்ஜில் 91 கிமீ ரேஞ்ஜையும், அதிகபட்சமாக 85 கிமீ வேகத்திலும் பயணிக்கும். அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வான எஸ்1 எக்ஸ் பிளஸ் 3 kWh ஓர் முழு சார்ஜில் 151 கிமீ ரேஞ்ஜையும், மணிக்கு 90 கிமீ வேகத்திலும் பயணிக்கும். இதுதவிர, சிறப்பு வசதிகளையும் மிக ஏராளமாக இந்த இ-ஸ்கூட்டர் தாங்கி இருக்கின்றது.

டிவிஎஸ் எக்ஸ் (TVS X): ஒட்டுமொத்த மின்சார இருசக்கர வாகன உலகையுமே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். இதன் அறிமுகத்தை இந்திய நிறுவனமான டிவிஎஸ் துபாயில் வைத்து நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தனித்துவமான தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களுடன் இதனை டிவிஎஸ் உருவாக்கி இருக்கின்றது. நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரியான் என்கிற கான்செப்ட் மாடலை வெளியீடு செய்தது. இந்த மாடலின் டிசைன் தாத்பரியங்களைப் பயன்படுத்தியே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது உருவாக்கி இருக்கின்றது.

மெல்லிய எல்இடி லைட்டுகள், ஸ்போர்ட்டி மற்றும் கட்டுமஸ்தான தோற்றம் கொண்மட பாடி பேனல்கள், 10அங்குல டிஎஃப்டிஇன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் வழங்கி இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 140கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் தனித்துவமான தோற்றம் மற்றும் ஸ்டைல் ஆகியவையே இந்த வாகனத்தின் அறிமுகத்தை வியந்து பார்க்க வைக்கும் வகையில் அமைந்தது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Simple One Electric Scooter): இந்த ஸ்கூட்டரை சிம்பிள் ஒன் நிறுவனம் அறிமுகம் செய்து நீண்ட நாட்கள் கழித்தே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் வருகை கடந்த மே மாதத்திலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக வேகம் மற்றும் அதிக ரேஞ்ஜ் திறனை வழங்கும் வசதிக் கொண்ட வாகனம் இது என்பதால் இந்தியர்கள் மத்தியில் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இதன் விலை ரூ. 1.45 லட்சம் ஆகும். இதனுடன் 750 வாட் சார்ஜரை சேர்த்து வாங்க வேண்டும் என்றால் அதற்கு ரூ. 1.58 லட்சம் வரை கொடுக்க வேண்டி இருக்கும்.

அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 212 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். மேலும், இதனால் வெறும் 2.77 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய இ-ஸ்கூட்டராகக் காட்சியளிக்கின்றது.

ஏத்தர் 450எஸ் (Ather 450S): நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். இதனை மிக சமீபத்திலேயே இந்தியாவில் ஏத்தர் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்றைய தினமே (உலக மின் வாகன தினம் செப்டம்பர் 9 அன்றே) இதன் டெலிவரி பணிகள் தொடங்கின.

இதன் விலை ரூ. 1.30 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஓர் முழு சார்ஜில் 115 கிமீ வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டருக்கு பிரத்யேகமாக ப்ரோ பேக் எனும் தேர்வை ரூ. 14 ஆயிரம் கட்டணத்தில் வழங்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ரிவர் இன்டீ (River Indie): ரிவர் நிறுவனத்தின் முதல் மற்றும் லேட்டஸ்ட் அறிமுகமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எஸ்யூவி ரக வாகனம் இது என செல்லமாக அழைக்கப்படுகின்றது. மிக பெரிய அளவில் இட வசதியை இது கொண்டிருக்கும் என்பதனாலேயே இவ்வாறு அது அழைக்கப்படுகின்றது.

இதன் உற்பத்தி பணிகளும் மிக சமீபத்திலேயே தொடங்கின. வெகு விரைவில் இதன் டெலிவரி பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.25 லட்சம் ஆகும். மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இந்த தொடங்கி 8 மாதங்கள் மட்டுமே முடிவடைந்திருக்கின்ற நிலையில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அடுத்து வரும் நாட்களில் இதுபோன்று இன்னும் இ-ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, September 10, 2023, 18:18 [IST]
English summary
Here is the list of top 5 electric scooters launched in 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+