ஹோண்டாவின் மலிவு விலை பைக்கில் இவ்ளோ வசதிகளா! ஆச்சரியப்படும் மக்கள்.. ஏழைகளுக்கெனவே கொண்டு வரப்பட்ட பைக்!

இந்தியாவில் இருசக்கர வாகன பிரிவில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, மலிவு விலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருப்பதால் இந்திய இருசக்கர வாகன விரும்பிகள் அதன் பக்கம் திருப்பம் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாக பெட்ரோல் டூ-வீலர்களுக்கு லேசாக மவுசு குறைய ஆரம்பித்து உள்ளது.

இந்த நிலையை சமாளிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் நேற்றைய தினம் ஷைன் 100 புதிய 100 சிசி பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. யாரும் எதிர்பார்த்திராத மிக மிக குறைவான விலை மற்றும் சிறப்பு வசதிகளுடன் இந்த பைக்கை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஹோண்டா ஷைன் 100

அப்படி என்னென்ன வசதிகளை இந்த வாகனத்தில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது என்கிற தகவலையே இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஹோண்டா ஷைன் 100 பைக் பற்றிய அறிய வேண்டிய டாப் ஐந்து தகவல்களை பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா ஷைன் 100 மிகவும் அடக்கமான ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது ஆடம்பரம் இல்லாத ஓர் கவர்ச்சிகரமான டூ-வீலராக இதனை ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இதுவே இந்த பைக்கின் மலிவு விலைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதேபோல் இன்னும் பல வேலைகளை இந்த பைக்கின் குறைவான விலைக்காக ஹோண்டா பார்த்திருக்கின்றது.

ஹோண்டா ஷைன் 100

அந்தவகையில், ஒற்றை துண்டு அமைப்பு கொண்ட இருக்கை, கருப்பு நிற ஹெட்லேம்ப் கௌல் மற்றும் 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், மிகவும் எளிமையான ஐந்து விதமான வண்ண தேர்வுகள் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றது.

சிவப்பு நிற கிராஃபிக்குகள் கொண்ட கருப்பு, நீல நிற கிராஃப்பிக்குடன் கூடிய கருப்பு, தங்க நிற ஹைலைட்டுகள் கொண்ட கருப்பு, பச்சை நிற கோடுகள் கொண்ட கருப்பு மற்றும் சாம்பள் நிறத்துடன் கூடிய கருப்பு ஆகிய நிற தேர்வுகளே இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா ஷைன் 100

எஞ்ஜினை பொருத்தவரை இந்த பைக்கில் 100சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 7.61 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரை ட்யூப்ளர் ஃப்ரேமில் ஹோண்டா பொருத்தி இருக்கின்றது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக இந்த மோட்டாரை ஹோண்டா ஓபிடி 2 விதிகளுக்கு இணங்க உருவாக்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

சிறப்பம்சங்கள், இந்த விஷயத்தில் ஹோண்டா கொஞ்சம் கஞ்சத் தனம் காட்டி இருக்கின்றது. இந்த பைக்கை விலை குறைவானதாக விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற காரணத்தினால் மிகவும் எளிமையான டூ-வீலராக தயாரித்து இருக்கின்றது. ஆகையால் ஆடம்பர மற்றும் பிரீமியம் தர வசதிகளை அதிகளவில் காண முடியவில்லை.

ஹோண்டா ஷைன் 100

அதேவேளையில், ஹாலோஜன் ஹெட்லேம்ப், பல்ப் இன்டிகேட்டர்கள், ஸ்பீடோ மீட்டர் அடங்கிய ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஓடோமீட்டர் மற்றும் ஃப்யூவல் கேஜ் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஆச்சரியளமிக்கும் வகையில் சைடு ஸ்டாண்டு சென்சார் மற்றும் சிபிஎஸ் ஆகியவையும் இந்த மலிவு விலை பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

ரைடிங் அனுபவத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக இந்த பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன் பக்கத்திலும், டூயல் ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து பிரேக்கிங் அம்சமாக டிரம் பிரேக்குகள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐந்து ஸ்போக்குகள் கொண்ட அலீய் வீல்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து விதமான சாலைக்கும் ஏற்ற டயர்களே ஷைன் 100இல் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலே பார்த்த அத்தனை சிறப்பு வசதிகளையும் தாங்கிய வாகனமாகவே ஹோண்டா ஷைன்100 பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், இதற்கு மிக மிக மலிவான விலையாக ரூ.64,900 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அடித்தட்டு மக்களும் வாங்கி பயன்படும் விதமாக இத்தகைய குறைவான விலையில் ஷைன் 100-ஐ ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. டெலிவரி மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பைக் இதுவாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 16, 2023, 8:44 [IST]
English summary
Here is things to know about honda shine 100
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X