ஹீரோ இல்லைனா இப்படி ஒரு தயாரிப்பு ஹார்லி-டேவிட்சனுக்கு கிடைச்சிருக்காது.. எக்ஸ்440 இவ்ளோ சூப்பரான பைக்கா!!

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் இணைவில் தயாரிக்கப்பட்ட முதல் மோட்டார்சைக்கிளே எக்ஸ்440 ஆகும். இதையே நேற்றைய தினம் வெளியீடு செய்தனர். ஹீரோவின் இணைவில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கி இருந்தாலும், அது ஹார்லி டேவிட்சனுக்கான தயாரிப்பாகும். மிக மிக மலிவு விலையில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிமுகத்தைத் தொடர்ந்து பைக்கிற்கான புக்கிங் பணிகளைத் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று மாலை 6 மணிக்குள் புக்கிங்குகள் தொடங்கிவிடும் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட இருக்கின்றன. ஹார்லி-டேவிட்சனின் புகழ்பெற்ற தயாரிப்பான எக்ஸ்ஆர் மாடலை தழுவியே எக்ஸ்440 உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

Harley davidson x 440 running shot

இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் எக்ஸ்440 மோட்டார்சைக்கிள் தாங்கிக் கொண்டு இருக்கின்றது. அவை என்ன? மற்றும் இந்த பைக் பற்றிய அறிய வேண்டிய முக்கிய விபரங்கள் (டாப் 5) தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

விலை மற்றும் வேரியண்டுகள் விபரம்:

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டெனிம், விவிட் மற்றும் எஸ் ஆகியவையே அவை ஆகும். இதில், டெனிமே ஆரம்ப நிலை தேர்வாகும். இதற்கு ரூ. 2.29 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விவிட் தேர்வு இருக்கின்றது.

Harley davidson x 440 front view

அதற்கு ரூ. 2.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது தேர்வு எஸ், இதுவே உயர் நிலை தேர்வாகும். இதற்கு ரூ. 2.69 லட்சம் என்கிற உச்சபட்ச விலை நிர்ணம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். வரிகள் சேர்க்கப்படும்பட்சத்தில் இவற்றின் விலை ரூ. 3 லட்சத்தை நெருங்கிவிடும்.

டிசைன்: சற்று கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட வாகனமாக எக்ஸ்440-யை ஹீரோவும், ஹார்லி-டேவிட்சனும் தயாரித்து இருக்கின்றன. ஃப்யூவல் டேங்க் மற்றும் வால் பகுதி உள்ளிட்டவையே இதற்கு சான்றாக இருக்கின்றன. இதுதவிர இந்த நியோ ரெட்ரோ ரக பைக்கிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக வட்ட வடிவத்திலான உடல்கூறுகள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Harley davidson x 440 headlamp

ஹெட்லைட், இன்டிகேட்டர் மற்றும் டெயில் லைட் என பல வட்ட வடிவத்தில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இத்துடன், ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மஸ்டர்ட் டெனிம் (Mustard Denim), மெட்டாலிக் டார்க் சில்வர் (Metallic Dark Silver), மெட்டாலிக் திக் சில்வர் (Metallic Thick Silver) மற்றும் மேட் பிளாக் (Matte Black) ஆகியவையே அவை ஆகும்.

மோட்டார் விபரம்: ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 38 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

Harley davidson x 440 exhaust

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம்: ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சூப்பரான கருவிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலையை சமாளிக்க தரமான சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

43 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், டூயல் கேர்ட்ரிட்ஜ் டேம்பிங் சிஸ்டம் மற்றும் ட்வின் கேஸ்-ஃபில்டு ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் வழங்கி இருக்கின்றனர். இவற்றுடன் மிக சிறந்த பிரேக்கிங் திறனுக்காக பைக்கின் முன் பக்க மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க்குகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

முன் பக்க வீலில் 320 மிமீ அளவுள்ள டிஸ்க்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பின் பக்கத்தில் என்ன மாதிரியான அளவுள்ள டிஸ்க் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது தெளிவாக கூறப்படவில்லை. இதுகுறித்தி விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிறப்பம்சங்கள்: ஹார்லிட் டேவிட்சனின் மலிவு விலை பைக்காக எக்ஸ் 440 விற்பனைக்கு வந்திருக்கின்றது. இருப்பினும், இதில் சிறப்பம்சங்களுக்கு சற்றும் குறைச்சல் இல்லை. குறிப்பாக, ஹெட்லைட், இன்டிகேட்டர், டெயில் லைட் என அனைத்தும் எல்இடி தரத்திலேயே காட்சியளிக்கின்றன. இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட் சென்சாருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், ப்ளூடூத் இணைப்பு மற்றும் செல்போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சத்தின் வாயிலாக செல்போனை பைக்குடன் இணைக்கும் பட்சத்தில் செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பைக்கில் இருக்கும் திரையிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மிகப் பெரிய வெற்றி தயாரிப்பாக ஹார்லி-டேவிட்சனின் எக்ஸ்440 அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இது மிகவும் அழகிய மோட்டார்சைக்கிளாக தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 4, 2023, 17:15 [IST]
English summary
Here is top 5 things to know about harley davidson x440
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X