இத மட்டும் செஞ்சு பாருங்க.. நீங்க எதிர்பாத்ததவிட அதிக விலைக்கு உங்க டூ-வீலர விற்க முடியும்!..
உங்க டூ-வீலரை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் (பயன்படுத்தி வாகனங்கள் சந்தையில்) விற்கும் பிளானில் இருக்கிறீர்களா?, அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். நம்மில் பலர் இருசக்கர வாகனத்தை விற்பனைச் செய்யும்போது சில தவறுகளை செய்துவிடுகின்றோம்.
இதன் விளைவாக குறைவான விலைக்கு போகுதல் அல்லது நீண்ட நாட்களுக்கு விற்கப்படாமலேயே இருத்தல் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்த்து நல்ல விலைக்கு போக செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

முதலில் இருசக்கர வாகனத்திற்கு நியாயமான விலை நிர்ணயிக்கவும்
நியாயமான விலை உங்கள் இருசக்கர வாகனத்தை ஏற்படுத்தச் செய்யலாம். உங்கள் வாகனத்தை வாங்க வருபவர் இது சரியான விலை, இன்னும் ஒரு ஆயிரத்தைக் கூட தாராளமாக கொடுக்கலாம் என நினைக்கும் அளவிற்கு மிகவும் சரியான விலையை நாம் விற்க நினைக்கும் வாகனத்திற்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் வாங்குபவர்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, ஓர் நபர் இவ்வளவு சூப்பரான வாகனத்தை எதற்காக விட வேண்டும். கூடுதலாக ஆயிரம் கொடுத்து வாங்கிடலாம் என நினைக்க செய்யும்.
இந்த அளவிற்கு மிகவும் நியாயமான விலையை நிர்ணயித்தல் வேண்டும். சந்தையில் நாம் விற்க நினைக்கும் வாகனத்திற்கு என்ன மாதிரியான மதிப்பு நிலவுகின்றது, அது எப்போது தயாரிக்கப்பட்டது, மாடல் மற்றும் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளைத் தாங்கி நிற்கின்றது என இவற்றைப் பார்த்து அதற்கேற்ப விலையை நிர்ணயம் செய்வது மிகவும் நல்லது. இத்துடன், உங்களுடைய வாகனத்தைப் போலவே வேறொரு நபர் இதற்கு முன்னதாக விற்பனைச் செய்திருந்தால், அது எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டது என்பதை அறிந்து அதற்கேற்ப உங்களுடைய வாகனத்திற்கும் விலை தீர்மானிக்கலாம்.

குறைகளை நீங்களே மதிப்பிட்டு சொல்லிவிடுவது நல்லது
நாம் விற்க இருக்கும் டூ-வீலரில் என்ன மாதிரியான குறைபாடுகள் மற்றும் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை நாமே பட்டியலிட்டு போட்டு தெரியப்படுத்திவிடுவது மிக மிக நல்லது. ஏனெனில், இருசக்கர வாகனத்தை வாங்க வருபவர்கள் கண்டிப்பாக அதன் தரத்தை ஆராய்ந்து பார்த்தே வாங்க நினைப்பார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும்போது அந்த வாகனத்தில் ஏதேனும் பிரச்னையை அவர்களாக தெரிந்துக் கொண்டால், அதை வைத்து, அவ்வாகனத்தின் விலையைக் குறைப்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
சில நேரங்களில் அவர்கள் வாங்கு எண்ணத்தை தவிர்க்கவும் செய்யலாம். எனவே, முன் கூட்டியே பிரச்னைகளைப் பட்டியலிட்டுக் காட்டிவிடுவதால் குழப்பங்கள் மற்றும் பேரங்களை நம்மால் தவிர்த்துவிட முடியும். சில தனியார் நிறுவனங்கள் வாகனத்தின் தரத்தை தனி தனியாக பட்டியலிட்டு அதற்கான சான்றுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதுமாதிரியான ஓர் நிறுவனத்தைத் தொடர்புக் கொண்டு உங்கள் வாகனத்தின் தரத்தை சான்றாக பெறும்பட்சத்தில் அதை முன் வைத்து சிறந்த ஆதாயத்தை தேடிக் கொள்ள முடியும்.

அதேவேளையில், நீங்கள் வாகனத்தை விற்க பிளான் போட்டுவிட்டீர்கள் என்றால் கணிசமான தொகையை செலவிட்டு உங்கள் வாகனத்தை லேசாக புணரமைப்பு செய்துவிடுவது இன்னும் நல்ல பலனை அளிக்கும். ஓர் சின்ன கீரலைக் காட்டி வாங்க வருபவர்கள் ஆயிரக் கணக்கில் தொகையைக் குறைக்க முயற்சிக்கலாம். இதனைத் தவிர்க்க அதை சரி செய்ய முயற்சிப்பதே நல்ல ஐடியா ஆகும். சின்ன வாட்டர் வாஷ் விடுவது கூடுதல் நல்லது. இதனால் வாகனம் பளபளவென மாறிவிடும். மேலும், புதிதுபோல் தென்படும். நமக்கே நம்முடைய வாகனத்தின் மதிப்பு கூடியிருப்பதை நம்மால் உணர முடியும். இதன் வாயிலாக சில நேரங்களில் நாம் எதிர்பார்த்ததைவிட நல்ல விலைக்கு போகவும் வாய்ப்பு இருக்கின்றது.
ஆன்லைனில் பட்டியலிடுங்க
இன்றைய கால இளைஞர்கள் பலர் தங்களுக்கான வாகனங்களை இணையம் வாயிலாகவே தேடி வருகின்றனர். ஆகையால், இணையம் ஓர் மிக சிறந்த வழியாக வாகனங்களை விற்பனைச் செய்யும் விஷயத்திற்கு இருக்கின்றது. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை நம்மால் கவர முடியும். தற்போது பேஸ்புக் போன்ற முன்னணி தளங்கள் மார்க்கெட் பிளேஸ் எனும் பிரத்யேக பக்கத்தை உருவாக்கி, அதன் வாயிலாக பயனர்கள் வாகனம் போன்ற அனைத்து பொருட்களையும் விற்பனைச் செய்து கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதன் வாயிலாக உள்ளூர் வாசிகளை மட்டுமின்றி வெளியூர் நபர்களையும் கவர முடியும். மேலும், ஒருவேளை போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது எனில் நம்முடைய பொருளுக்கான விலையையும் நாம் உயர்த்த செய்யலாம். இதன் வாயிலாக நினைத்ததைவிட அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

பொது இடத்தில் விற்கலாம்
சில செகண்டு ஹேண்ட் வாகன விற்பனையாளர்கள் தங்களுடைய தளத்தை பயன்படுத்தி வாகனங்களை விற்பனைச் செய்து கொள்ள அனுமதிக்கின்றனர். கமிஷன் அடிப்படையில் இதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. தொடர்ந்து, உங்களுடைய அரிய வகை வாகனம் எனில் ஏலத்தின் வாயிலாக விற்க முற்படலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில் நாம் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.
சந்தைப்படுத்தலாம்
வாகனங்களை விற்பனைச் செய்ய சந்தைப்படுத்தலாம். நீங்கள் மிக சிறந்த பலனை அடைய விரும்புகிறீர்கள் என்றால் இதை செய்வது நல்லது. சில மார்க்கெட்டிங் அமைப்புகள் இணையம் மற்றும் பிற தளங்கள் வாயிலாக வாகனம் விற்பனைக்கு வந்திருப்பதை விளம்பரப்படுத்தும். இதன் வாயிலாக அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். குறிப்பாக, நல்ல முடிவுகளை பெற முடியும். ஆனால், இதற்கு சற்று அதிக தொகையை நாம் செலவிட வேண்டி இருக்கும். இதற்கான பலன் இறுதியில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









