மீசையை முறுக்கி விட்ட ஹீரோ! போட்டி நிறுவனங்களுக்கு தண்ணி காட்ட போறாங்க! இந்த மாஸ்டர் பிளானை யாரும் எதிர்பாக்கல

இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric). இந்நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு, 1,00,123 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனை என்பது சாதாரணமான விஷயம் இல்லை.

இமாலய சாதனை

அத்துடன் இதுதான் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகப்பெரிய வருடாந்திர விற்பனை எண்ணிக்கை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஒரே ஆண்டில், இவ்வளவு அதிகமான எலெக்ட்ரிக் டூவீலர்களை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்தது கிடையாது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இமாலய சாதனையை படைத்துள்ளது.

மீசையை முறுக்கி விட்ட ஹீரோ! போட்டி நிறுவனங்களுக்கு தண்ணி காட்ட போறாங்க! இந்த மாஸ்டர் பிளானை யாரும் எதிர்பாக்கல

7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் 7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அவை போட்டான் எல்பி (Photon LP), ஆப்டிமா சிஎக்ஸ் (Optima CX), என்ஒய்எக்ஸ் ஹெச்எஸ்500 இஆர் (NYX HS500ER), என்ஒய்எக்ஸ் இ5 (NYX E5), அட்ரியா எல்எக்ஸ் (Atria LX) மற்றும் எடி (Eddy) ஆகும். இதில், ஆப்டிமா சிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, சிங்கிள் மற்றும் ட்யூயல் பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

6 லட்சம் வாடிக்கையாளர்கள்

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கியதில் இருந்து கிடைத்த ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகும். ஒரு எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 6 லட்சம் வாடிக்கையாளர்களை வைத்திருப்பதும் மிகப்பெரிய விஷயம்தான் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

மீசையை முறுக்கி விட்ட ஹீரோ! போட்டி நிறுவனங்களுக்கு தண்ணி காட்ட போறாங்க! இந்த மாஸ்டர் பிளானை யாரும் எதிர்பாக்கல

உற்பத்தி தொழிற்சாலைகள்

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில், தொழிற்சாலை ஒன்றை அமைத்தது. இங்கு 1 ஆண்டுக்கு 1 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்ய முடியும். இதை தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் பிதாம்பூர் பகுதியில் அமைந்துள்ள மஹிந்திரா குழுமத்தின் தொழிற்சாலையிலும், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டன.

புதிய தொழிற்சாலை

ஆனால் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கும் பணிகளை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டது. ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகியவை இதில் கையெழுத்திட்டுள்ளன.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலையின் வருடாந்திர உற்பத்தி திறன் 2 மில்லியன் ஆகும். அதாவது இங்கு ஒரு வருடத்திற்கு 20 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்ய முடியும். நடப்பு 2023ம் ஆண்டின் இறுதியில் இந்த தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வர்த்தக ரீதியிலான உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்ட பின், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் தங்களது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு டிமாண்ட் இன்னும் அதிகரிக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கணித்துள்ளது. எனவேதான் ராஜஸ்தான் மாநிலத்தில், வருடத்திற்கு 20 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்கள் உற்பத்தி திறனுடன், பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலை அதிநவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 4, 2023, 18:45 [IST]
English summary
Hero electric achieves highest ever annual sales in 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+